இடதுகை துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னர் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வலது கையில் பேட்டிங் செய்து அசத்தியது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று
வருகிறது. இந்த நிலையில், போட்டித் தொடரின் 16வது ஆட்டத்தில் அருண்ஜெட்லி மைதானத்தில்
மும்பை - டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் 8வது ஓவரை இளம் சுழற்பந்துவீச்சாளர்
ஹிரித்திக் வீசினார். அப்போது அவர் அந்த ஓவரின் 4வது பந்தை நோ pooலாக வீசினார். இதையடுத்து,
ப்ரீ ஹிட் வழங்கப்பட்டது. ப்ரீ ஹிட்டாக கிடைத்த பந்தை டெல்லி கப்டன்
டேவிட் வார்னர் எதிர்கொண்டார்.
ப்ரீஹிட் பந்தில் ரன் அவுட் தவிர மற்ற முறைகளில் ஆட்டமிழந்தால் அவுட்டாக கருதப்படாது என்பதால் இடது கை வீரரான வார்னர் வலது கையில் பேட்டிங் செய்தார். அந்த பந்தை அவர் விளாசினாலும் அதில் ஒரு ஓட்டம் மட்டுமே கிடைத்தது. இடது கையில் அதிரடியில் மிரட்டும் வார்னர் வலது கையில் பேட் செய்த காட்சி ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியது.
கப்டனாக மட்டுமின்றி வீரராகவும் தன்வசம் பல்வேறு சாதனைகளை வைத்துள்ள டேவிட் வார்னர் இதுவரை 166 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி6 ஆயிரத்து 85 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் 57 அரைசதங்கள் அடங்கும். 4 சதங்களும் அடங்கும். ஒட்டுமொத்த ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஓட்டங்கள், அதிக அரைசதங்கள், அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் டாப் 3 இடங்களுக்குள்ளே வார்னர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த போட்டியில் அரைசதம் விளாசிய டேவிட் வார்னர் ஐ.பி.எல். போட்டிகளில் 600 பவுண்டரி விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
No comments:
Post a Comment