Thursday, January 6, 2022

என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்


 

ஐபிஎல் 2022 தொடருக்காக இரண்டு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன, ஒன்று அகமதாபாத், மற்றொன்று லக்னோ. இதில் லக்னோ அணி தன் சமூக ஊடகக் கணக்கைத் தொடங்கி முதலில் அணிக்கு ஒரு நல்ல பெயராக தேர்வு செய்து கொடுங்கள் என்று ரசிகர்களிடமே கோரிக்கை வைத்துள்ளது. 

ஸிம்பாப்வே முன்னாள் கப்டனும் இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட‌ ஆலோசகருமான அண்டி பிளவர் லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கவுதம் கம்பீர் அணியின் அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் மெகா ஏலத்துக்கு முன்பாக மூன்று வீரர்களை முதலிலேயே ஏலம் எடுக்கும் பேச்சு வார்த்தையில் உள்ளது. 

ஆர்பி- சஞ்சிவ் கோயெங்கா குழுமமான லக்னோ அணி ரூ.7,909 கோடிக்கு லக்னோ அணிக்காக பிசிசிஐ-க்கு கொடுத்துள்ளது. அடிப்படை விலையை ரூ.2000 கோடியாக நிர்ணயித்தது பிசிசிஐ. இவர்கள்தான் 2016-17-ல் புனே அணியை வாங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் என்று பெயர் இருந்தது. டோனி தலைமையில் இறுதிக்குள் நுழைந்தது ஆனால் மும்பை இந்தியன்ஸிடம் தோல்வி தழுவியது. 

இந்நிலையில் லக்னோ அணிக்கு அணி உரிமையாளர்கள் இன்னமும் பொருத்தமான பெயரை தேர்வு செய்யவில்லை. தன் வருகையை சமூக ஊடகத்தில் அறிவித்த லக்னோ அணி இப்போது அணிக்கு பொருத்தமான பேரை ரசிகர்களே தேர்வு செய்து தருமாறு கோரியுள்ளது. நல்ல பெயரைத் தேர்வு செய்து அதையே அணிக்கு வைக்கவிருப்பதாகவும் ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளது லக்னோ. 

லக்னோ ஸ்டால்வார்ட்ஸ். லக்னோ கார்டியன்ஸ், லக்னோ லயன்ஸ் உள்ளிட்ட சில பெயர்கள் இதுவரை ரசிகர்களிடமிருந்து வந்துள்ளன, மேலும் வந்து கொண்டும் இருக்கின்றன.

No comments: