ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என ஒரு கூட்டம் இருக்க, இன்னொரு கூட்டமோ டிக்கெட்டுகளை கையில் வைத்துக்கொண்டு ஆட்டத்தையும் நேரில் காண வராமல் இருப்பதால் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் முழுமையாக காணப்படாமல் சில பகுதிகள் காலியாகவே உள்ளது. சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகி விட்டன. ஆனால், ரிக்கெர்களை வாங்குவதில் பல்வேறு விதமான சிக்கல்களும், சிரமமும் ஏற்பட்டிருப்பதால் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளையும் மைதானம் முழுக்க நிரம்பி
வழிந்து ரசிகர்கள் கண்டுகளிப்பதுடன் கொண்டாடி மகிழ்வது அனைவரும் அறிந்த விஷயம். இதில்
சிஎஸ்கே போட்டி என்றால் போதும், எப்பாடுபட்டாவது டிக்கெட்டுகளை வாங்கி ஆட்டத்தை நேரில்
காண வேண்டும் என தவம் கிடக்கும் ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். வியாபார நோக்கம்
கொண்ட சிலர் ரிக்கெற்களை வாங்கி ச்திக விலைகு
விற்பனை செய்கிரார்கள்> ரூ. 750 மதிப்புள்ள
டிக்கெட்டுகள் பிளாக் மார்கெட்டில் ரூ. 4 முதல் ரூ. 5 ஆயிரம் வரை சமூக வலைத்தளங்களில்
விற்பனை செய்வதாகவும் புகார் கூறுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டியை
காண விரும்பும் ரசிகர்கள் அதற்கான டிக்கெட்டுகளை வாங்குவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் 12ஆம்
தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகியது.
இதற்கான டிக்கெட் விற்பனை கவுண்டர், ஆன்லைனில் ஏப்ரல் 9 முதல் தொடங்கியுள்ளது.
இதையடுத்து டிக்கெட்டுகளை வாங்குவதற்காக முந்தைய நாள் இரவில் இருந்தே சேப்பாக்கம் மைதானத்தில்
கால காடுக்க காத்திருக்க தொடங்கினர். இதேபோல் ஆன்லைனிலும் டிக்கெட் விற்பனை தொடங்கியவுடன்
இணையத்திலும் ஏராளமானோர் புக்கிங் செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் ஆன்லைன் டிக்கெட்டுகள்
சற்று நேரத்திலேயே விற்று தீர்ந்து விட்டதாகவும் வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கவுண்ட்டர் டிக்கெட்டுகளும் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முடிந்துவிட்டதாக
தெரிவிக்கப்பட்டது நீண்ட வரிசையில் காத்துக்கிடத்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் தேவை மற்ற ஐபிஎல் போட்டிகளை விட மிகவும்
அதிகமாக இருந்து வரும் நிலையில், 40 சதவீதம் டிக்கெட்டுகள் மட்டும் விற்பனைக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக
ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.இப்படியொரு சூழ்நிலையில் ரூ.
750 மதிப்புள்ள டிக்கெட்டுகள் பிளாக் மார்கெட்டில் ரூ. 4 முதல் ரூ. 5 ஆயிரம் வரை சமூக
வலைத்தளங்களில் விற்பனை செய்வதாகவும் புகார் கூறுகின்றனர்.சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்
விற்பனை விஷயத்தில் அணி நிர்வாகத்தின் தவறான நடவடிக்கை பற்றி ரசிகர்கள் பலரும் சமூக
வலைத்தளங்களில் விமர்சித்துள்ளனர்.
கடந்த மாதம் இந்தியா - அவுஸ்திரேலியா இடையே சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிக்கான டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்பனை செய்ததாக போலீசார் 13 பேரை கைது செய்தனர். இதையடுத்து இதேபோன்று ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்பனையும் பிளாக்கில் படுஜோராக நடைபெற்று வருவதும், அதை தடுப்பதற்கு எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என ரசிகர்கள் குமுறுகின்றனர்.
No comments:
Post a Comment