தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல் ஸ்டாலினின் அரசங்கத்துக்கு எதிராக காய்களை நகர்த்துவதையே ஆர்.என்.ரவி செய்து வருகிறார். ஆளுநரைத் தட்ட வேண்டிய நேரத்தில் தட்டி ,குட்ட வேண்டிய இடத்தில் குட்டி தனது பலத்தை வெளிப்படுத்துகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழக அரசு நிறை வேற்றி அனுப்பிய தீர்மானங்களை கிடப்பில் போட்டார் ஆளுநர் ரவி.
ஒன்லைன் ரம்மியைத் தடை செய்வதற்கு தமிழக அரசு தீர்மானம் நிறை வேற்றியது. 131 நாட்கள் கிடப்பில்
போட்டு விட்டு ஆளுநர் திருப்பி அனுப்பினார். அதற்கிடையில் 14 பேர் தற்கொலை
செய்தனர். தமிழ்நாட்டில் ஒன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்தவர்கள் தொடர்ந்து தற்கொலை
செய்துவரும் நிலையில், இந்த விளையாட்டைத் தடைசெய்ய வேண்டுமென பரவலான கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து இந்த விளையாட்டைத் தடைசெய்யும் சட்டம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேயே
நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தை நீதிமன்றம் இரத்து செய்தது.
இணையவழி சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக, தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கே. சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைத்து. அரசின் சார்பில் அமைக்கப்பட்ட இக்குழு தனது அறிக்கையினை முதலமைச்சரிடம் வழங்கியது.
இணையதள விளையாட்டைத் தடுப்பது தொடர்பாக அரசால் இயற்றப்பட்ட, உத்தேசிக்கப்பட்டுள்ள
சட்டம் குறித்து பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மனநல
ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள், இணையவழி விளையாட்டுத் தொழில் நிறுவனர்கள் ஆகியோரிடம்
7௮௨022 அன்று கருத்துகள் கேட்கப்பட்டன. பொதுமக்களிடமிருந்து 10,735 மின்னஞ்சல்கள் பெறப்பட்டன.
அதில், 10,708 மின்னஞ்சல்களில், இணையதள சூதாட்டத்தையும், இணையதள ரம்மி விளையாட்டையும்
தடை செய்வதற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது*சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற
நீதியரசர் கே. சந்துரு குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், பள்ளிக் கல்வித்
துறையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையிலும், இணையதள விளையாட்டு உரிமையாளர்கள்
மற்றும் இதர தரப்பினரிடையே நடத்தப்பட்ட ஆலோசனையின்படியும், பொதுமக்களின் கருத்துக்களின்
அடிப்படையிலும், ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு 26.9. 2022 அன்று அமைச்சரவையில்
ஒப்புதல் பெறப்பட்டது. இந்தச் சட்டத்தைத்தான் தனி மனிதரான ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பாடம் புகட்டுவதர்காக அவருக்கு எதிராக தீர்மானம்
கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் இரண்டு முக்கியமான விதிகளை சட்டசபையில் தளர்த்தினார்.சட்டசபை மாண்புகளை அவமதிக்கும்
வகையில் ஆளுநர் செயல்படுகிறார் . சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம்
செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும்
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானம்
தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதி
உள்ளது. சட்டசபையில் ஆளுநர் பற்றி விவாதிக்க கட்டுப்பாடு உள்ளது. அதனால் முதல்வர் ஸ்டாலின்
தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றால், அதற்காக விதிகளை தளர்த்த வேண்டும். இதையடுத்து அவையில் ஆளுநரை பற்றி விவாதிக்க கூடாது என்ற விதிகளை
தளர்த்துவதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தார் அவை முன்னவர் துரைமுருகன். ஸ்டாலினின் உரைக்கு
வழி தரும் விதமாக இன்று இரண்டு விதிகள் தளர்த்தப்பட்டன.
1995ல் சென்னா ரெட்டி காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இப்படி செய்துள்ளார். அதாவது ஆளுநருக்கு எதிராக அப்போது தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் அப்போது 92/7 விதி மட்டும் நீக்கப்பட்டது. ஏன் என்றால் அப்போது 287 விதி இல்லை. 1999ல் முதல்வர் கருணாநிதி ஆளுநர் பதவிக்கு ஒரு வித பாதுகாப்பு மற்றும் மரியாதையை வழங்க வேண்டும் 287 சட்டத்தை கொண்டு வந்தார். ஆளுநருக்கு இது ஒரு கூடுதல் பாதுகாப்பை கொடுத்தது. தற்போது இந்த இரண்டு சட்டங்களையும் நீக்கிவிட்டு முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். இந்த விதிகளை நீக்க சபையில் உள்ளவர்களில் 4ல் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை. பொதுவாக குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதாவது ஆதரிப்பவர் ஆம் என்க.. எதிர்ப்பவர் இல்லை என்க என்று கூறுவார். இதை எதிர்த்து குரல் வந்தால்.. எதற்கு ஆதரவாக குரல் வருகிறது என்று பார்க்கப்படும். ஆனால் ஆளுநர் பற்றி விவாதிக்க கூடாது என்ற விதியை தளர்த்தும் தீர்மானத்திற்கு குரல் வாக்கெடுப்பிற்கு பதிலாக உறுப்பினர்கள் எழுந்து நிற்பார்கள். அவர்களின் தலைகள் எண்ணப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதாவது எதிர்ப்பவர்கள் எழுந்து வாக்களிக்க வேண்டும். ஆதரிப்பவர்கள்
எழுந்து தனியாக வாக்களிக்கலாம். நடுநிலை முடிவில் இருப்பவர்களும் அப்படி வாக்களிக்கலாம்.
இவர்களின் தலைகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 2017க்கு பின் முதல்முறையாக இப்படி தமிழ்நாடு சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
எப்போதும் தலை வாக்கெடுப்பு நடத்தும் போது அவை கதவுகள் அடைக்கப்படும். இன்றும் இதன்
தீர்மானத்தின் மீது வாக்கெடுப்புக்காக பேரவை கதவுகள் அடைக்கப்பட்டன.
1993 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் ஆளுநராக சென்னா ரெட்டி இருந்தார்.
அப்போது சட்டசபையில் இதேபோல் ஆளுநருக்கும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு மோதல்
ஏற்பட்டது. அதோடு சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோதுதான், தன்னிடம் அவர் தகாத முறையில்
நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டினார். இதனால் சட்டசபையில் மிகப்பெரிய மோதலே அப்போது
வெடித்தது. அதன்பின் தமிழ்நாடு அரசியலில் ஆளுநருக்கும் - முதல்வருக்கும் இடையில் சட்டசபையிலேயே
மோதல் வெடித்தது இல்லை. முக்கியமாக மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார்
என்று கூறி சென்னாரெட்டி வாகன அணிவகுப்பைத் தடுத்து நிறுத்த வைத்தார் ஜெயலலிதா. திண்டிவனம்
அருகே அவரை வழிமறித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கடும் அழுத்தம் கொடுத்தனர்.
ஆளுநர் சென்னா ரெட்டி அப்போதெல்லாம் வெளியே வருவதே பெரிய பிரேக்கிங் செய்தியாக இருந்தது.
மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர்
விருந்துகளை ஜெயலலிதா புறக்கணித்தார். அதிமுக எம்எல்ஏக்களை மட்டுமின்றி அரசு தலைமைச்
செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு போகக் கூடாது என்று
கடும் உத்தரவும் பிறப்பித்தார். ஜெயலலிதா சென்னா ரெட்டிக்கு பெரிய சிம்ம சொப்பனமாக
இருந்தார். தற்போது முதல்வர் ஸ்டாலினும் ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக அதே வழியில்
செல்கிறார். தமிழக சட்ட சபையில் என்ன நடக்கப்
ஓகிறது என்பதை முன் கூட்டியே தெரிந்த எடப்பாடி
தரப்பு வெளிநடப்புச் செய்தது. தமிழக நலனுக்கான தீர்மான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. பாரதீய
ஜனதாவின் இரண்டு உறுப்பினர்கள் அகப்பட்டு
விட்டார்கள். வெளியேற முடியாது கதவு அடைக்கப்பட்டதால் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்துகு
எதிராக வாக்களித்தனர்.
சபையில் இருந்தவர்களில்
இருவர் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர்.
காலையிலளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாலையில் ரம்மிதடைச் சட்டத்துக்கு ஆளுநர் ரவி
ஒப்புதலளித்துள்ளார். அரசினர் தீர்மானத்தின் நல்விளைவாக, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு
ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
முதல்வர் தனது உரையில், இன்று காலை நாம் நிறைவேற்றி அனுப்பிய அரசினர்
தனித் தீர்மானத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைச் சட்டம் குறித்த மசோதா உள்ளிட்ட
பல்வேறு மசோதாக்கள் ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு, நிலுவையில் உள்ளதைச்
சுட்டிக்காட்டி, இதனால் தமிழ்நாட்டின் நிருவாக நலனும், இளைஞர்களின் எதிர்காலமும் எவ்வாறு
பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டியிருந்தோம்.மேலும், பொது வெளியில் ஆளுநர்
தெரிவித்து வரும் சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்தும் நாம் இங்கு குறிப்பிட்டிருந்தோம்
எனட் த்தெரிவித்தார்.
தமிழக அரசுகுக் கிடைத்த மிகப் பெரு வெற்ரிகளில் ஒன்ராக இது கருதப்படுகிறது. அரசியல் ரீதியாக தமிழக அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளிக்கு பணிந்து போவதைத் தவிர வேரு எதனையும் ஆளுநரால் செய்ய முடியாத நிலை உள்ளது.
No comments:
Post a Comment