சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கான நிரம்பிய சுற்றுப்பயணத்தின் கடைசி இடமாக இலங்கை இருந்தது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ
செஜ்
கொங் கடந்த டிசம்பரில் யாழ்ப்பாணத்துக்கு
மேற்கொண்ட சூறாவளிச் சுற்றுப்
பயண அதிர்வலைகள் அடங்கு
முன்பே சீன வெளிவிவகார அமைச்சர்
இலங்கைகு
வரப்போகிறார்
என்ற
செய்தியால்
அரசியல்
அரங்கு
சுறுசுறுப்படைந்தது.
இலங்கையின் உள்நாட்டு
அரசியல்
சதிராடிக்கொண்டிருக்கிறது.
அமைச்சரவைக்குள்
கருத்து
வேற்றுமை,
ஆட்சியைக் கைப்பற்றப் போவதாக
எதிரணிகள்
முழக்கம்,
தமிழ்க்
கட்சித்
தலைவர்கள்
இந்தியப்
பிரதமருக்கு
எழுதிய
கடிதம்,
பொருளாதாரா
சரிவு,
அத்தியாவசியப்
பொருட்களின்
விலை
உயர்வு,
தட்டுப்பாடு என்பனவற்றால் மக்கள்
அல்லல்படுகிறார்கள். இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில்
சீன
வெளிவிவகார
அமைச்சரில்
இலங்கை
விஜயம்
நடைபெற்றது.
பருத்தித்துறைக்குச்
சென்ற
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ
செஜ்
, இங்கிருந்து
இந்தியா
எவ்வளவு
தூரம்
எனக்
கேட்டார்.
மன்னாருக்குச்
சென்ற அவர் இந்தியஎலைக்கு மிக
நெருக்கமான
இராமர்
பால
மணல்
மேட்டுக்குச்
சென்றார். சீன வெளிவிவகார அமைச்சரும்
தன்
பங்குக்கு
"யாழ்ப்பாணம்
இலங்கையின்
வடக்குப்
பக்கத்தில்
உள்ளது.இன்னொரு
நாட்டின்
தெற்கில்
அல்ல"
என
மறைமுக
எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
இலங்கை, சீனா ஆகிய
நாடுகளுக்கு
இடையிலான
இராஜதந்திர
உறவு
தொடங்கி,
65 ஆண்டுகள்
நிறைவடைவதை
கொண்டாடும்
வகையில்,
சீன
வெளிவிவகார
அமைச்சரின்
ஒரு
நாள் விஜயமாக இங்கு
வந்தார்.
சோவியத் ரஷ்யா,ஜப்பான், இந்தியா
ஆகிய
நாடுகளுடன் நெருக்கமாக இருந்த
இலங்கை
இப்போது
சீனாவை
நேசிக்கும்
நாடாக மாறிவிட்டது. நட்பு
நாடு
என இரண்டு நாட்டுத் தலைவர்களும்
முகமன்
கூறி
உரையாடினாலும் தேவையான நேரங்களில்
இலங்கையின்
தலையில்
குட்டுவதற்கு
சீன தயங்கியதில்லை.
இலங்கைக்கு அதிகளவான
கடன்
வழங்கிய
சீனா பல்வேறு உள்கட்டமைப்பு
திட்டங்களை
செயல்படுத்தி
வருகிறது.
கடந்த
சில
மாதங்களாக
இரு
நாடுகளுக்கும்
இடையே
மோதல்
ஏற்பட்டுள்ளது.இலங்கையில்
விவசாய
பணிகளில்
இரசாயன
உரங்களுக்கு
பதிலாக
முழுதும்இயற்கை
உரங்களை
பயன்படுத்த
முடிவு
செய்யப்பட்டது.அதைப்
பயன்படுத்தி
இயற்கை
உரங்களை
சீனா
ஏற்றுமதி
செய்தது.
தரமில்லாததால்
அது
நிராகரிக்கப்பட்டது. சீன கப்பல் திருப்பி
அனுப்பப்பட்டது.இதனால்
கோபமடைந்த
சீனா இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன் எதிரொலியாக இலங்கை
மத்திய
வங்கியை
கறுப்புப்
பட்டியலில்
சேர்த்தது
சீனா.
இந்தப்
பிரச்சினையைத்
தீர்க்க
பல
சுற்றுப்
பேச்சு
வார்த்தை
நடத்தப்பட்டது.
இறகுமதி
செய்யப்படாத
உரத்துகுக்
பணம்
கொடுக்கப்பட்டது.
இது
இலங்கைகு
அரசியல்
தோல்வியாகும்.
இந்து சமுத்திரப்
பிராந்தியத்தில்
உள்ள
சிறிய
நாடுகளைத்
தனது
கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான அடித்
தளத்தை
சீன
வெளிவிவகார
அமைச்சர்
இட்டுள்ளார்.இந்தியப்
பருங்கடல்
தீவு
நாடுகளுக்கிடையில்
பொது
வளர்ச்சியை
ஊக்குவிக்கும் அமைப்பொன்றை உருவாக்க
இலங்கை
அரசிடம்
சீனா
யோசனை
ஒன்றை
முன்வைத்துள்ளது.
இந்து சமுத்திரப்
பிராந்தியம்
தனது
கட்டுப்பாட்டில்
இருக்க
வேன்டும்
என இந்தியா விரும்புகிறது.இந்ஹியப்
பெருங்கடலில்
உள்ள
சிரிய
நாடுகளை
இந்தியாவுக்கு
எதிராக
அணி
திரட்டும் மரைமுகத் திட்டமாக
இது
முன்
மொழியப்பட்டுள்ளது.
இலங்கையைச்
சிக்க
வைக்கும்
சீனாவின் வலையாகவே இந்தத்
திட்டம்
நோக்கப்படுகிறது.
சீன ,இலங்கை
உரவில்
மூன்றாம்
தரப்பு
தலையிடக்
கூடாது
எனவும் வாங் யீ தெரிவித்துள்ளார்.
அந்த
மூன்றாம்
தரப்பு
இந்தியாதான்
என்பதை அனைவரும் அறிவர். இலங்கையின் வட
பகுதியில்
இருக்கும் யாழ்ப்பாணம் இன்னொரு
நாட்டின்
தென்
பகுதியில்
இல்லை
எனச்
சொல்வதன்
அர்த்தம்
ஒன்றும்
இரகசியமானதல்ல.
இலங்கைத்
தமிழ்
மக்கள் இந்தியாவை மலைபோல்
நம்பி
உள்ளார்கள்.
இந்தியா
அவர்களை
கடைக்கண்ணால்
கூட
பார்ப்பதில்லை.
தமிழ்
மக்களின்
மனதை
வென்றால்
அவர்கள் இந்தியாவை வெறுப்பார்கள்
என
சீனா
நம்புகிறது.
ஐ.நாவில் இலங்கையைக் காப்பாற்றும்
நாடு
சீனாதான்
ஆகையால் சீனாவின் எண்ணம்
தவறானது.
இலங்கைத்
தமிழர்களுக்கு
இந்தியா
பல உதவிகளைச் செய்தது.
ஆனால்,
இறுதி
யுத்தத்தில்
போரைத்
தவிப்பதற்கு
இந்தியா
முன்
வரவில்லை
என்ற
கோபம்
இலங்கைத்
தமிழர்களுக்கு
உண்டு.
இருந்த
போதிலும்
இந்தியா
தமக்கு
உதவும்
என்ற
நம்பிக்கையில் இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். இலங்கை
அரசாங்கத்தின்கூட்டாளியான
சீனாவை
நம்புவதற்கு
அவர்கள்
தயாராக
இல்லை.
சீனா,மாவோ,
சீன
கம்யூனிஸ்ட்
போன்ற
அனைத்து
வரலாறும்
அனைத்தும்
இலங்கைத்
தமிழர்களுக்குத்
தெரியததல்ல. க்ம்யூனிஸ்ட் எனும்
போர்வையில்
சீனா
நடத்தும்
ஜனநாயக
நாடகம்
தமிழ்
அரங்கில்
எடுபடாது.
யாழ்பாணத்துக்கு உதவி
செய்யும்
நோக்கில்
இந்தியாவுக்கு
நெருக்கடி
கொடுக்க சீனா முயற்சிக்கிறது. யாழ்பாணத்தில்
இருந்து
இந்தியாவுக்கு
சீனாவிடுக்கும்
எச்சரிக்கைக்கு
இலங்கை
அரசாங்கம்
கருத்தெதுவும்
தெரிவிக்கவில்லை. உலக அரசியல் அரங்கில் சர்ச்சைகள் எதிலும்
சிக்காத
இலங்கை
இப்போது
சீனாவின்
பக்கம் சரியத்தொடங்கி விட்டதோஎன்ற
எண்ணம்
தோன்றியுள்ளது.
இலங்கையில்
நடந்த
இறுதி
யுத்தத்தை
முடிவுக்குக்கொண்டுவர
அனைத்து
நாடுகளும்
உதவி
செய்தன.
இந்தியாவைத்
தன்பக்கம்
இழுப்பதற்காக
சீனாவையும்,
பாகிஸ்தானையும்
இலங்கை
முன்னிறுத்தியது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட
இலங்கைக்கு பொருளாதார உதவிகளை
சீனா
வழங்கியது. சீனாவிடம் இருந்து
அதிகளவான
கடன்
வாங்கிய
இலங்கை
வட்டி
கட்ட
முடியாமல்
தடுமாறுகிறது.அடகு
வித
பணமு,
சொத்தும்
மீள
முடியாது
மாண்டு
போவதைப்போல
கொடுத்த
கடனுக்கு
ஈடாக
அந்த
நாட்டுகளின்
பொருளாதார
வளங்களை சீனா கைப்பற்றிவிடும். அதன்
பொறியில்
இருந்து மீள்வது கடினம்.
இலங்கையும்
அப்படியான
ஒரு
நிலையை
நோக்கியே செல்கிறது.
சீனாவுக்கும் இலங்கைக்கும்
இடையிலான
நட்புறவில்
மூன்றாவது
நாடு
தலையிடக்கூடாது
என சீன வெளிநாட்டமைச்சர் தெரிவித்தது
இந்தியாவுக்கான
எச்சரிக்கையே. வடக்குத் தீவுகளில் சீனா கால் பதிக்க
முயன்றபோது
இந்தியாவின்
அழுத்தம்
இருந்ததால்
அந்தச்
சம்பவம்
நடைபெறவில்லை.
அதனை
மனதில்
வைத்தே மூன்றாவது நாடு
எனும்
சொற்பதம்
பிரயோகிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு அமெரிக்கா பக்க பலமாக இருக்கிறது. இந்திய சீன எல்லைப் பிரச்சினைஅயை அமெரிக்க கூர்ந்து கவனிக்கிறது. சிறிய நாடுகளை சீனா மிரட்டக்கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீன வெளிநாட்டமைச்சர் இலங்கையில் நிற்கும் போது இதனை அமெரிக்கா இப்படிச் சொல்லியுள்ளது. வல்லரசுகளின் பனிப்போருக்குள் தெரிந்தோ தெரியாமலோ இலங்கை சிக்கி விட்டது.
No comments:
Post a Comment