தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 8 மாநில திரைப்பட துறையில் உள்ள நடிகர்கள் பங்கேற்கும் ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’ என்ற கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. ஹைதராபாத், ராய்ப்பூர், பெங்களூர், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணியின் கப்டனாக ஆர்யா உள்ளார்.
இந்த அணியில் ஜீவா, விஷ்ணு விஷால், பரத், விக்ராந்த், ஆதவ் கண்ணதாசன், சாந்தனு, பிருத்வி
ஆகியோர் விளையாடுகின்றனர். தெலுங்கு வாரியர்ஸ் அணி கப்டனாக நாகார்ஜுனாவின் மகனும்
நடிகருமான அகில் அக்கினேனி உள்ளார்.
தனது தரமான பேட்டிங் ஃபார்மைத் தொடர்ந்த அகில் அக்கினேனி 26 பந்துகளில்
ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
கேரள ஸ்டிரைக்கஸ் அணியின் கப்டனாக குஞ்சாக்கோ போபனும், கர்நாடகா
புல்டோசர்ஸ் கப்டனாக சுதீப்பும், பஞ்சாப் தி ஷேர் அணி கப்டனாக சோனுசூட்டும், பெங்கால்
டைகர்ஸ் அணி கப்டனாக கிசுசென் குப்தாவும், போஜ்புரி தபாங்ஸ் அணி கப்டனாக மனோஜ் திவாரியும்
விளையாடுகின்றனர்.
கழந்த ஞாயிற்றுக்குழமை நடந்த ஆட்டத்தில் தெலுங்கு வாரியர்ஸ் பெங்கால் டைகர்ஸ்
அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய தெலுங்கு வாரியர்ஸ் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு
126 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கப்டன் அகில்
அக்கினேனி பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டார். மேலும், தொடரில் தனது 3 அரைசதத்தையும்
பதிவு செய்தார். கடைசி வரை களத்தில் அகில் 26 பந்துகளில் 57 ஓட்டங்ன்களும், அஷ்வின்
17 பந்துகளில் 43 ஓட்டங்ன்களும் எடுத்தனர். இந்த ஆட்டத்தில் பெங்கால் டைகர்ஸ் அணியை
தெலுங்கு வாரியர்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தெலுங்கு வாரியர்ஸ் அணி கப்டன் அகில் அக்கினேனியை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தனது தரமான பேட்டிங் ஃபார்மைத் தொடர்ந்த அவர் 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். தொடர்ச்சியாக 3வது சதத்தையும் விளாசி மிரட்டினார். இதனால், அகில் சினிமா நட்சத்திரமா? அல்லது கிரிக்கெட் நட்சத்திரமா? என்று வியந்து அவரை பாராட்டி வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் அவர் பற்றி பதிவுகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றது.
No comments:
Post a Comment