மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாங்கம் காலபோக்கில் மக்களால் நிராகரிக்கப்படுவது வழமையானது, மக்கள் மனம் கவரும் வாக்குறுதிகளுடன் ஆட்சி பீடம் ஏறுபவர்கள் காலப் போக்கில் வாக்குறுதிகளை மறந்து விடுகின்றனர். மக்கள் மறப்பதில்லை.
பெப்ரவரி 22 ஆம் திகதி கொழும்பு கோட்டை பகுதியில் வீதிகளை மறித்து
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடக்த்த
தடிவிதிக்க முயற்சி செய்யப்பட்டது. கொழும்பு கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள்
பொது அமைதியின்மை மற்றும் சேதத்தை ஏற்படுத்துவதை தவிர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டm
seypavarkaL ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை,
நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடலுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறும் , பொது அல்லது
தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தேசிய எதிர்ப்புத் தினம் எனப் பெயரிட்டுள்ளனர். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக
பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்திய சுமார் 40 துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார்
100 தொழிற்சங்கங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம்வரிக் கொள்கைகளை
திரும்பப் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தன. சமீபத்தில்
அறிமுகப்படுத்தப்பட்ட வரிக்கொளகை பலரை பாதித்துள்ளது.
ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு
மற்றும் காலி முகத்திடலுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறும் , பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு
சேதம் விளைவிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுகம், மின்சாரம்,
பெட்ரோலியம், வங்கி மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் கலந்துகொண்டன.
பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணைந்து ஹோமாகமவில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்துடன் நடத்திய கூட்டுப் போராட்டம், கூட்டத்தை கலைக்க பொலிஸார்
நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்தை மீண்டும்
திறக்குமாறு பௌத்த மத குருமார்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பாலி மற்றும் புத்த பல்கலைக்கழகம் பாலியல் துன்புறுத்தல்,
போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் புதிய மாணவர்களை கொடுமைப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள்
வெளிவந்ததை அடுத்து முக்கிய இடத்தைப் பிடித்தது.
பல்கலைக்கழக நிர்வாகம் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை
ரத்து செய்தது மற்றும் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களை விடுதி வளாகத்தை காலி செய்யும்படி
அறிவிப்புகளை வெளியிட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்
தடுத்து வைக்கப்பட்டிருந்த அண்மையில் விடுதலை செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலைவர்களான
வசந்த முதலிகே மற்றும் வென் சிறிதம்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள்
மேற்கொண்ட பணி பகிஸ்கரிப்பு மற்றும் போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் பணிகள் பாதிப்படைந்துள்ளன.
சுகாதார ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு குறைப்பு உட்பட 09 கோரிக்கைகளை வலியுறுத்தி
இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.சுகாதார ஊழியர்கள் போராட்டம் காரணமாக வைத்தியசாலையின்
கிளினிக் சேவைகள், ஆரம்ப சுகாதார பிரிவு சேவைகள், வெளிநோயாளர் பிரிவு என்பன பாதிக்கப்பட்டதுடன்
நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.வைத்தியசாலைகளில் மருந்துகள், உபகரணங்களின்
பற்றாக்குறையை நிலவுகிறது. அதிகரித்த வரியை,,
மேலதிக கொடுப்பனவி முறைப்பு போன்றவற்றால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடை பெற்றன.
கோத்தா ஜனாதிபதியாக இருந்தபோது
தொடர் போராட்டங்கள் நடை பெற்றன. இன்றும் போராட்டங்கள்
நடை பெறுகின்றன. ஆனால், முன்னைரைப் போன்று
வலுவான பொராட்டங்களாக எவையும்
பரிணமிக்கவில்லை.
ஆங்காங்கே நடைபெறும் போரட்டங்கள் ஒருமுகப்படுத்தப்படும்போது அதனை எதிர் கொள்வதர்குரிய சக்தி அரசுக்கு இருக்காது.
No comments:
Post a Comment