Monday, January 3, 2022

முதல் இடத்தில் இந்திய கிரிக்கெட் அணி

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணி முதல் இடத்தில் உள்ளது

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றியுடன் இந்திய அணி 2021-ஆம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்தது. அத்துடன் சர்வதேச டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் ஆண்டை நிறைவு செய்து அசத்தியது.

இந்தச் சாதனையை தொடர்ச்சியாக இந்திய அணி 6 ஆவது ஆண்டாக நிகழ்த்தியுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் ஆண்டின் இறுதியில் தொடர்ந்து முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு 2014-ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டனாக பொற்றுப்பு ஏற்றார். அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் அவர் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாட தொடங்கியது. அதன்பயனாக தரவரிசைப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது.

இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் ஆண்டின் இறுதியில் எந்த இடம்:

2016- நம்பர் 1

2017-நம்பர் 1

2018-நம்பர் 1

2019-நம்பர் 1

2020- நம்பர் 1

2021-நம்பர் 1

குறிப்பாக 2018-ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெளிநாடுகளில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியது. அதேபோல் தற்போது மீண்டும் 2021ஆம் ஆண்டு நான்கு வெளிநாடு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான செயல்பாடு விராட் கோலியின் கேப்டன்சி ரெக்கார்டு வைத்து பார்த்தாலே நன்றாக தெரியும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றி பெற்ற இந்திய வீரர்கள்:

கப்டன் போட்டிகள் வெற்றி தோல்வி வெற்றி%

விராட் கோலி 67 40 16 48.62

மகேந்திர சிங் தோனி 60 27 18 45

சவுரவ் கங்குலி 49 21 13 42.85

அசாரூதின் 47 14 14 29.78

ஏற்கெனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் விராட் கோலி கப்டனாக பல சாதனைகளை படைத்துள்ளார். அதாவது ஒரே ஆண்டில் நான்கு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளை இரண்டு முறை வென்ற முதல் இந்திய கப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். தற்போது இந்தச் சாதனைகளுடன் சேர்த்து 6 ஆண்டுகள் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் அணியை நிறுத்திய சாதனையையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: