Sunday, April 9, 2023

ஒலிம்பிக் ரிக்கெற்களை இலவசமாக வழங்க ஏற்பாடு

பரிஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் போட்டிகளுக்கான இலவச ரிக்கெற்களை  "Tous aux Jeux" திட்டத்தின் கீழ் விநியோகிக்க  பிரெஞ்சு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு சுமார் €11 மில்லியன் (£9.6 மில்லியன்/$12 மில்லியன்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வியாட்டுத் தொண்டர்கள்,  ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்,  சட்ட அமலாக்கப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் போன்ற தொழில்களில் இருப்பவர்கள்,மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களுக்கு இலவச ரிக்கெற்கள்  விநியோகிக்கப்படும் என்று ஒலிம்பிக் மற்றும் விளையாட்டு அமைச்சர் அமெலி ஓடியா-காஸ்டெரா கூறினார்.

ஒலிம்பிக் ரிக்கெற்களின் விலை அதிகம் என்ற  குற்றச்சாட்டு இருந்த போதிலும்  முதல் கட்ட ரிக்கெற்கள்  அனைத்தும் விற்பனையாகிவிட்டன.


No comments: