இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) தொடரின் 16வது சீசன் மார்ச் 31ம் திதி தொடங்குகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் கப்டன்களின் பெயர்களை வெளியிட்டன. எட்டு அணிகளின் கப்டன்களை ஏற்கனவே தெரிந்தநிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் தங்களது கப்டன்களை அறிவித்தனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 வெளிநாட்டு கப்டன்கள் ஐபிஎல் அணிகளை வழிநடத்தப் போகிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் விபத்தில் காயமடைந்த ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக
அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய அக்ப்டனமாக நியமிக்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கப்டனாக தென்
ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரமை நியமித்தது. 2022ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
(ஆர்சிபி) தென்னாப்பிரிக்காவின் ஃபாஃப் டு பிளெசிஸை கப்டனாக நியமித்தது. இந்த 3 அணிகளில்
மட்டுமே தற்போது வெளிநாட்டு கப்டன்கள் உள்ளனர். மீதமுள்ள 7 அணிகளிலும் இந்திய கேப்டன்கள்
மட்டுமே உள்ளனர். 6 ஆண்டுகளுக்குப் பிறகு 3 வெளிநாட்டு கேப்டன்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும்
நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷேன் வார்னே தலைமையின்
கீழ் கோப்பை வென்றது. அடம் கில்கிறிஸ்ட் 2009 இல் டெக்கான் சார்ஜர்ஸ், 2016 இல் டேவிட்
வார்னர் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும்
சம்பியனாகி உள்ளன. இந்த 3 வெளிநாட்டு கப்டன்கள் தவிர 12 முறை இந்திய கப்டன்கள்
தலைமையில் அணிகள் வெற்றி பெற்றன.
ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி 5 முறையும், டோனி தலைமையில் சென்னை அணி 4 முறையும் வென்றுள்ளனர். அதேபோல், கௌதம் காம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி இரு முறையும், கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் அணி கோப்பையை வென்றது.
அணிகளும் -கப்டன்களும்:
சென்னை சூப்பர் கிங்ஸ்
- மகேந்திர சிங் டோனி
டெல்லி கேப்பிடல்ஸ் - டேவிட் வார்னர்
குஜராத் டைட்டன்ஸ்-ஹர்திக் பாண்டியா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஷ்ரேயாஸ் ஐயர்
லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் - கே.எல்.ராகுல்
மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா
பஞ்சாப் கிங்ஸ் - ஷிகர் தவான்
ராஜஸ்தான் ராயல்ஸ் - சஞ்சு சாம்சன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டு பிளெசிஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - எய்டன் மார்க்ரம்
No comments:
Post a Comment