இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் போது முழங்காலில் பலத்த காயம் அடைந்த நியூஸிலாந்து கப்டன் கேன் வில்லியம்சன், ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்காமல் இருக்க வாய்ப்புள்ளது.
வில்லியம்சனின் வலது முழங்காலில் முன்புற சிலுவை தசைநார் சிதைந்ததை நியூஸிலாந்து கிரிக்கெட் உறுதிப்படுத்தியது. அடுத்த மூன்று வாரங்களில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் , நவம்பர் மாதங்களில் உலகக் கிண்ணப் போட்டியை வழிநடத்த வில்லியம்சன் தகுதியற்றவராக இருப்பார் என்று நியூஸிலாந்து கிரிக்கெட் கூறியது.
"கடந்த சில நாட்களாக நான் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளேன், அதற்காக குஜராத் டைட்டன்ஸ் (ஐபிஎல்) மற்றும் நியூஸிலாந்து கிரிக்கெட் ஆகிய இரு அணிகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று வில்லியம்சன் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இயற்கையாகவே இதுபோன்ற காயம் ஏற்படுவது ஏமாற்றமளிக்கிறது, ஆனால் இப்போது எனது கவனம் அறுவை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தொடங்குவதில் உள்ளது.. இது சிறிது நேரம் எடுக்கும், ஆனால் விரைவில் களத்திற்கு திரும்புவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்றார்.
No comments:
Post a Comment