பாகிஸ்தானுக்குச் சென்ற நியூஸிலாந்து அணி ரி 20 போட்டியை சமப்படுத்தியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. அதில் முதல் போட்டியில் போராடி வென்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் 2வது போட்டி ஏப்ரல் 29ஆம் திகதி மாலை 4 மணிக்கு ராவல்பிண்டி நகரில் துவங்கியது. நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
நியூஸிலாந்து
முதலில் துடுப்பெடுத்தாடியது.முதல் ஓவர் முடிந்ததும்
வழக்கத்திற்கு மாறாக மைதானத்தில் ஏதோ
ஒன்று வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்த நடுவர்கள் இருவரும்
உடனடியாக போட்டியை நிறுத்தி விட்டு பேசினார்கள். குறிப்பாக
பிட்ச்சை சுற்றியிருக்கும் 30 யார்ட் உள்வட்டத்தின் அளவு
அதிகமாக இருப்பதாக உணர்ந்த அவர்கள் ஒருவருக்கொருவர்
அதைப் பேசி உறுதி செய்தனர்.
அதை தொடர்ந்து சரியான தூரத்தை அளந்து
உள்வட்டத்தை குறிக்கும் வட்ட வடிவிலான வெள்ளை
துண்டுகளை 2 நடுவர்களும் பாகிஸ்தான் வீரர்களை வைத்தே சரியான இடத்தில்
போட வைத்தனர்.
100 வருடங்களுக்கு முன்பாக
துவங்கப்பட்ட கிரிக்கெட்டில் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பவுண்டர்களின் எல்லை
மாற்றப்பட்டாலும் 30 யார்ட் உள்வட்டம் மட்டும்
இன்னும் மாறாமலேயே இருந்து வருகிறது. அதை
பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்த நிலையில் இதற்கு முன் இப்படி
ஒரு நிகழ்வை பார்த்ததில்லை என்று
வியப்பை வெளிப்படுத்திய வர்னணையாளர்கள் இதை யார் செய்திருப்பார்
என்று நேரலையில் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு
மற்றொரு வர்னணையாளர் நிச்சயமாக நாம் இருவரும் செய்யவில்லை
என்று கலகலப்பாக தெரிவித்தார்.
உள்
வட்டத்தின் அளவை இப்படி பெரிதாக
மாற்றினால் பவர் பிளே ஓவர்களில்
நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பவுண்டரிகளை பறக்க விட முயற்சிக்கும்
போது கேட்ச் கிடைப்பதற்கு அதிக
வாய்ப்பு ஏற்படும்.
மைதான பரிமாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் தவறாக 30 யார்டை அளந்திருப்பார்கள் என்றும் பாகிஸ்தான் அணியினர் இதில் எந்த தலையிடும் செய்யவில்லை என்றும் அந்நாட்டு ரசிகர்கள் கூறுகின்றனர்
No comments:
Post a Comment