Monday, February 20, 2023

தடுமாறும் பொருளாதாரமும் மின்கட்டண உயர்வும்

பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, டொலர்  பற்றாக்குறை போன்றவற்றுடன்  போராடும்  மக்களுக்கு மின் கட்டண  உயர்வு  மேலும்  ஒரு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

முதல் மின்சாரக் கட்டணத்தை 66 சதவீதத்தால் அதிகரிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு புதன்கிழமை (15) ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரு அறிக்கையை வெளியிட்ட PஊCஸ்ள், பெரும்பாலான உறுப்பினர்கள் கட்டணத்தை அதிகரிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறியது.

PUSLI  ஜனவரி 02 அன்று, அரசுக்கு சொந்தமான மின்சார வழங்குநரான இலங்கை மின்சார சபையிடமிருந்து (CEB) மின்சார கட்டணத்தை66 வீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனையைப் பெற்றது.


 PUSLI  ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்கு கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் ஆனது.உத்தியோகபூர்வ தரவுகளின்படி, CEB 2022 இல் 108 பில்லியன் ரூபாய்களை (291 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) இழந்தது.ஆகஸ்ட் 2022 இல் இலங்கை மின்சாரக் கட்டணத்தை 75 சதவீதத்தால் உயர்த்தியது.எவ்வாறாயினும், CEB தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும், ஜனவரி 2023 இல், அமைச்சர்கள் அமைச்சரவை மற்றொரு கட்டண உயர்வை அங்கீகரித்தது.PUSLI  எந்த கட்டண மாற்றங்களையும் செயல்படுத்துவதற்கு முன் அங்கீகரிக்க வேண்டும்.

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில்   இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, மக்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், இலங்கை வங்கி (BOC) கூடுதல் கடனாக ரூ. 22 பில்லியன் நிலக்கரி கொள்முதல் செய்ய, மின் கட்டண திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய மின் கட்டண திருத்தம்பெப்ரவரி 16 முதல் அமல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

“ஜனவரியில் நாம் கொண்டு வந்த பிரேரணையை ஜனவரியில் நடைமுறைப்படுத்தியிருந்தால், அது எமக்கு இலகுவாக இருந்திருக்கும். எவ்வாறாயினும், எவ்வாறான காலதாமதமான போதிலும் இன்று[ 16 ஆம் திகதி] முதல் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் என நான் கருதுகின்றேன்.

இலங்கை மின்சார சபையின் முன்னைய நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் இந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக வதந்திகளை பரப்புவதற்கு பலர் முயற்சித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த புதிய முறைமையின் செலவை ஈடுசெய்யவே முன்மொழியப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தினார். இன்று முதல் மின்சாரம் உற்பத்தி.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், மின்சாரம் வழங்குவதில் உள்ள செலவை ஈடுசெய்யும் வகையில் கட்டணத்தை வசூலிக்கும் முறை CEBயிடம் இல்லை என்றும், ஆனால் பல்வேறு அரசாங்கங்களின் கீழ், திறைசேரி செலவுக்கும் விதிக்கப்பட்ட கட்டணத்திற்கும் இடையிலான இடைவெளியை நிரப்பியது என்றும் விளக்கினார்.

“எதிர்காலத்தில் வேறு எந்த மின் கட்டண உயர்வும் இருக்கும் என்று நான் நம்பவில்லை. இந்த முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தடையில்லா மின்சார விநியோகத்தை தொடர்ந்தும் வழங்குவதற்கு எமது அரசாங்கம் நம்புகிறது” என அமைச்சர் விஜேசேகர வலியுறுத்தினார்.

மேலும், அடுத்த திருத்தங்களின் மூலம் மக்கள் மீதான சுமை குறையும் என்றும், மக்களின் மின் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

   இலங்கை மின்சார சபையின்  288 பில்லியன் ரூபா  நட்டத்தை ஈடுகட்ட  66%   கட்டண உயர்வு அமுல் படுத்தப்பட்டுள்ளது.  மாதத்திற்கு 90 யூனிட்டுகளுக்குக் குறைவாக எடுக்கும் சுமார் ஐந்து மில்லியன் மின்சார பயனர்களைக் கொண்டுள்ளது. இந்த கட்டண உயர்வு சுற்றுலா ஹோட்டல்கள் உள்ளிட்ட தொழில்துறை பிரிவையும் 150% அதிகரிக்கும். இவை அனைத்தும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளை மேலும் சீர்குலைக்கும். 

வரப்புயர நீர்  உயரும்

நீர்  உயர நெல் உயரும்

நெல்  உயர குடி உயரும்

குடி உயர  கோன்  உயர்வான் என்ற ஒளவையின்  கூற்றை  மின் கட்டணம்   மறுதளிக்கிறது.

மின் கட்டண  உயர்வு இலங்கையில் உள்ள அடிமட்ட  எழைகளைப் பாதிக்க  உள்ளது. மின்சாரத்தின்  தேவை  மிக வும் அதிகரித்துள்ளது. உணவு, உடை, பேக்கரிப் பொருட்கள் ஆகியவற்ரின் விலை யில்  பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது.  மின்கட்டண உயர்வு தொடர்பில் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பல விலை அதிகரிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இதற்கமைய மின் கட்டண உயர்வால் பேக்கரி பொருட்களின் விலையையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என பல பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.பெரும்பாலான பேக்கரி உற்பத்திகள் மின்சாரத்தைப் பயன்படுத்துவதால், மின் கட்டண உயர்வால் நஷ்டம் ஏற்படாத வகையில் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உணவு உற்பத்திக்காக மின்சாரம் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதால் அதற்கான கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடம் அறவிட வேண்டும் எனவும் உணவக உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.இதேவேளை மின்கட்டண உயர்வால் நகல் பிரதி(Pகொடொ cஒப்ய்) ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டண உயர்வு காரணமாக இவ்வாறு நகல் பிரதியின் விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொத்துரொட்டி,  பிரட் ரைஸ் அகியவற்ரின் விலை அதிகரிக்கபப்டும் என  அரிவிக்கப்பட்டுள்லது.

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் 74 இலட்சம் மின்பாவனையாளர்களும் ஒன்றிணைய வேண்டும் என துறைமுகம், பெட்ரோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் நிர்வாக முடக்கல் நடவடிக்கையில் ஈடுபட அவதானம் செலுத்தியுள்ளோம், மின்கட்டண அதிகரிப்பு நாட்டு மக்களுக்கு மரண தாக்குதலாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மின்சார சபை தனது நீண்ட கால நட்டத்தை ஈடுசெய்வதற்காக இவ்வருடத்தில் மேலதிகமாக 288 பில்லியன் ரூபாவை திரட்டிக் கொள்ள உத்தேசித்துள்ளது.

 கடந்த ஐந்து மாத காலத்துக்குள் இருமுறை மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 66 சதவீதத்தால் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் உணர்வுபூர்வமாகச் செயற்படுவதில்லை. தன்னிச்சையாகச் செயற்படும் அரசுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும். 

தொழிற்சங்கங்களால் மாத்திரம் தனித்துச் செயற்பட முடியாது. மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து துறைமுகம், பெட்ரோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளை ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் நிர்வாக முடக்கல் நடவடிக்கையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம்.

தொழிற்சங்கப் போராட்டத்துக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

அரசாங்கத்துக்கு எதிரான  போராட்டமொன்ருக்கு மின் கட்டன  உயர்வு  வழி கோலியுள்ளது.

மத வழிபாட்டிடங்கள் சிலவற்ருகு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.அதிக வருமானம் உள்ள  மத வழிபாட்டுத் தலங்களுக்கான  மின் கட்டணத்தை அறவிட வேண்டும். அரச நிறுவனங்கள், அரசியல்வாதிகளின் நிலுவைகளை  உடனடியாக அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கிஅயின் தொழில் துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: