Sunday, February 19, 2023

ஊசலாடும் உள்ளூராட்சித்தேர்தல்


   பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கி நெருக்கடியில் இருக்கும்  வேளையில்  அரசியல் ரீதியிலான நெருக்கடியும்  இணைந்துள்ளது.

உள்ளூராசி சபைத் தேர்தல் நடக்குமா ஒத்திவைக்கப்படும என்ற விவாதம் அரசியல் களத்தில் சூடான வேளையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலைக் கண்டிப்பாக நடத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. வரும் ஆனா வராது என்ற தமிழ்ப் பட நகைச்சுவைக் காட்சி போல நடக்கும் ஆனா நடக்காது என்ற ரீதியில் அரசாங்கம் செயற்பட்டது. தேர்தல் விவகாரம் நீதிமன்றப்படி ஏறியபோது ஆட்சியளர்கள்  கள்ள  மெளனம் காத்தனர். தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்தால் அரசுக்கு நெருக்கடி தோன்றியது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின.

வேட்பாளர்கலைத் தேடிப்பிடிக்கும் படலத்தை சில அரசியல் கட்சிகள் நடத்தின. அவசர அவசரமாக வேட்பாளர்கள்  இட்டு நிரப்பப்பட்டனர்.சமூக வலைத் தளங்களில் வேட்பாளர்கள் தம்மை அறிமுகப்படுத்தினர்.  பட்டு வேட்டி சால்வையில், கோட் ரை கட்டி பவ்வியமாக கைகளைக் கூப்பியபடி வேட்பாளர்கள் காட்சியளித்தனர். எட்டாம் வகுப்பை எட்டாதவர்களும் கோட் போட்டு  ரைகட்டி பற்கள்தெரிய சிரித்தனர்.வாக்காளர்கள் அவர்களைப் பார்த்து எள்ளிநகையாடினர்.சமூக சேவகர்கள், சமூக ஆர்வலர்கள் என்ர பட்டங்களுடன் நாகரிக  கோமாளிகள் காட்சியளித்தனர்.

தேர்தலில் போட்டியிட நாம் தயார் என வேட்பாளர்கள் களம்  இறங்கிய வேளையில் தேர்தலை நடத்த பணம்  இல்லை என அரசாங்கம்   பின்னடிக்கிறது.

தேர்தலுக்கான நிதியை கட்டம் கட்டமாக வழங்கி தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். , உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அரச அச்சகத்தின் செலவு 400 அல்லது 500 மில்லியன் ரூபாய்களாகும்.தேர்தலுக்கான நிதியை கட்டம் கட்டமாக வழங்கி தேர்தலை நடத்த முடியும்.

அதற்கான முற்பணம் மாத்திரமே தேர்தலுக்கு முன்னர் செலுத்தப்படும். அவ்வாறே கடந்த காலங்களில் இடம்பெற்றது.150 மில்லியன் ரூபாய் முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக நான் நினைக்கின்றேன். 10 பில்லியன் அல்லது 8 பில்லியனே தேர்தலுக்கு முழுமையாக செலவாகும். அவை ஒரே தடவையில் கோரப்படாது. தேர்தலுக்கு முன்னதாக இரண்டரை அல்லது 3 பில்லியனே தேவைப்படும். அந்த தொகையை படிபடிப்படியாக செலுத்த முடியும்.அப்படியெனில் 3 பில்லியன் கிடைத்தால் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறு இல்லாது சட்ட திட்டத்திற்கு அமைய குறுகிய காலத்திற்கு தேர்தலை பிற்போட தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேரிடும்.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் ஊடாக முற்பணத்தை மேலதிகமாக பெற முடியும். காசு கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது என்றார்.

இத்தருணத்தில் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறும் சாக்குப்போக்கை ஏற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலும் பிற்போடப்படும் அபாயம் உள்ளதாக தேர்தல்கள் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதே அடிப்படையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபையை ஒத்திவைத்தால் எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலையும் தாமதப்படுத்துவது சாத்தியமாகும் எனவும் அவர்    தெரிவித்தார்.

தேர்தலை நடத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்பொவதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் அரிவித்துள்ளார் நாட்டின் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரியத் திகதியில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பில் மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. , எதிர்வரும் திங்கட்கிழமை (20.02.2023) இப்போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அத்துடன், இப்போராட்டம் நிதி அமைச்சுக்கு முன்பாகவும், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் நடத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். "தேர்தலை நடத்தாமல் இந்த அரசால் முன்னோக்கிச் செல்ல முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்பட வேண்டும். திங்கள் கொழும்பைச் சுற்றிவளைப்போம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் அனைத்துத் தரப்பினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு மக்கள் ஆணை உள்ளதாக ஒரு பிம்பத்தை ஆளுந்தரப்பினர் உருவாக்கி வைத்துள்ளார்கள் என்றும், இந்த நிலையில் தேர்தலொன்றுக்கு முகம்கொடுத்தால், அவர்கள் தோல்வியடைந்து, அந்த பிம்பம் உடையலாம்.  இறுதியாக நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி பெற்ற அமோக வெற்றிதான், அவர்கள் தேசிய மட்டத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெறும் கட்சிதான், தேசிய மட்டத் தேர்தலிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது. தற்போதுள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் அதிகமானோர் ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களாக உள்ளனர். அதனால் உள்ளூர் மட்டத்தில் பொதுஜன பெரமுனவுக்கு அதிகாரம் உள்ளது. எனவே அதனை இழப்பதற்கு அல்லது பறிகொடுப்பதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள். எனவேதான், தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என, பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.உள்ளூராட்சி சபைத் தேர்தலொன்று நடந்தால், ஆளுந்தரப்பினர் கணிசமான ஆசனங்களை இழப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

.தேர்தல் நடந்தால் தனது பொட்டுக்கேடு வெளிப்பட்டு விடும் என இஅஜாதிபதி அஞ்சுகிறார் போல் தோன்றுகிறது.

No comments: