Monday, February 6, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி


 

தெலுங்கில் பெரு வெற்றி பெற்ற படம் ‘சுட்டாலுன்னாரு ஜாக்ரதா.’  ‘சுட்டாலுன்னாரு ஜாக்ரதா’ படத்திஅன் தயாரிப்பாலர் கிருஷ்ணாவிடம் வாங்கிய  ஏ.வி.எம். சரவணன் தமிழில் தயாரிப்பதற்கு விரும்பினார். பாஞ்சு அருணாசலத்திடம் அப்படத்தைப் போட்டிக் காட்டினார். தெலுங்கில் முகிய பாத்திரத்தில் நடித்த     ஸ்ரீதேவியையே தமிழுக்கும்  ஒப்பந்தம் செய்தனர். டஜினியிடம் திகதி வாங்கியதால் அவருக்காக கதையை அமைக்கும்படி சொன்னார்  சரவணன். பஞ்சு  அருணாசலத்துக்கும் கதை பிடித்ததால் தமிழுகு ஏற்ற மாதிரி எழுதினார். அதுதான் ரஜினியின் வெற்றிப் படங்களில் ஒன்றான  "போக்கிரி ராஜா".

போக்கிரி ராஜாவில் நடிப்பதற்குரிய திகதிகளை  ஸ்ரீதேவியால் ஒதுக்க முடியவில்லை. பெரிய கொம்பனிகளின் படங்களில் நடிப்பதால் தொடர்ந்து நடிக்க முடியாதென அவர் கைவிரித்தார்.ஸ்ரீதேவியின்   போர்ஷனை  வீட்டுக்குள்  முடிக்கும்படி  இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கதாசிரியர் பஞ்சு அருணசலத்திடம் கூறினார்.   இன்னொரு கதாநாயகியான ராதிகாவையும் அந்த ‘போக்கிரி’ ரஜினிபாத்திரத்தை மெருகேற்றி கதையின்  போக்கை மற்றினர்  பஞ்சு அருணசலம்.  படித்த ரஜினி, அவரின் மனைவியாக வரும் ஸ்ரீதேவி கேரக்டர்களை, கதைக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு மட்டும் வைத்துக்கொண்டு   ஒரிஜினல் தெலுங்கு படத்தில் இருந்த அதே கதைதான். ஆனால், அதில் இரண்டு ஜோடிகளுக்கும் 50:50-ஆக இருந்த காட்சிகள் என் ட்ரீட்மென்ட்டில் போக்கிரி ரஜினி ஜோடிக்கு 70 சதவிகிதமாகவும், படித்த ரஜினி ஜோடிக்கு 30 சதவிகிதமாகவும் மாறினார்.  ஸ்ரீதேவி  கொடுத்த குறைந்த கால்ஷீட்டில் படத்தை முடிக்கவேண்டும் என்ற கட்டாயத்தால் கதியின் போக்கு மாற்றப்பட்டது.

போக்கிரிராஜா  படம் சூப்பர் ஹிட்டானது. . அந்தப் படத்தில் சினிமா துறையிலேயே நடக்காத வேடிக்கை ஒன்று நடந்தது. படத்தின் ரீமேக் ரைட்ஸை யாரிடம் வாங்கி ‘போக்கிரி ராஜா’ எடுத்தார்களோ அந்த கிருஷ்ணாவே இந்த ட்ரீட்மென்ட் பிடித்துப்போய் ‘போக்கிரி ராஜா’வை அப்படியே இந்தியில் எடுக்கலாம் என முடிவுசெய்து சரவணனிடம் அதன் உரிமையை வாங்கினார். வாங்கினார்.

‘போக்கிரி ராஜா’ படத்தைப் போட்டுக்காட்டி ஸ்ரீதேவியை இந்தியில் நடிக்கச்சொல்லி கேட்கும்போது, ‘ இதில் ராதிகாவுக்கு நிறைய போர்ஷன்ஸ் இருக்கே. ஆனால், என் கேரக்டருக்கு பெரிய ஸ்கோப்பே இல்லை. இந்தியில் பண்ணும்போது நிச்சயமா தமிழில் பண்ணின என் ரோலைப் பண்ண மாட்டேன். எனக்கு ராதிகா ரோல் தர்றதா இருந்தா நான் நடிக்கிறேன்’ எனச் சொன்னார்.  அப்படி அமைந்த ‘மாவாலி’தான் ஸ்ரீதேவிக்கு இந்தியில் மிகப்பெரிய ஓப்பனிங்கைக் கொடுத்த படம்.  அங்கும் அந்தப் படம் மிகப்பெரிய ஹிட். இப்படி கிருஷ்ணாவால் இந்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ரீதேவி, பிறகு அங்கு மிகப்பெரிய ஹீரோயினானார்.


  பத்திரிகைகளில் போதைப்பொருட்கள் தொடர்பான செய்திகள் வந்துகொண்டிருந்தன. அதுவரை கள், சாராயம், விஸ்கி, ஓட்கா போன்றவைதான் `போதை' என நினைத்திருந்தேன். ஆனால், போதைப் பொடியை புறங்கையில் வைத்து நுகர்வது, போதை ஊசி போட்டுக் கொள்வது  என பத்திரிகைச் செய்திகள், ஆங்கிலப் படங்கள் எல்லாம் பார்க்கும்போது இந்தப் புது டைப் போதையை வைத்து  இரட்டை வேட கதி எழுதலாம் என பஞ்சு அருணாசலம் யோசித்த போது உருவானதுதான்  ‘தூங்காதே தம்பி தூங்காதே’. 

கிட்டத்தட்ட 14 ஆயிரம் அடியில் படத்தை முடித்துவிட்டோம். அப்போது சரவணனை , ஆனந்த விகடனில் பணியாற்றிய மணியன் சந்தித்தார். அவர் இந்தியில் ஒரு படம் எடுத்திருந்தார். அந்தப் படம் பெரிய அளவில் அங்கு கவனிக்கப்படவில்லை. அந்தப் பட க்ளைமாக்ஸில் ஆறு, ஏழு கார்களின் சேஸிங் வைத்து ஒரு காரின் மீது இன்னொரு கார் மோதி, உடைந்து நசுங்கி, அதை ஐந்தாறு கேமராக்கள் ஷூட் செய்து எனப் பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாகச் செய்திருந்தார். இன்று அது மாதிரியான சண்டைக்காட்சிகள் ஆயிரம் படங்களிலாவது வந்திருக்கும். ஆனால், அந்த நேரத்தில் அது புதுமையாக இருந்தது.

உங்க படங்களுக்குத் தேவைன்னா அந்தக் காட்சிகளைப் பயன்படுத்திக்கங்க’ என்று சரவணனிடம்  மணியன் அப்போது சொல்லியிருக்கிறார். அந்தக் காட்சிகளைப் பார்த்த சரவணனுக்கு  அவை பிடித்துவிட்டது. ‘இதை எப்படியாவது நம் பட க்ளைமாக்ஸில் வைக்கணும்’ என்று முத்துராமனிடம் சொன்னர். பஞ்சு அருணாசலத்திடம் சொன்னபோது

 ஏற்கெனவே 14 ஆயிரம் அடி எடுத்தாச்சு. இதில் அந்த க்ளைமாக்ஸைச் சேர்க்கணும்னா லிங்க் பண்ணி எழுதணும். அப்படிப் பார்த்தால் 16 ஆயிரம் அடிக்கு மேல வருமே   என்றார்.பரவாயில்லை. நீங்க எழுதிக்கொடுங்க. அப்புறம் சரி பண்ணிக்கலாம்’ என்றார் முத்துராமன்.  

 அந்த இந்திப்பட க்ளைமாக்ஸில் பயன்படுத்தப்பட்ட கார்களைப்போலவே இரண்டு மூன்று கார்களை இங்கேயே ரெடி பண்ணி, அதில் வைத்து க்ளோஸப் காட்சிகளை மட்டும் எடுத்துக்கொண்டு லாங் ஷாட் காட்சிகளுக்கு இந்தப் படத்தின் காட்சிகளைச் சேர்த்தார்கள். எடிட் செய்து பார்த்தபோது, ஏதோ உண்மையிலேயே நாங்களே திட்டமிட்டு எடுத்ததுபோல் அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. ஆனால், படம் 16 ஆயிரம் அடியைத் தாண்டிவிட்டது.

No comments: