இலங்கையின் வரப்பிரசாதங்களில் இலவசக் கல்வி முதன்மையானது. இலவசமாகக் கல்வி கிடைத்தாலும் வயிற்றுப் பசி மாணவர்களை வாட்டியது. சாப்பாடு இல்லாமல் சில மாணவர்கள் பாடசாலைக்குச் செல்கின்றனர். சாப்பாடு இல்லாததால் சில மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில்லை. மதிய உணவுத் திட்டம் மணவர்களுக்கு பெரும் கொடையாக அமைந்தது.
மதிய உணவு சத்துணவாகக்
கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம்
1.1 மில்லியன் மாணவர்கள் பயனடைகிறார்கள்.
பணிஸ், பிஸ்கற் போன்றவை
முன்னர் பாடசாலைகளில் கொடுக்கபட்டன. பின்னர்
அந்த நடைமுறை கைவிடப்பட்டது. இப்போது மதிய
உணவு மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது.அந்த உணவுத் திடத்திலும் இடி விழுந்துள்ளது.உணவு விநியோகம் செய்பவர்களுக்குக்
கொடுக்கப் பணம் இல்லாமையால் இந்தத் திட்டம் முடங்கும் அபாயம் உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக உணவு விநியோகம்
செய்பவர்களுக்கு கடந்த இரண்டு மதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
ஒரு காலத்தில் மாஅவர்களின் வருகை கணிசமாகக் குறைந்திருந்தது, காலை உணவில் குழந்தைகளுக்கு
சரியான உணவு கிடைக்காததே இதற்குக் காரணம் என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மாணவர்களின் உணவில் முதல் வேளை உணவு இல்லாததால், பாடசாலைகளில் காலை கூட்டங்களில் குழந்தைகள் மயக்கம் அடைவதாக செய்தி
வந்தது.அப்போதுதான் 'சமூக உணவு பகிர்வு' இணைந்து ஒரு முன்னோடி நிகழ்ச்சியை நடத்தியது.
'உணவு பகிர்வு', கல்வி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட வலய மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர்களுடன்
இணைந்து இதனை முன்னெடுத்தனர்.
பள்ளி மாணவர்களின் உதவிக்கு வரும் பரோபகாரர்கள் மற்ற பாத்திரங்களை
நாங்கள் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஒன்று, மதிய உணவு திட்டத்திற்கு சில உதவிகளை
வழங்க பிரெஞ்சு அரசாங்கம் முன்வந்தது. மற்றொரு சந்தர்ப்பம், சீன அரசாங்கம் 70% பள்ளி
சீருடைகளை இலவசமாக வழங்க முன்வந்தது.
பாடசாலைகளுக்கு உணவு விநியோகம் செய்பவர்களுக்கு நிலுவையில் உள்ள கடன்களைத் தீர்க்க உலக வங்கி
நிதி பயன்படுத்தப்படும். பள்ளி உணவுத் திட்டத்திற்கான ஆதரவைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம்
பள்ளிகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு நிலுவையில் உள்ள கடன்களைத் தீர்க்க உலக வங்கி
நிதி பயன்படுத்தப்படும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். பள்ளி உணவுத் திட்டத்திற்கான
ஆதரவைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் (GoSL) 'வெளியில் இருந்து' உதவி வருகிறது என்பதை
அறிந்து கொள்வது எப்போதும் நல்லது. இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக அமைச்சர்
உறுதியளித்துள்ளார் 'வெளியில் இருந்து' உதவி வருகிறது என்பதை அறிந்து கொள்வது எப்போதும்
நல்லது. இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்
. இந்த வருடம் பெப்ரவரி , மார்ச் மாதங்களில் உணவு விநியோகம் செய்பவர்களுக்கு
பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும்
வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த புதன்கிழமை
(26) தெரிவித்தார்.
மேல் மாகாணம் தவிர்ந்த
நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. விநியோகம் செய்பவர்கலுக்கு
செலுத்த வேண்டிய இந்த இரண்டு மாதங்களுக்கு 875 மில்லியன் ரூபாய் நிலுவையில் உள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த திட்டத்திற்காக 16.6 பில்லியன்
ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும், பொருளாதார நெருக்கடி காரணமாக கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன.
பிரேமஜயந்த, உலக வங்கியின் நிதியைப் பயன்படுத்தி அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள்
நிலுவைத் தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பிரேமஜயந்த .
மாணவர்களின் பசியுடன் விளையாடாமல் அவர்களின்பசியைப் போக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment