இலங்கையில் இன்று அனைவரும் உச்சரிக்கும் ஒற்றைச் சொல் மின்சாரம். எமது ஊருக்கு மின்சாரம் வருமா என ஏங்கித் தவித்த காலம் போய், இன்று மின்வெட்டு இருக்கா இல்லையா என்ற விவாதம் வீடுகளில் ஒலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சொல்லாமல் கொள்ளாமல் மின்சாரம் தடைப்பட்டு பின்னர் அதற்கான காரணத்தை அரசாங்கம் அறிவிப்பதும் வாடிக்கையாகி விட்டது. மின் விநியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் மின் துண்டிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற செய்தியைப் படித்து நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கிடையுல் மீண்டும் மின்சாரம் துன்டிக்கப்பட்டது.
இலங்கையை நான்கு வலயங்களாகப்
பிரித்து இரண்டு மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வரை காலமும் ஒரு மணித்தியாலமாக இருந்த
மின் துண்டிப்பு மேலும் ஒரு மணித்தியாலம்
அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பலர்
ஒரு மணிநேர மின்வெட்டால் பாதிக்கப்படுகிரார்கள். மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது
என்ற நிலையை பலர் தமக்குள் ஏற்படுத்தியுள்ளனர். மின்சாரப் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளது.
நகரத்தில் உள வீடுகளில் இருந்த ஏசி வசதி இப்போ ஊருக்குள்ளும் வந்துள்ளது.
இந்த நிலையில் ஒவ்வொரு நாளும்
சுமார் நான்கு மணி நேர மின்சாரம் துண்டிக்கும் நிலை ஏற்படலாமென எரிசக்தி அமைச்சர் உதயகம்பன்வில
தெரிவித்தது உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்துக்குள் பெரியளவில் கடன் பெற முடியாத
நிலை ஏற்பட்டால் நான்கு மணி நேர மின்சாரம்
துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர்
எதிர்வு கூறியுள்ளார்.மின்சாரப் பாவனை அபரிமிதமாக அதிகரித்துள்ளது. ஆனால், மின்
உற்பத்தியி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது
தற்போது மொத்த மின் உற்பத்தியில்
20% நீர் மின் நிலையங்கள் உற்பத்தி செய்கின்றன. "சில மாதங்களுக்கு முன்பு, நீர்
மின் உற்பத்தி 70% ஆக இருந்தது. பின்னர் 60% ஆகவும், பின்னர் 50% ஆகவும், தற்போது
37% ஆகவும் உள்ளது. சில நாட்களுக்கு பின்பு மின் உற்பத்தி இன்னும் 5% வரை குறையும்
சாத்தியம் உள்ளது . சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உலை எண்ணெய் பற்றாக்குறையால்
தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளதுகுறைந்த மழையினால் நீர்மின் உற்பத்தியும் சவாலாக
உள்ளது.ரன்தெனிகல நீர்த்தேக்கம் ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொத்மலைக்கும்
கடந்த வாரம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூரணமான மின்சாரம் வழங்குவதில்
தடங்கல் ஏற்பட்டுள்ளது.
சுமார் 20% மின்சாரம் நீர்மின்சாரத்திலிருந்து
உற்பத்தி செய்யப்படுகிறது மற்றும் காற்றாலை மூலம் சுமார் 1500 மெகாவாட் மின்சாரம் பெறுகிறோம்.
எமக்கு நாளாந்தம் 2800௩000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகின்ற போதிலும் தற்போது
1300 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி
22) முதல் நோரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3வது அலகு மீண்டும் இயங்கவிருந்த போதிலும்,
அது ஜனவரி 28 ஆம் திகதியே மீண்டும் செயற்படும் என இலங்கை மின்சார சபை அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே 100 மெகாவாட் (மெகாவாட்) திறன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சப்புகஸ்கந்த எண்ணெய்
சுத்திகரிப்பு நிலையம் உலை எண்ணெய் பற்றாக்குறையால் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது.
தேசிய மின்வாரியத்திற்கு 60 மெகாவாட் திறனை வழங்கிய பேரிகையில் பொருத்தப்பட்ட மின்
உற்பத்தி நிலையம் திங்கள்கிழமை (ஜனவரி 24) முதல் செயல்படுவதை நிறுத்தியது. மேலும்,
களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மேலும் நான்கு நாட்களுக்கு இயங்க முடியும். குறைந்த
மழைவீழ்ச்சியினால் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் வரை இலங்கையில் போதிய மழை பெய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டரால் ஏற்பட்ட விபத்துகள் காரணமாக மாற்று வழியை மக்கள்
நாடினர்கள். மின்சாரத்துக்கான மாற்று வழிக்கு
மக்கள் இன்னமும் தயாராக இல்லை.நுரைச்சோலை அனல்மின் நிலையம் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில்
இருந்து தொடர்ச்சியான செயலிழப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. இவ்வாறான ஒரு செயலிழப்பு ஏற்படும்
போது பொறியியலாளர்கள் அது குளிர்விக்க சுமார் 20 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. வறட்சி ஏற்படும் காலங்களில் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறையும் போது நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும்
2016 ஆம் ஆண்டு சம்பூர் மின்
உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டம் வெற்றியடையவில்லை என்று சிஏபி தொழிற்சங்க
தலைவர் ரஞ்சன் ஜெயலால் கருத்து தெரிவித்தார். "நொரோச்சோலை அன ஜயலால் மேலும் தெரிவித்தார்.
“மற்றொரு மாற்று, குறிப்பாக உலர் வலயத்தில் அமைந்துள்ள வீடுகளில் கூரைகளில் சோலார்
பேனல்களை நிறுவுவது. இவர்களுக்கு கடன் வழங்கலாம். சூரிய ஒளி மின்சாரத்தை இரவில் சேமிக்கும்
தொழில்நுட்பம் இதுவரை நம்மிடம் இல்லை. பகல் நேரத்தில் சூரிய சக்தியை உபயோகிக்கலாம்,
இரவில் நீர் மின்சாரத்தை பயன்படுத்தலாம்.
2030 ஆம் ஆண்டளவில் இலங்கை ஆற்றல் தன்னிறைவு பெற்ற
நாடாக மாறுவதை இலக்காகக் கொண்டால் அத்தகைய திட்டங்கள் நடைமுறையில் இருக்க வேண்டும்.
1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திர வர்த்தக வலயங்கள் தோன்றிய பின்னர் மின்சாரத்திற்கான
தேவை பன்மடங்கு அதிகரித்தது. மாற்று வழிகளுக்கு செல்ல ஏராளமான வாய்ப்புகள் இருந்தபோதிலும்,
நாங்கள் அவற்றை புறக்கணித்தோம்.
"நாம் இப்போது மாற்று
வழிகளுக்கு செல்லவில்லை என்றால், தொழிற்சாலைகள் மின்சாரம் இல்லாமல் போகும், மேலும்
அவை செயல்பாடுகளை நிறுத்த வேண்டியிருக்கும். எரிபொருள் மின்சாரத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படாமல்,
போக்குவரத்து மற்றும் பிற துறைகளுக்கு
இந்தியா போன்ற நாடுகள் பெரிய
அளவில் எண்ணெய் சுத்திகரிப்பு செய்கின்றன. இப்போது திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணை
அவர்களுக்கு எழுதப்பட்டதால், சபுகஸ்கந்த மற்றும் களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையங்களுக்கு
எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் இந்தியாவின் உதவியை நாடலாம். அப்படியானால் இந்தியா
நமக்கு அதிக விலையில் மின்சாரம் வழங்கும், குறைந்த விலையில் விநியோகிக்க வேண்டும்,
மேலும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
உலகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை
நோக்கி நகர்ந்தாலும், இலங்கையிடம் இன்னும் சரியான திட்டம் இல்லை என எரிசக்தி நிபுணர்கள்
கருத்து தெரிவிக்கின்றனர்.
உலகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை
நோக்கி நகர்ந்தாலும், இலங்கையிடம் இன்னும் சரியான திட்டம் இல்லை என எரிசக்தி நிபுணர்கள்
கருத்து தெரிவிக்கின்றனர். நிலக்கரி மின்சக்திக்குப்
பதிலாகப் பயன்படுத்தக்கூடிய மாற்றுத் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை
இலங்கை முழுமையாகச் சார்ந்திருக்க முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும்.
2030 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்கவை
மூலம் 70% உற்பத்தி செய்து 2050 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக கார்பன் நியூட்ரல் ஆக வேண்டும்
என்பதே அரசின் கொள்கை.
தலைமுறையின் இந்த மாற்று வழிகள் உருவாக்கப்படும் விகிதம் மிகவும் மெதுவாக உள்ளது. அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை அடைய போர்க்கால வழியில் பசுமை உற்பத்திக்கான இந்த மாற்று வழிகளை அதிகரிக்க பயனுள்ள வழிகளை நாம் எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment