Thursday, February 16, 2023

ஸ்டிங் ஒபரேசனில் வசமாகச் சிக்கிய சேத்தன் சர்மா


 இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா கொளுத்தி போட்ட தீ இந்திய அணிக்குள் காட்டு தீயாக பரவ தொடங்கி உள்ளது. முக்கியமாக இந்திய வீரர்கள் ஊசி போட்டுக்கொள்வதாக இவர் சொன்னது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பல்வேறு ரகசியங்களை ஜீ நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள   புலனாய்வு செய்தி மூலம் வெளியிட்டு உள்ளது. அதில், இந்தியாவின் முன்னாள் கப்டன் கோலி - கங்குலி இடையே இருந்த மோதல்,இந்திய அணியில் சில கிரிக்கெட் வீரர்கள் பிட்டாக இல்லை. அவர்கள் ஊசி போடுகிறார்கள். இவர்கள் வெறும் 80 சதவிகிதம் உடல் தகுதியோடு இருக்கும் போதே ஊசி போடுகிறார்கள்.இந்திய கப்டன் ரோகித் சர்மா, ஆல்ரவுண்டர் ஹர்திக் பா.ண்ட்யா தங்களுக்கு சலுகை கேட்டு தன் வீட்டுக்கே வந்ததாகவும் பொன்ற பல ரகசியங்களை  இந்திய அணியின் அணி தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவராக பதவி வகித்து வருபவர் சேத்தன் சர்மா. இவரது தலைமையிலான குழு தேர்வு செய்து அனுப்பும் அணி குறித்து தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்ததற்கு மோசமான அணி தேர்வே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து சேத்தன் சர்மா உட்பட அவர் தலைமையிலான குழு மொத்தமாக கலைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் சேத்தன் சர்மா மீண்டும் அதே பொறுப்பில் அமர வைக்கப்பட்டு உள்ளார். இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பிய நிலையில், தனியார் தொலைக்காட்சி ரகசிய கேமராவை வைத்து இவரிடம் பேசி ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. அதில் பிசிசிஐயில் நடக்கும் அரசியல், அணி தேர்வு உள்ளிட்ட பல ரகசியங்களை அவர் வெளியிட்டார்.

 அதில் பேசிய சேத்தன் சர்மா, "சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோது விராட் கோலியை இந்திய அக்ப்டன் பதவியில் இருந்து நீக்க விரும்பவில்லை. ஆனால், சவுரவ் கங்குலிக்கும் விராட் கோலியை பிடிக்காது. விராட் கோலியை இந்திய அணியின் கப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை அக்ப்டனாக கொண்டு வர வேண்டும் என தேர்வுக்குழுவே முடிவு செய்தது.அதில் பேசிய சேத்தன் சர்மா, "சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோது விராட் கோலியை இந்திய கப்டன் பதவியில் இருந்து நீக்க விரும்பவில்லை. ஆனால், சவுரவ் கங்குலிக்கும் விராட் கோலியை பிடிக்காது. விராட் கோலியை இந்திய அணியின் கப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை கப்டனாக கொண்டு வர வேண்டும் என தேர்வுக்குழுவே முடிவு செய்தது.

நாங்கள் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக செயல்படவில்லை. விராட் கோலிக்கு மட்டுமே எதிராக செயல்பட்டோம். கப்டன் பதவி தொடர்பாக இந்திய அணிக்கு உள்ளேயே நிறைய பிரச்சனைகள் சென்றுகொண்டு இருந்தன. கப்டன் பதவிக்கான போட்டியும் அதிகமாக இருந்தது. விராட் கோலி மோசமான ஃபார்மில் இருந்ததை வாய்ப்பாக பயன்படுத்தி அவர் கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ரோகித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் தங்களுக்கு சலுகை வழங்குமாறு அடிக்கடி எனக்கு தொடர்புகொண்டே இருந்தனர். அடிக்கடி என்னுடைய வீட்டுக்கும் அவர்கள் வருகை தந்தனர். ரோகித் சர்மா நீண்ட காலம் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டார். ஹர்திக் பாண்டியாதான் இந்திய அணியின் ரி20 கேப்டனாக செயல்படுவார் எனத் தெரிவித்துள்ளார்.

 இந்திய அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாவிடம் நடத்தப்பட்ட ஸ்டிங் ஆப்ரேஷன் பிசிசிஐ அமைப்பை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறதாம். பிசிசிஐ அமைப்பு இதனால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments: