Tuesday, January 4, 2022

கப்டனான முதல் போட்டியிலேயே சாதனை செய்த ராகுல்


 

  முதல் முறையாக கேடனாக செயல்பட்டு வரும் கேஎல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தனித்துவமான சாதனையை முன்னாள் கப்டன் முகமத் அசாருதீன் உடன் பகிர்ந்து கொண்டார்.

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ( ஒருநாள், டி20 ) கப்டன்  ஆகாமல்  நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கப்டனாக மாறிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்  கே.எல். ராகுல். இவருக்கு முன்னதாக 1990ஆம் ஆண்டு முகமது அசாருதீன் நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கப்டனானார். அந்த சாதனையை தற்போது 31 ஆண்டுகள் கழித்து ராகுல் செய்துள்ளார். 

ஒருநாள் போட்டிகளில்  சிறப்பாக செயர்படுபவர்களையே டெஸ்ட் போட்டிக்கு கப்டனாக்குவார்கள் ஆனால் ராகுல் நேரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கப்டனாகும் வாய்ப்பை பெற்றுள்ளதால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ,தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி   ஜோகனஸ்பர்க் மைதானத்தில்   நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கப்டன் விராட் கோலி முதுகுவலி காரணமாக விளையாட முடியாமல் போனதால் துணை கப்டன் ராகுல் முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு கப்டன் பொறுப்பினை ஏற்று விளையாடி வருகிறார்

. இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில்  வென்ற ராகுல் முதலில் இந்திய அணி துடுப்ப்பெடுத்தாடும் என்று அறிவித்தார் .

  முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ராகுல், அஷ்வின் ஆகியோரது ஆட்டத்தை தவிர மற்ற எந்த வீரரும் பெரிய அளவு ஓட்டங்கள் குவிக்காததால் 63.1 ஒரு ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது.  ராகுல் அதிகபட்சமாக 50 ஓட்டங்களையும், அஷ்வின் 46 ஓட்டங்களையும் அடித்தனர். 

No comments: