Monday, February 27, 2023

ரணிலின் தந்திரமா குள்ள நரியின் தந்திரமா


 உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுமா  இல்லையா என்ற கேள்விக்கு ஜனாதிபதி ரணில் விகிரமசிங்க தெள்ளத் தெளிவாகப் பதிலளித்துள்ளார்.  உளூராட்சித் தேர்தலில் தமது பலத்தைக் காட்டலாம் எனக் காத்திருந்த அரசியல் தலைவர்கள்  கொதித்துப் போயுள்ளனர். தேர்தலைச் சந்திக்காமல் ஜனாதிபதியானவரிடம்  ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது       முட்டாள்தனமானது.

 தேர்தல் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசினார். தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. அது ஒத்திவைக்கப்படுவதற்கு முதலில் தேர்தல் இல்லை. தமக்குத் தெரிந்தபடி இதுவரை தேர்தலுக்கான நிலையான திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் எனவே தேர்தலை நடத்துவது குறித்து சட்டப்படியான முடிவு எடுக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார். தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டுமே தேர்தலை நடத்த முடிவு செய்ததாகவும், மற்றவர்கள் வாக்கெடுப்பில் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். க, தேர்தல் தொடர்பான தீர்மானத்தை தலைவர் நிமல் புஞ்சிஹேவா மற்றும் உறுப்பினர் எம்.எம். மொஹமட் மட்டும் எடுத்ததாகவும், மீதமுள்ள மூன்று உறுப்பினர்களின் ஒப்புதல் மட்டுமே ஜூம் மூலம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

“தேர்தல் நடத்துவதற்கான முடிவு தலைவர் மற்றும் எம்.எம். முகமது ஆகியோரால் எடுக்கப்பட்டது என்பதே இதன் பொருள். பின்னர் அவர் (புஞ்சிஹேவா) மற்றவர்கள் தொடர்பு கொண்டு பின்னர் அவர்களின் சம்மதம் பெறப்பட்டதாக கூறுகிறார். மற்ற மூவரிடமும் கேட்டால் அவர்களின் நிலைப்பாடு இதுவாக இருக்காது. அதற்கான ஆதாரத்தையும் என்னால் வழங்க முடியும். பின்னர் தேர்தலை நடத்துவது குறித்து உத்தியோகபூர்வ முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை” என்று அவர் மேலும் கூறினார். 

ஜனாதிபதியின்  அறிவிப்பு குழப்பமாகவே  உள்ளது. தேர்தலை நடத்தவிடது தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்பட்டன.  ஆனால், தேர்தல் நடத்துவதற்கான  பூர்வாங்க வேலைகள்  முன்னெடுக்கப்பட்டன.  ஜனாதிபதி ஒரு பாதையிலும், தேர்தல்கள் ஆணையம்  இன்னொரு பாதையிலும்  பயணம் செய்தன.உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற பட்டி மன்றம் ஒரு புரம்  இருக்க எல்லாக் கட்சிகளைப் போன்றே ஐக்கிய தேசியக் கட்சியும் உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்காக பணத்தைக் கட்டியது.

 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிவ  பெயர் கொடுத்த அரச  ஊழியர்கள்  மூன்று மாத சம்பளமற்ற விடுமுறை எடுத்துள்ளார்கள். தேர்தல் நடைபெற வில்லை என்றால் அவர்களின் நிலை என்ன என்பதர்கான  உத்தரவாதம் எதுவும்  இல்லை. நாடு இருக்கிர நிலமையில் தேர்தலை நடத்த பணம்  இல்லை  எனக் கைவிரிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பாராளுமன்றத்திலு, வெளியேயும்  பலத்த எதிர்ப்பு காட்டப்படுகிறது.  ஆளும் கட்சியும், எதிர்க் கட்சிகளும் தமது அரசியல் நலனுக்காகவே  போராட்டங்களை நடத்துகின்றன. ஜனாதிபதியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு தேர்தல் செயற்பாடுகள் அடிபணிவது இலங்கை ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ள ஒரு முடமான நோயின் அறிகுறியாகும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது, புற்று நோயைப் போன்று, சட்டமியற்றும் சபை உட்பட ஏனைய அனைத்து முக்கிய அரச நிறுவனங்களின் உயிர்ச்சக்திகளையும் தின்று, அவற்றை பலவீனப்படுத்தியுள்ளது. 21வது திருத்தம் சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்துவதற்கும் அரச சேவையை அரசியலற்றதாக்குவதற்கும் உதவும் ஒரு முற்போக்கான சட்டமாகப் பாராட்டப்பட்டது. ஆனால்,தன்னிச்சையாகச் செயற்கட வேண்டிய தேர்தல் ஆணையம் ஜனாதிபதியின் காலடியில்  கிடக்கிறது.

அரசாங்க அச்சகம் ஜனாதிபதி சொல்வதைச் செய்யும்  நிலையமாக மரி உள்ளது.  தேசிய பொலிஸ் ஆணைக்குழு  , சட்டமா அதிபர் திணைக்களம் என்பன  ஏதோ ஒரு அரசியல் பாதியில் இயங்குகின்ரன.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன, அரசாங்க அச்சுப்பொறியாளர் கங்கானி லியனகே ,நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன போன்ற அரச அதிகாரிகளே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்க முயற்சித்ததாகக் குற்றம்  சுமத்தப்பட்டது.  அவர்கள் வெரும் கைப்பாவைகள் என்பது இப்போது புரிந்துள்ளது.  இலங்கையின்  பொருளாதார நிலையை  ஜனதி பதி  முன்னிறுத்துகிறார். நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைப் பயன்படுத்தி அரசாங்கம் அனைத்துத் தேர்தல்களையும் காலவரையின்றி ஒத்திவைக்கும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது. ஜனாதிபதி எதிர்பார்க்கும் கடன்  கிடைக்கும் வரை எந்த  ஒரு தேர்தலும் நடப்பதர்கு வாய்ப்பு இல்லை.

No comments: