Saturday, February 25, 2023

தலைமைப் போட்டியில் முந்திய எடப்பாடி சறுக்கிய பன்னீர்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் நடந்த தலைமைப் பதவிக்கான  போட்டியில் எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார். இந்த  வெற்றி நிரந்தரமானதில்லை என பன்னீரின் பின்னால் நிர்பவர்கள்  கூறுகின்றனர்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் டெல்லி உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கி உள்ளது.   ஜூலை 11ம் திகதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலோட்டமாகப் பார்த்தால் எடப்பாடி தரப்புக்கு சாதகமாக  உள்ளது. பொதுக்குழு செல்லும். பொதுக்குழுவின் தீர்மானங்கள் பற்றி  நீதிமன்றம் முடிவெதனையும் சொல்லவில்லை. சிவில் கோட்டில் அல்லது தேர்தல் ஆணையகத்தில்  முடிவைக் காணும்படி  நீதிமன்ரம் சொல்லியுள்ளது.நீதிமன்ரத் தீர்ப்புக்கு எதிராக  சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக  பன்னீர் தரப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கடந்த வருடம் ஜூலை 11ம் திகதி கூடியது. ஜூலை 11ம் திகதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதோடு இந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதை எதிர்த்து அதிமுக சார்பாக அவைத்தலைவர் தமிழ் மகன், தனியாக எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வழக்கு தொடுத்தனர்.

நீதுமன்றத் தீர்ப்பல் எடப்பாடி உற்சாகமடைந்துள்ளார். பன்னீருக்கு இது  பின்னடைவுதான். ஈரோடு இடைத் தேர்தல் திங்கட்கிழமை நடை பெற உள்ள நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சாதகமானதாக அமைந்துள்ளதுஅண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தினுள்  கடந்த எட்டு மாதங்களாக நிலவிய  பூசல்  ஈரோடு இடைத் தேர்த்ல் சமயத்தில்   முடிவுக்கு வந்ததும்  ஒரு  அரசியல்தான்பன்னீரிடம்  இருந்த  இரட்டை இலையை  எடப்பாடியிடம் கொடுத்த நீதிமன்றம் கட்சியையும் அவரிடம் ஒப்படைத்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கைகு வந்த  இரண்டு நாட்களுக்கிடையில் எடப்பாடிக்கு அக்கினிப் பரீட்சை காத்திருக்கிறது. இரட்டை இலை, கட்சி ஆகிய  இரண்டும்  கையில் இருப்பதால்  ஈரோடு இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வேண்டிய கட்டாயம்  உள்ளது. ஈரோடு  கிழக்கு தேர்தலில் முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்  யுவராஜா இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டார்.இடைத் தேர்த்லில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறது.கடந்த தேர்தலில்  யுவராஜ்  ஒன்பதாயிரம் வாக்குகளால்  தோல்வியடைந்தார்இந்த  இடைத் தேர்தலில்  யுஅராஜ் வாங்கிய வாக்குகளுக்கு  அதிகமான வாக்குகளை  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் பெற வேண்டும்.அவர்  தோல்வியடைந்தால்  ஒன்பதாயிரம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெற  வேண்டும்.

நீதிமன்றம்  கொடுத்த வெற்றியை ஈரோடு இடைத்தேர்தல் தட்டிப் பறித்து விடுமோ என்ற அச்சம் ஒரு  புறம்  உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பக்க பலமாக பாரதீய ஜனதாக் கட்சி மட்டும் உள்ளது. ஆனால்பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும்  ஒரே  மேடையில் ஏறவில்லை. அண்ணாமலை மட்டும் தான்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக தேர்தல் பரப்புரை செய்தார். பாரதீய ஜனதாவை எடப்பாடி  எட்டத்திலே  வைத்துள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  அடிமட்டத் தொண்டரில் இருந்து  முதலமைச்சராக  படிப்படியாக  உயர்ந்தவர் . பன்னீர்ச்செல்வம்ஜெயலலிதாவின்  நம்பிக்கைக்குப்  பாத்திரமானவர் பன்னீர்ச்செல்வம்பதவி ஆசை பிடித்தவர்களால்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்தொண்டர்களையும்,

 நிர்வாகிகளையும்  பனீர் நம்பவில்லை. பாரதீய ஜனதாக் கட்சி  தன்னைக் காப்பாற்றும் என பன்னீர் நம்பி இருந்தார்கடைசியில் பாரதீய ஜனதாத்   தலைவர்கள் அவரைக் கைவிட்டுவிட்டார்கள்.

அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த பன்னீர் செல்வம் 3 முறை முதல்வராக இருந்தார். ஜெயலலிதா சிறை சென்ற போதெல்லாம் பன்னீர் செல்வத்திடம் மட்டுமே முதல்வர் பதவியை ஒப்படைத்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்த நிலையில் தான் தற்போது அவருக்கும், அதிமுகவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது பன்னீர் செல்வத்தின் 33 ஆண்டுகளுக்கு மேலான அதிமுக பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சசிகலா தான் காரணமாம் அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை முதல்வர் பதவியில் அமர்ந்து, செல்வாக்கு மிக்க தலைவராக பன்னீர் செல்வம் வலம் வந்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற தலைவர்கள் முதல் ஆளாக பன்னீர் செல்வத்தின் பெயர் இருந்தாலே இக்கட்டான காலத்தில் முதல்வர் பதவியை ஜெயலலிதா பன்னீர் செல்வத்துக்கே வழங்கி வந்தார். இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின்படி தற்போது பன்னீர் செல்வம் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. இதன்மூலம் அதிமுகவில் கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலான அவரது அரசியல் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த முற்றுப்புள்ளிக்கு காரணம் என்பது சசிகலா என்றே கூறப்படுகிறது. அதாவது அதிமுகவில் சசிகலாவால் வளர்ந்து உச்சம் தொட்ட ஓபிஎஸ் இப்போது அவராலே ஒன்றும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கட்சிக்காக  தனது  பதவிகள் அனைத்தையும் விட்டுக்கொடுத்த  பன்னீர் இன்று கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்.

No comments: