Thursday, February 16, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 56


 கமல் நடித்த கல்யாணராமன்  வெள்ளிவிழாகொண்டாடிய படம். அதன் பாதிப்பில் இருந்து பல படங்கள்  வெளியாகின ஆனாலும் கல்யாணராமன்  போற்றப்பட்டதைப் போல ஏனைய படங்கள்  போற்றப்படவில்லை. பஞ்சு அருணாசலத்தைச் சந்தித்த ராகவா லாரன்ஸ், கல்யாண ராமன் படத்தின் கதையத் தருமாறு  வேண்டுகோள் விடுத்தார். பஞ்சு அருணாசலமும் ஒப்புக் கொண்டார். மருநாள் பஞ்சு அருணாசலத்திக்ச் சந்தித்த ராகவா லாரன்ஸ் ஒரு கவரைக் கொடுத்தார்.  உளே ஒரு தொகை  இருந்தது. ஏன் என வினவியபோது, கல்யாணராமன் படக் கதைக்காக என்றார்.

அந்தக் காலத்தில் பஞ்சு அருணாசலத்தின் கல்யாணராமன்  கதைபோல பல படங்கள் வெளிவந்தன.

 யாருமே பஞ்சு அருணாசலத்திடம் அனுமதி வாங்கவில்லை.  கல்யாணராமன் கதையை  வைத்து ராகவா லாரன்ஸ் எடுத்த படத்தைப் பார்த்த பஞ்சு அருணாசலம் அதிர்ச்சியடைந்தார். கல்யாணராமன் படத்துக்கும்  ராகவா லாரன்சின்  படத்துக்கும் எந்த விதமான  ஒற்றுமையும்  இல்லை.

‘கல்யாணராமன்’ கதையை மையமாக வைத்து அவர் எடுப்பதாகச் சொன்ன ‘முனி’ மிகப்பெரிய வெற்றி. அடுத்து வந்த ‘காஞ்சனா’வும் வெற்றி. ‘பயந்த சுபாவம் உள்ள ஹீரோ’ என்ற ஒரு விஷயத்தைத் தவிர `கல்யாணராமனு’க்கும் அவரின் படங்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. அந்த ஐடியாவை வைத்து எடுக்கலாம் என நினைத்து டெவலப் பண்ணும்போது, அது வேறு ஒரு கதையாக மாறிப்போயிருக்கிறது. ‘என்னப்பா... என் பட ரைட்ஸை வாங்கிட்டு வேற படங்கள் எடுத்திட்டிருக்க?’ என்றேன். ‘கல்யாணராமன்’ இன்ஸ்பிரேஷனை வெச்சு இன்னும் எத்தனை படங்கள் வேணும்னாலும் எடுக்கலாம்ணே’ என்றார் லாரன்ஸ்.

  தேவர் ஃபிலிம்ஸுல் வேலை  தூயவனுக்கு வேறு வருமானம் இல்லை. ஃபைனான்ஸ் வாங்கி சொந்தப் படம் எடுப்போம் என முடிவு செய்திருந்தார். ‘என்னை நீங்க டைரக்டராகப் போட்டீங்கன்னா, எப்படியும் 10 நாளாவது ரஜினி கால்ஷீட் வாங்கிட்டு வந்துடுவேன்’ என்று கே.நட்ராஜ் சொல்லியிருக்கிறார்.

ஆங்கிலத் திரை ப்பட விழாவில் பார்த்த ஒரு நல்ல கதை. அதை தமிழுக்குத் தகுந்த மாதிரி  மாற்றி எழுதிய துயவன் அதனை தமிழில் தயாரிக்க முயற்சி செய்தார். கதையைக் கேட்ட  பஞ்சு அருணாசலத்துக்குத் திருப்தி இல்லை. ,   ‘ஃபெஸ்ட்டிவல்ல வந்திருக்கலாம். அதை இங்கிலீஷ் ரசிகர்களும் ரசித்திருக்கலாம். நம்ம ஊர்ல ஹீரோ ஒரு பொறுப்பை எடுத்துக்கிட்டார்னா, அதை அவர் சக்சஸ் பண்ணினாத்தான் அந்தப் படம் ஓடும். ஆனா, இதுல ஹீரோவின் ரசிகையா வர்ற அந்தச் சிறுமியை அவரால் காப்பாற்ற முடியலைனு வந்தா, தமிழ்ல ஓடாது  என்றார்  பஞ்சு அருணாசலம்.

 ஒரு ஃபைனான்ஷியரிடம் முதல் பிரதி அடிப்படையில் பேசி ஒப்பந்த  போட்டார் துயவன்,. அந்தப் படம்தான் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’.

ஒருகாலத்தில் தூயவனிடம் உதவியாலராக  பாக்யராஜ்   வேலை செய்திருக்கிறார். அந்தப் ப்ரியத்தின் காரணமாக அவர் பாக்யராஜிடம், ‘ஆரம்பத்துல இருந்தே தன்கூட இருக்கும் நட்ராஜுக்காக, ரஜினிகாந்த் 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கார். அந்த மாதிரி நீ எனக்காக 10 நாட்கள் கால்ஷீட் தரக் கூடாதா?’ என்று கேட்டிருக்கிறார். ‘சரி தர்றேன். ஆனா, இந்தக் கதையில் எனக்கு வேலையே இல்லை. அதனால் படத்துக்குள் ஒரு டிராமாவை வைத்து, அதில் நானும் ரஜினியும் நடிக்கிறோம். அந்த டிராமாவையும் நானே எழுதித் தர்றேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

பிறகு ஃபைனான்ஷியரிடம் தூயவன், ‘நான் இப்படிக் கூடுதலான சில விஷயங்களைச் சேர்க்கிறேன். படம் நல்ல விலைக்கு விற்கும். நீங்க முன்னாடி பேசினது தவிர, எனக்கு எவ்வளவு தருவீங்க?’ எனக் கேட்டிருக்கிறார். ‘இதுல பாக்யராஜும் நடிச்சு, அவரே ஒரு போர்ஷனை டைரக்‌ஷன் பண்ணி, காமெடி எல்லாம் சேர்த்தால், நான் உங்களுக்கு கூடுதலா 5 லட்சம் ரூபாய் தர்றேன்’ என்று அந்த ஃபைனான்ஷியர் சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதற்கான எந்த அக்ரிமென்ட்டும் கையெழுத்து ஆகவில்லை. படம் முடிந்து, ஃபர்ஸ்ட் காப்பி எடுத்துவிட்டார்கள். நான் எதிர்பார்த்ததைவிட படம் நன்றாகவே போனது. அந்த ஃபைனான்ஷியருக்கு 15 லட்சம் ரூபாய்க்கும் மேல் லாபம். தூயவனுக்கு 5 லட்சம் தருவதாகச் சொன்னவர், தரவில்லை. கேட்தற்கு, `அக்ரிமென்ட்படி பணம் கொடுத்துட்டேன். அவ்வளவுதான்’ என்று கையை விரித்துவிட்டார்.

நான் ஆரம்பத்துலயே உங்களைத் தான் பண்ணச் சொன்னேன். நீங்க பண்ணியிருந்தீங்கன்னா, உங்களுக்கும் லாபம் வந்திருக்கும்; அதுல எனக்கும் ஒரு பங்கு , ‘அடுத்து இப்ராஹிம் ராவுத்தரிடம் கேட்டிருக்கேன். `விஜயகாந்த் கால்ஷீட் வாங்கி தர்றேன்’னு சொல்லியிருக்கார். இந்தப் படத்துக்காவது மறுக்காம உதவி பண்ணுங்க’ என்றார். ‘சரி' என நினைத்து, ‘இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் படங்கள் வரிசையா நல்லாப் போகுதாம். அவர் எனக்குப் பழக்கம் இல்லை. உனக்கு அவரைத் தெரியுமா?’ என்று பஞ்சு அருணாசலம் கேட்டார்.

  பாக்யராஜ், சுந்தர்ராஜன் எல்லாரும் என் வீட்ல சுத்திக்கிட்டு இருந்தவங்கதான்’ என்றார். ‘சுந்தர்ராஜனிடம் கால்ஷீட் வாங்கிக் கூட்டிட்டு வா. அவர் டைரக்‌ஷன் பண்றதா இருந்தா, நான் உனக்கு ஃபைனான்ஸ் பண்றேன்’என பஞ்சு அருணாசலம் சொன்னார். சரு எனச்சொலிவிட்டு போனதூயவன்  ஒருமணி நேரத்தினுள்

  ஆர்.சுந்தர்ராஜனுடன் பஞ்சு அருணாசலத்துக்கு முன்னால் நின்ரார். பஞ்சு அருணாசலம் அதிர்ந்துவிட்டார். சுந்தராஜன் எக்கச்சக்கமாக சம்பளம் கேட்கிறார். எல்லோருடனும் சண்டை பிடிக்கிறார் என கதை பரவியதால் எச்சரிக்கையான பஞ்சு அருணாசலம் எச்சரிக்கையானார். என்ன சம்பளம் எதிர்  பாக்கிறியள். எப்ப படத்தித் தொடங்கலாம் என நேரடியாகக் கேட்டார்.


‘நானும் ரெண்டு மூணு படங்கள் பண்ணிட்டேன். எல்லாம் சில்வர் ஜூப்ளி. அடுத்து, ‘எனக்கு... உனக்கு’னு சில பேர் படம் பண்ணச் சொல்லி அட்வான்ஸ் கொண்டுவந்தாங்க. எதையும் நான் வாங்கலை. வீடு வாங்கணும்னு எனக்கொரு ஆசை. அதுக்கு உதவி பண்ணீங்கன்னா, உடனே உங்களுக்கு படம் பண்றேன்’ என்றார் சுந்தர்ராஜன்.

‘சரி, ஒரு வீடு பாருங்க’ என்றார்.

‘ஏதாவது சந்தர்ப்பம் கிடைச்சா வாங்க வசதியா இருக்குமேனு கோடம்பாக்கத்துல ஒரு வீடு பார்த்து வெச்சிருந்தேன். இரண்டே முக்கால் ரூபாய் சொல்றாங்க. என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு. ரெண்டு ரூபாய் கொடுத்தீங்கன்னா வீடு  வாங்கிடுவேன்' என்றார். உடனே ரெண்டு லட்சம் ரூபாய்க்கு ஒரு செக் எழுதிக் கொடுத்தார் பஞ்சு அருண்ச்சலம். சுந்தர்ராஜ்ன சொன்ன கதை பஞ்சு அருணாசலக்துகுப் பிடித்து விட்டது.  சண்டை, காதல் இலாத சோகபடத்துக்கு வியஜகாந்த் ஒப்புக்கொள்வாரா எனச் சந்தேகப்படார்.

 விஜயகாந்த் கதை கேட்க மாட்டார். ராவுத்தர்கிட்ட பேசுறேன்  என்றார் தூயவன்.

 ஆரம்பத்துல இருந்தே தாடி வெச்சுக்கிட்டு சோகப்பாட்டா பாடிட்டு இருந்தா எப்படிப்பா?  என்று ராவுத்தர் சந்தேகமாகக் கேட்டிருக்கிறார். ‘இப்படி கேட்பீங்கனு தெரிஞ்சுதான் பஞ்சு அண்ணன் அவர் கியாரன்டினு சொல்லச் சொன்னார். அவர் பொறுப்புல விடுவீங்களாம்’ என்று சொல்லியிருக்கார். ‘பஞ்சு சார் சொன்னா சரியா இருக்கும். அவர் எப்படிச் சொல்றாரோ அப்படியே பண்ணுங்க’ எனச் சொல்லியிருக்கிறார் ராவுத்தர்.

வைதேகி காத்திருந்தாள் என்ற அந்தப்படம்தான் விஜயகாந்தின் வாழ்கையில்  திருப்பு முனையை ஏற்றியது. இளையராஜாவின் இசை படக்துகு பெரும் பலமாக இருந்தது. தான் மெட்டமைத்த ஏழு பாடல்களும் ஒரு படத்தில் வர வேண்டும் என  இளையராஜா விரும்பினார். ஒரு பாட்டைஅல்லது இரண்டு  பாடல்களைத் தரும்படி பலர் இளையராஜாவிடம் கேட்டனர்.  அவர் கொடுக்கவில்லை. ஏழு பாடகளையும் வாங்கிய ஆர். சுந்தர்ராஜன் பாடல்களுக்காக எழுதிய கதைதான் வைதேகி காத்திருந்தாள்.

 

No comments: