உக்ரைனில் ரஷ்யாவின் "சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு" பின்னர், நாடு பல முனைகளில் பின்னடைவை எதிர்கொண்டது. இதன் தாக்கங்கள் வெறும் அரசியல் சார்ந்ததாக இருக்கவில்லை, மாறாக நாட்டின் விளையாட்டையும் பெரிதும் பாதித்துள்ளது.
2024 ஒலிம்பிக்கில் ரஷ்யா தடை செய்யப்பட்ட பின்னர்
,பீபா, UEFA ஆகியவை ஒரு கூட்டறிக்கையை மூலம் சர்வதேச போட்டியில் இருந்து ரஷ்யாவை தடை
செய்தது. கட்டாரில் நடந்த உலகக்கிண்ண உதைபந்தாட்டப்
போட்டியில் ரஷ்யா விளையாடத் தடை விதிக்கப்பட்டது.ரஷ்யக்கொடி, ரஷ்ய தேசிய கீதம் இல்லாமல் நடுநிலை வீரர்களாக சில போட்டிகளில் வீரர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.
ஐரோப்பிய
உதைபந்தாட்டகூட்டமைப்பு ரஷ்யாவைத் தடை செய்ததால்
ஆசிய உதைபந்தாட்ட கூட்டமைப்பில் சேர
ரஷ்யா விரும்புகிறது.
ரஷ்யாவின்
முக்கால்வாசி நிலப்பரப்பு ஆசியாவில் இருப்பதால், அந்த நாடு ஆசிய கால்பந்து கூட்டமைப்புடன்
இணைந்து 2026 உலகக் கோப்பையில் இடம் பெறுவதற்கான
தகுதிச் சுற்றில் விளையாடும் வாய்ப்பு உள்ளது.
ரஷ்யாவின்
முக்கால்வாசி நிலப்பரப்பு ஆசியாவில் இருப்பதால், அந்த நாடு ஆசிய கால்பந்து கூட்டமைப்பில்
(AFC) இணைந்து 2026 உலகக் கோப்பையில் இடம் பெறுவதற்கான AFC தகுதிச் சுற்றில் விளையாடும்
வாய்ப்பு உள்ளது. ரஷ்யாவின் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை
என்றாலும், அதன் போட்டிகளில் பங்கேற்பதன் மூலமும் அழைப்புகளைப் பெறுவதன் மூலமும் நாடு
ஆசியாவில் சீராக முன்னேறி வருகிறது.
இஸ்ரேல்ஆரம்பத்தில் ஆபிரிக்க உதைபந்தாட்ட கூட்டமைப்பில் விளையாடியது. 1973 யோம் கிப்பூர் போருக்குப் பிறகு இஸ்ரேல் மீது பிராந்தியத்தில் அதிகரித்த விரோதப் போக்கின்காரணமாக 1974 ஆம் ஆண்டு ஆசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது. .
சர்வதேச கால்பந்தில் இருந்து இடைவெளி எடுத்த பிறகு, இஸ்ரேல் ஐரோப்பிய தகுதிச் சுற்றுகளில் விளையாடியது மற்றும் ஓசியானியா தகுதிச் செயல்முறையிலும் பங்கேற்றது. 1991 இல் இஸ்ரேலின் இருந்து கிளப்கள் ஐரோப்பிய கிளப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கின, அதன் கால்பந்து சங்கம் 1994 இல் முழு UEFA உறுப்பினரானது.
No comments:
Post a Comment