நியூஸிலாந்தில் நடைபெற்ற பிளேஃஓவ் போட்டிகளில் வெற்றி பெற்ற போத்துகலும், ஹெய்ட்டியும் முதன் முதலாக மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
புதன்கிழமை
நடைபெற்ற பிளே-ஆஃப் வெற்றிக்குப் பிறகு போத்துகல் , ஹெய்ட்டி ஆகியன அவுஸ்திரேலியா , நியூஸிலாந்து ஆகியன இணைந்து நடத்தும் மகளில் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
ஆக்லாந்தில்
நடைபெற்ற பிளே-ஓஃப் போட்டியின் குரூப் பி பைனலில் சிலியை 2 ௧ என்ற கோல் கணக்கில் த்ரில்
வெற்றி பெற்ற ஹெய்ட்டி முதல் முறையாக எலைட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதற்கிடையில்,
ஹமில்டனில் நடந்த மகளிர் உலகக் கோப்பை பிளே-ஓஃப்
போட்டியில் போத்துகல் 2 -1 என்ற கோல்
கணக்கில் கமரூனை வீழ்த்தியது.
இங்கிலாந்து, டென்மார்க் மற்றும் சீனாவுடன் குழுயில் D இல் ஹெட்டி இடம் பெறும்.
அமெரிக்கா, வியட்நாம் மற்றும் நெதர்லாந்துடன் குழு A இல் போத்துகல்
இருக்கும். ஜூலை 20 முதல் ஓகஸ்ட்
20 வரை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகலில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறும்.
ஹாமில்டனில் நடைபெறும் சி குரூப் போட்டியில் பராகுவே பனாமாவை எதிர்கொள்ளும் போது போட்டியின் மற்றொரு இடம் இன்று வெளிக்கிழமை தீர்மானிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment