Monday, February 13, 2023

உலகக்கிண்ண நூற்றாண்டு விழாவை நடத்த தென் அமெரிக்கா ஆர்வம்


 உலகக்கிண்ண உதைபந்தாட்ட நூற்றாண்டு விழவை  நடத்துவதர்ஜு  ஆர்ஜென்ரீனா, சிலி, உருகுவே , பராகுவே ஆகியவை ஆதிகார பூர்வ கூட்டு  முயற்சியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தன. 2030 ஆம் ஆண்டு உலககிண்ண நூற்றாண்டுவிழா நடைபெற உள்ளது.   1930 ஆம் ஆண்டு உருகுவேயில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்ட இருதிப்போட்டியில் ஆர்ஜென்ரீனாவை எதிர்த்து விளையாடிய  உருகுவே 4-2என்ற கோல்  கணக்கில் வெற்றி பெற்றது. 2030 அம் அண்டு உலகக்கிண்ண  உதைபந்தாட்டப் ஓட்டியை ணைந்து நடத்துவதர்கு ஆர்ஜென்ரீனாவும்,  உருகுவெயும் சுமார் 15 வருடங்களுக்கு  முன்னர் அரிவித்தன.  இப்போது சிலி,பரகுவே ஆகிய நாடுகளும்  இணைந்துள்ளன. உலகக்கிண்ணப் போட்டியை நடத்த பொலிவியாவை தங்களுடன் சேருமாறு நான்கு நாடுகளும் கேட்க உள்ளன.  1930 ஆம் ஆண்டு நடைபெற்ற் முதலாவது  முதலாவது  உலகக்  கிண்ணப் போட்டியில் பொலிவியா பங்கேற்றது.

"முதல் உலகக் கோப்பையை ஏற்பாடு செய்தவர்களின் நினைவை போற்ற வேண்டிய கடமை பீபாவுக்கு உள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று கான்மெபோல் தென் அமெரிக்க கூட்டமைப்பின் தலைவர் அலெஜான்ட்ரோ டொமிங்குஸ் ஆர்ஜென்ரீனாவில் கூறினார்.
 
 
ஸ்பெயின், போத்துகல், உக்ரைன் ஆகிய நாடுகளும் 2023 உலககிண்ணப் போட்டியை நடத்த விரும்புகின்றன.  இதேவேளை  சவூதி அரேபியா எகிப்து ,  கிரீஸ் போட்டியில் இணைந்துள்ளன.   

உருகுவே 1930 இல் மான்டிவீடியோவில் நடத்திய 13 அணிகள் கொண்ட உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆர்ர்ஜென்ரீனாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் உலக சம்பியனானது.  கடந்த ஆண்டு கட்டாரில் நடந்த போட்டியில் பிரான்ஸை வீழ்த்திய ஆர்ர்ஜென்ரீனா, நடப்பு சாம்பியனாக உள்ளது.

அடுத்த உலகக் கிண்ணப் போட்டி  2026 இல் அமெரிக்கா, மெக்சிகோ , கனடா அகிய நடுகள்  இணைந்து நடத்த உள்ளன.

 

 

 

No comments: