Tuesday, February 14, 2023

பாசக்கார அப்பா ஷேன் வோன்


   அவுஸ்திரேலிய  முன்னாள் கிரிக்கெட்  மறைந்தவீரர் ஷேன் வோனின் உயில் வெளியிடப்பட்டது. அவரது 20.7 மில்லியன்டொலர் சொத்துக்கள் அவரது குழந்தைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  ஷேன் வோன்   கடந்த மார்ச் மாதம் தாய்லாந்தில் 52 வயதில் மாரடைப்பால்  உயிரிழந்தார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் தனது சொத்துக்களில் தலா 31 சதவீதத்தை தனது மூன்று குழந்தைகளான ஜாக்சன், புரூக் ,சம்மர் ஆகியோருக்கு விட்டுச் சென்றதாக விக்டோரியாவில் உள்ள உச்சநீதிமன்றம் வெளியிட்ட ஆவணங்கள் கூறுகின்றன. எஞ்சியதை அவரது சகோதரர் ஜேசன், அவரது சொத்தில் இரண்டு சதவிகிதமும்,  மற்றும் அவரது மருமகள் டைலா மற்றும் மருமகன் செபாஸ்டியன் ஆகியோருக்கு இடையே இரண்டரை சதவிகிதமும் சொத்துகள் பிரித்து தரப்பட்டுள்ளன. 

வார்னின் வாகனங்கள் - ஒரு யமஹா மோட்டார் பைக் BMW மற்றும் Mercedes  ஆகியவை ஜாக்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு மட்டும்  3லட்சத்து 75 டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல நட்சத்திரமும்  அவரது மனைவியுமான  சிமோன் கலாஹன் மற்றும் அவரது முன்னாள் மனைவி லிஸ் ஹர்லிக்கு அவரது சொத்தில் எதுவும் வழங்கப்படவில்லை.

அவரது 20.7 மில்லியன் டொலர்  சொத்துக்களில் 6.5 மில்லியன் டொலர் மதிப்புள்ள  விக்டோரியாவில் உள்ள அவரது வீடும், அவரது அவுஸ்திரேலிய வங்கிக் கணக்கில் 5 மில்லியன் டொலரும் இருந்தது. அவரின் மற்றொரு வங்கிக் கணக்கில் 5 லட்சம் டொலரும், பங்குகளில் கிட்டத்தட்ட 3 மில்லியன் டொலரும்  வைத்திருந்தார். அவரது மற்ற சொத்துகளில் மிகவும் கவனம் பெற்ற சொத்து என்றால் அது 2 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்கை ஜெட் ஒன்றாகும்.

ஷேன் வார்ன்க்கு,  வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய  2 லட்சத்து 95 ஆயிரம் டொலர் மதிப்பிலான கடனும் இருந்துள்ளது.

  ஓய்வுக்குப் பிறகு,  சேனல் 9 மற்றும் ஃபாக்ஸ் கிரிக்கெட் ஆகியவற்றிற்கான வர்ணனையாளராகவும் ஒளிபரப்பாளராகவும் பணியாற்றினார். 

No comments: