Tuesday, February 28, 2023

உக்ரைனில் அமெரிக்க ஜனாதிபதி அதிர்ச்சியில் ரஷ்யா

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு வருடம்  முழுமையாக  முடிந்து விட்டது. கடந்த ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீது   ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. இந்த ஆண்டு பெப்ரவரி 23 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  மிகவும்  இரகசியமான முறையில் உக்ரைனுக்குச் சென்றார்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன்  ஜோ பைடன்  வீதியில் நடந்து செல்லும்  புகைப்படங்கள் ரஷ்யாவுக்கு விடப்படும் எச்சரிக்கையாகப் பார்க்கப்பாடுகிறது.  உக்ரைனில்  அகதிகள் இருக்கும் சாலைகள் வழியாக இவர்கள்  இருவரும் சாதாரண மக்கள் போல நடந்து சென்றனர். ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் போர்க்களத்தில் இருக்கிறது. சீனா, வட கொரியா ஆகியனவும்  ரஷ்யாவின்  பக்கம்  உள்ளன.  ஏனைய நாடுகள் தேவையான  போர்த்தளபாடங்களையும் வேறு பல  உதவிகளையும் உக்ரைனுக்கு வழங்குகின்றன.

உக்ரைனின் கதையை சுலபமாக  முடித்து விடலாம் என இறுமாப்படைந்த  ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அதிர்ச்சியடைந்துள்ளார். ரஷ்யப் படைகள் கைப்பற்றிய இடங்களை  உக்ரைன்படைகள் மீண்டும் பறித்தெடுத்தன.இப்படி  ஒரு சம்பவம் நடக்கும் என  புட்டின் கனவிலும் எதிர்பர்த்திருக்க மாட்டார்.

கடந்த வருடம் பெப்ரவரி  மாதத்தில் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடங்கியது. நேட்டோ படையில் உக்ரைன் இணைவதை தடுக்கும் வகையிலும், உக்ரைனில் அமெரிக்க ராணுவ தளவாடங்கள் அமைக்கப்படுவதை எதிர்க்கும் வகையிலும் ரஷ்யா திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்தது. முதல் 3 மாதங்கள் தீவிரமாக நடந்த போர் தற்போது விட்டு விட்டு நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாடுகளுமே போரில் பெரிய அளவில் முன்னேற்றம் அடையவில்லை. ரஷ்யா பெரிதாக உக்ரைன் நாட்டு நகரங்கள் எதையும் கைப்பற்றவில்லை. அப்படியே ரஷ்யா கைப்பற்றிய நகரங்களையும் கடந்த இரண்டு மாதங்களில் பெரிய அளவில் இழந்துவிட்டது. இந்த போர் ஆப்கான் தாலிபான் போர் போல ஒரு முடிவில்லா போராக மாறிவிட்டது.

அமெரிக்க ஜனாதிபதி பைடன்   திடீரென உக்ரைன் சென்றது உலக அரசியலில் பெருமளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த பயணத்தை பைடன் மிகவும் இரகசியமாகத்   திட்டமிட்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க நேரடிப்படி அதிகாலை 4 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி பைடன்  ஏர் போர்ஸ் 757 விமானத்தில் ஏறி இருக்கிறார். இந்த விமானம் சி 32 என்றும் அழைக்கப்படும்.

அமெரிக்க ஜனாதிபதி  எப்போதும் வெளிநாட்டு பயணத்தில் பயன்படுத்தும் விமானங்களை விட இது கொஞ்சம் சிறிய விமானம். அதோடு விமானத்தின் அனைத்து ஜன்னல்களும் இறுக்கமாக மூடப்பட்டு கறுப்பாக காட்சி அளித்தது. உக்ரைன் அதிபரை தவிர  உலக நாடுகள் எதற்கும்     தகவல் தெரிவிக்காமல் பைடன் பறந்துள்ளார். இதனால் உக்ரைனுக்கு பைடன் செல்வது பற்றிய சின்ன க்ளூ கூட  ரஷ்யாவுக்குக் கிடைக்கவில்லை.  பைடனுடன் சிறிய இரானுவக்குழு, , ஒரு மருத்துவக்குழு ,இரண்டு செய்தியாளர்கள்,  இரண்டு ஆலோசகர்கள் மட்டும் சென்றுள்ளனர். இந்த இரண்டு செய்தியாளர்களும் ரகசிய காப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டனர். பைடனுக்கு எதுவும் ஆகும் பட்சத்தில் அதை செய்தியாக, நம்பகத்தன்மையுடன் வெளியிட இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த விமானம்  இவர்கள் அமெரிக்காவின் வாஷிங்டன் ராணுவ தளத்தில் இருந்து ஜேர்மனிக்குச் சென்றது. 'கோல்ஃப் போட்டிக்கான வருகைக்கான வழிமுறைகளை' என்ற இரகசிய வரிகளுடன் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டது. ஏர்ஃபோர்ஸ் ஒன் ஜேர்மனியில் உள்ள ராம்ஸ்டீன் விமான தளத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 5.13 மணிக்கு (இங்கிலாந்து நேரப்படி மாலை 4.13 மணி) ஞாயிற்றுக்கிழமை சிறிது மேகமூட்டமான வானத்தின் கீழ் ஏறக்குறைய ஏழு மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு எரிபொருள் நிரப்புவதற்காக இறங்கியது  உள்ளே இருந்து வெளியே யாரும் அந்த நேரத்தில் செல்லவில்லை. அதன்பின் போலந்தில் தரை இறங்கியது. . அங்கே இருந்து பின்னர் இவர்கள் உக்ரைனுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இதற்காக அந்த விமான நிலையத்தில் இருந்து எஸ்யுவி கார்களில் இவர்களில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். சைரன் இல்லாமல், அமைதியாக காரில் சென்று ரயில் நிலையத்தை அடைந்தனர். போலந்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் இருந்து ரயிலில் உக்ரைன் எல்லைக்குச்  சென்று அங்கிருந்து பின்னர் மீண்டும் காரில் சென்றுள்ளனர்.

உக்ரைன் அகதிகள் இருக்கும் சாலைகள் வழியாக இவர்கள் சாதாரண மக்கள் போல நடந்து  சென்றனர். ஆனால் மக்களோடு மக்களாக அமெரிக்காவின் பாதுகாப்பு படை வீரர்களும் மப்டியில் இருந்துள்ளனர். இந்த கார் பயணம் வழியாக அவர்கள் உக்ரைன் தலைநகரை அடைந்து உள்ளார். 10 மணி நேரம் ரயில் பயணத்தை பிடன் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இரவில் ரயில் ஏறியவர்கள் திங்கள் கிழமை அதிகாலைதான் உக்ரைனுக்குச் சென்றனர். அதன்பின் போர் பாதிக்கப்பட்ட பகுதி வழியாக காரில் சென்று கீவ் பகுதியை அடைந்தனர். இதன்பின்பே 9 மணி அளவில்   செலன்ஸ்கியை ஜோ பைடன்  சந்தித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: