அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் யார் கையில் இருக்கிறதென்ற கேள்விக்கு தற்காலிக விடை கிடைத்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடியும் வரை தற்கலிகாமாக எடப்பாடியின் கையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகமான நிர்வாகிகள் எடப்பாடியின் பின்னால் உள்ளனர். கட்சி எடப்பாடியின் கைக்குள்
இருக்கிறது. ஆனால், கட்சியின் இரட்டை இலைச் சின்னம்
பன்னீரின்
வசம் உள்ளது. இரட்டை
இலைச் சின்னம் என்பது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடையாளம்.
எடப்படியும், பன்னீரும் இணைய வேண்டும் என்பது மத்திய பாரதீய ஜனதாவின் விருப்பம். ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பன்னீர் ஒதுங்கிக் கொண்டர். அதனை எடப்பாடி தரப்பு பலவீனமாகப் பார்க்கிறது. எடப்பாடியின் உண்மையான அரசியல் எதிரி முதலமைச்சர் ஸ்டாலின். கருணாநிதியின் மறைவுக்குப் பின்னரான சகல தேர்தல்களிலும் ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரான தேர்தல்கள் அனைத்திலும் எடப்பாடி மண் கெளவினார்.ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எடப்பாடிக்கு இல்லை.
கூட்டணிக் கட்சிகள் ஆனைத்தையும் ஸ்டாலின் அரவணைத்துச் செல்கிறார். புதிதாக கமலையும் தன் பக்கம்
இழுத்துள்ளார். கடந்த காலங்களில் எடப்பாடிக்கு பக்க பலமாக
இருந்த டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோர்
கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டனர். இது எடப்பாடிக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது.எடபாடி,பன்னீர்,சசிகலா,தினகரன் ஆகியோர்
ஒன்றாக
இருக்க வேண்டும் என பாரதீய ஜனதாத் தலைவர்கள் விரும்புகின்றனர். அவர்களை
இணைத்தால் தன் தலைமைப் பதவிக்கு ஆபத்து என எடப்பாடி கருதுகிறார். தேர்தல் பரப்புரை செய்ய பன்னீர் ஆர்வமாக
உள்ளார். எடப்பாடி அதற்குத் தடை போட்டுள்ளார். எடப்பாடியின் பின்னால்
பலர்
இருப்பதால்
பாரதீய ஜனதா பன்னீரைக் கைவிட்டுள்ளது.
ஈரோட்டில் எடப்பாடி பிரசாரம் செய்கிறார். பன்னீரும் அவரது ஆதரவாளர்களும்
பிரசாரம் செய்யத்தயாராக
இருக்கிறார்கள். எடப்பாடி அதற்குத் தடையாக
இருக்கிறார். பன்னீர் இல்லாமல் கிடைக்கும் வாக்குகள் அனைத்துக்கும் எடப்பாடி உரிமை கோர
உள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைக்கும் வாக்குகளில் தனது பங்களிப்பும்
இருக்க வேன்டும் என
பன்னீர் விரும்புகிறார்.
எடப்பாடியால் அவமானப்படுத்தப் பட்டதால் பிரசாரத்துகுப் போக வேண்டாம் என கூட இருப்பவர்கள் சொல்வதைக் கேட்பதற்கு பன்னீர் தயாராக
இல்லை.
பன்னீர் தரப்பு வழங்கிய நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலுக்கு எடப்பாடி முட்டுக்கட்டை போட்டதால் சட்டவிதிகளின்படி ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதனால், பன்னீரின் பயணம் முடங்கியது. அவரின் ஆதரவாளர்களும் முடங்கினர். இந்த நிலையில்தான், தனது தரப்பில் நியமிக்கப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் சென்னை எழும்பூரிலுள்ள தனியார் ஹோட்டலில் வரும் 20ம் திகதி ஆலோசனை இரட்டை இலை வெற்றி பெறுவதற்காகப் பிரசாரம் செய்வதற்காகவே பன்னீர் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றார். எடப்பாடி தரப்பு தடை ஏற்படுத்தினாலும், இரட்டை இலைக்காக வாக்குச் சேகரிக்கலாம் என்று பன்னீர் தெரிவித்தார். ஆனால், அவருடன் இருப்பவர்களுக்கு அதில் உடன்பாடில்லை. பன்னீருக்கு ஆதரவு அதிகமாக இருக்கும் பகுதிகளில் பொதுக்கூட்டம் போடலாம் என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டது. `ஈரோடு இடைத்தேர்தலில் பன்னீரின் பங்களிப்பு எதுவுமே இல்லையென்றால் அரசியல் வெளிச்சத்திலிருந்து மறைக்கபட்டு விடலாம் என்ற அச்சம் பன்னீரிடம் இருக்கிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 27ம் திகதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆளும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க சார்பில் தென்னரசும் போட்டியிடுகிறார்கள். சீமானும்,விஜயகாந்தும் தமது
வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். 77 வேட்பாளர்கள்
ஈரோட்டில் போட்டியிடுகிறார்கள்.
காங்கிரஸும்
அண்னாதிராவிட முன்னேற்றக் கழகமும் ஈரோட்டில் நேரடியாக
மோதுகின்றன.
பிரசார் களத்தில் திரவிட முன்னேற்றக் கழகம்
முன்னணியில் உள்ளது. எடப்பாடி
காங்கிரசைத் தாக்காமல்
திராவிட முன்னேறக் கழகத்தையே குறி வைக்கிறார். கோபத்தின் உச்சிக்குச் சென்ற
எடப்பாடி, முதலமைச்சர் ஸ்டாலினை
ஒருமையில்
பேசியது சர்ச்சையாகி உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக பாரதீய
ஜனதாத் தலைவர்கள்
பெரியளவில் பிரசாரம் செய்ய வில்லை. பாரதீய ஜனதாத் தலைவர்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் இணைந்து பிரசாரம் செய்வார்களா
என்பது தெரியவில்லை.
தமிழக ஆட்சியை இழப்பதற்கு பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்ததுதான் காரணம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் ஆத்திரத்துடன் பேசினார்கள். மீண்டும் பாரதீய ஜனதாவின் வலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்ந்துவிட்டது.
No comments:
Post a Comment