Wednesday, April 26, 2023

ராசி இல்லாத பச்சை நிற சீருடை


 ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை  சின்னசாமி ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட போது பச்சி சீருடை அணிந்து விளையாடியது. ஆர்.சி.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களில் இந்த சிறப்பான க்ரீன் நிற ஜெர்சி 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டவை. ” என்று பதிவிட்டு இருந்தது.

இந்த ஆண்டு ஆர்சிபி அணிக்காக தயாரிக்கப்பட்ட பச்சை நிற சீருடை, மைதானத்தில் சேகரிக்கப்பட மறுசூழற்சி செய்யப்பட்ட கழிவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி இந்தாண்டு தனது முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான சின்னசாமி மைதானத்தில் விளையாடியது. அதில், 9047.6 கிலோ கழிவுகளும், 19,488 தண்ணீர் பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது. அதேபோல், ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் சராசரியாக எட்டு தொன் உலர் கழிவுகள், உணவுக் கழிவுகள் மற்றும் பிற மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் மைதானத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. 

2008 ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் இல விளையாடுகிறது. கடந்த 2011ம் ஆண்டு முதல் ‘கோ க்ரீன்’ என்ற சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பச்சை நிற சீருடையில்  விளையாடி வருகிறது. கடந்த 2021 ம் ஆண்டை தவிர பெங்களூர் அணி அனைத்து ஆண்டுகளும் பச்சை நிற சீருடை  அணிந்து விளையாடியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மட்டும் முன்களப் பணியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நீல நிற சீருடை  அணிந்து பெங்களூரு அணி விளையாடியது.

பெங்களூர் அணி பச்சை நிற சீருடை  அணிந்து விளையாடிய போதெல்லாம் அந்த அணிக்கு பெரியளவில் ராசியாக அமைந்ததில்லை. இதுவரை 13 போட்டிகளில் பச்சை நிறசீருடையுடன் விளையாடி அதில் 4ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மீதமுள்ள 8 போட்டிகளில் எதிரணிகளே வெற்றிபெற்றுள்ளனர். ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

No comments: