கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் கம்பன் தந்த அற்புதமான கவிவரி. கடன் வாங்கியவன் எப்படி துயருறுவான் என்பதைச் சொல்லும் அற்புதமான வரி அது. உலகில் உள்ள பல நாடுகள் கூச்சம் எதுவும் இல்லாமல் கடன் வாங்குகின்றன. வாங்கிய கடனைக் கட்டுவதற்கு வழி தெரியாது வட்டியைக் கட்டுவதற்கு இன்னொரு தரப்பிடம் இருந்து கடன் வாங்குகின்றன. கடன் சுமை அனைத்தும் மக்களின் தலையில் சுமத்தப்பட்டிருக்கின்றன.
யுத்தத்தால் சீரழிந்த இலங்கையைக் கட்டி எழுப்புவதற்கு உலக நடுகள் முன்வந்தன
சீனவும்,இந்தியாவும் போட்டி போட்டி உதவி செய்தன. யுத்தம் முடிவுற்றதால் அபிவிருத்தியில்
கவனம் செலுத்தப்பட்டது. நாடு தன்னிறைவு பெறும் என எதிர் பார்த்திருந்த வேளையில் கடன்
சுமை மக்கலின் தலையில் இடியாக இறங்கியது. கடன் சுமை என்ற அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கிடையில்
அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடென
அதிகரித்தது.
விலை உயர்வை சமாளிக்கலாமா என சிந்தித்துக்கொண்டிருக்கையில் பொருட்களுக்குத்
தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்படி ஒரு இக்கட்டான நிலை வரும் என அப்பாவி மக்கள் எதிர்பார்க்கவில்லை.
மொத்தத் தேசிய உற்பத்தி -
கடன் விகிதம் என்பது 86% ஆக உள்ளது., அடுத்த ஆண்டில் இது 100% ஆக அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள்
அதிகளவில் காணப்படுகின்றன. இலங்கையின், உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக,
அரசாங்கம் பெருமளவு நிதியை கடனாகப் பெற்றிருந்தது. ஆனாலும், முதலீடுகளை ஊக்குவிக்க
முடியாமல் போனதுடன், ஏற்றுமதிக்கான கேள்விகள் எதிர்பார்த்ததுபோல கிடைக்கவில்லை.. இந்த
ஆண்டில், கடன் மீளச் செலுத்தல்களை நிவர்த்தி செய்ய முடிந்த போதிலும், தற்போது நிலவும்
கொரோனா வைரஸ் பரவலுடனான சூழலில் முன்னேற்றம் ஏற்படாவிடின், 2021ஆம் ஆண்டில் செலுத்த
வேண்டியுள்ள கடன் தொகைகளைச் செலுத்துவது சவால்கள்
நிறைந்ததாக அமைந்திருக்கும். அத்துடன், இலங்கை ரூபாயின் பெறுமதியை, தற்போதைய மட்டத்தில்
தொடர்ந்து பேணுவதும் சவாலான விடயமாக இருக்கும்.
இலங்கை மிகவும் பாரதூரமான
கடன் நெருக்கடிக்குள் சிக்குண்டதற்கு உட்கட்டமைப்பு
வசதிகளை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுத்ததே முக்கைய காரணமாகும். பொருளாதார
அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால்
இவ்வளவு மோசமான நிலை ஏற்பட்டிருக்காது.
64.9 பில்லியன் டொலர் கடன் ஊள்லதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதில் 8 பில்லியன் டொலர் சீனாவிற்கு செலுத்தவேண்டும். நாட்டின் மொத்த தேசிய வருமானத்துடன் கடன் வீதத்தை
ஒப்பிட்டால் அது 75 வீதமாக காணப்படுகின்றது. அரசாங்கத்தின் வருவாயில் 95.4 வீதம் கடனை
செலுத்துவதற்காகவே செலவாகின்றது.கடன் நிலை என்பது
தொடர்ந்து தாங்கமுடியாதவொன்று. ஆனால், இதனை விட வேறு விடயங்களும் உள்ளன.முன்னைய
அரசாங்கம் வழமையான வழிமுறைகளுக்கூடாக கடன்களை பெற்றதிற்கு அப்பால், அரச நிறுவனங்களை
தனது சார்பில் கடன்களை பெறுமாறு கேட்டுக்கொண்டமையும் தற்போது தெரியவந்துள்ளது. இதன்
முழுமையான அளவு இன்னமும் தெரியவராத அதேவேளை, தற்போது வரையான மதிப்பீடுகளின் படி
9.5 பில்லியன் டொலர் கடன் இந்த வழியில் பெறப்பட்டிருக்கலாம் என நம்பமுடிகின்றது. இவை
எவையும் நிதியமைச்சின் ஆவணங்களில் காணப்படவில்லை.இலங்கையின் கடன் நிலவரம் குறித்த துல்லியமான
புள்ளிவிபரங்கள் எங்களிடம் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில்
தெரிவித்தார்.
4.5 பில்லியன் டொலரை இலங்கை செலுத்த வேன்டி உள்லது.ர்களை வழங்கவேண்டியுள்ளது, அடுத்த வருடம் 4 பில்லியன் டொலர் கொடுக்க வேன்டும். இதனை எவ்வாறு செலுத்துவது குறித்து இன்னமும் திட்டமிடவில்லை.
சில நிபந்தனைகளுடன் கடன் வழங்க
சர்வதேச நனய நிதியம் முன் வந்துள்ளது. பழைய கடன் அப்படியே இருக்க புதிதாக கடன் வழங்க
சர்வதேச நானய நிதியம் தயாராக இருக்கிறது. அத்தியாவசியப்
பொருட்களை இறக்குமதி செய்ய வியாபாரிகள் தயாராகராக
இருக்கிறார்கள். இறக்குமதியாகும் பொருட்களுக்கு கொடுப்பதற்குரிய அந்நியச்செலாவாணை விடுவிக்க வங்கிகள்
தயாராக இல்லை.
இந்தியாவிடம் இருந்து 11 சத
வீத கடனும்,, சீனாவிடமிருந்து 8சத வீத கடனும் இலங்கைக்குக் கிடைத்திருக்கிறது. மிகுதியான கடன்கள் வேறு வகைகளில் பெறப்படுகின்றன.
இந்தக் கடன்களை மீளச் செலுத்துவதர்கு க்கடன் பெற வேண்டிய நிலை உள்ளது. நிதி அமைச்சர்
பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் கடனுக்கானது
என்றே கருதப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னைய அரசாங்கம் செய்த கடன் பெறல் நிபந்தனைகளை இன்றைய அரசாங்கம் கைவிட்டுள்ளது. தேயிலையைக் கொடுத்து ஈரானிடம் எரிபொருளை இலங்கை வாங்கியது. தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது, உரப்பிரச்சினை மிக் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இரசாயன உரம் பவிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனை உடனடியாக அமுல் படுத்தியதால் தேயிலை மட்டுமல்லாது ஏனைய பயிர்ச்செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. உர மாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக அமுல் படுத்தியிருந்தால் இந்த நிலமை ஏற்பட்டிருக்காது.
No comments:
Post a Comment