Tuesday, April 25, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி


 ஒளிப்பதிவு,இயக்கம் ஆகியவற்றுக்காகப் பல விருதுகளை வாங்கிக் குவித்தவர் பாலு மகேந்திரா. பாலுமகேந்திராவின் படங்களைப்பற்ரி பலரும் சிலாகித்து ப் பேசுவார்கள். 40 வருட சினிமா அனுபவத்தில் மூன்று  படங்களைத்தான் தான் நினைத்த மாதிரி  படமாக்கியதாக  ஒப்புதல் வாக்கு மூலமளித்தார். விருதுகள் அங்கீகாரம்தான்  எனக்கூறிய பாலு மகேந்திரா விருதைத்தேடி அலையவில்லை.அவர்  தனுடைய "ஜூலி கணபதி" படக்த்தை எந்த ஒரு விருதுக்கும் அனுப்பவில்லை.

படத்துக்கான கதை ஒன்றைஎழுதிய  பின்னர் அதில் நடிப்பதற்கு நடிக, நடிகைகளைத் தேர்ந்தெடுப்பார்.நடிகருக்காக கதை எழுதியதும் இல்லை, கதையை மாற்றியதும் இல்லை. காதலனும் காதலியும்  ஆடிப்பாட அவர்களின்  பின்னால் பலர் ஆடுவது பாலு மகேந்திராவுக்குப் பிடிக்காத  ஒன்று. மம்முட்டி,  மோகன்லால் ஆகிய இருவரும்  பாலு   மகேந்திராவுக்குப் பிடித்த நடிகர்கள். "யாத்ரா" படத்தில் மோகன்லால் நடித்தார். மமுட்டியிடன்  இணவதர்குப் பேச்சு வார்த்தை நடந்தது. அது கைகூடவில்லை. பாலு மகேந்திராவுக்கு மிகவும் நெருக்கமானவர் கமல். இருவரும் மனம் விட்டுப் பேசுவார்கள்.

  முள்ளும் மலரும். ரஜினிகாந்த் நாயகன்.  கமலும், ரஜினியும்   இணைந்து படம் செய்ய வேண்டாம் என்று   முடிவெடுத்த காலகட்டம்.

 மகேந்திரனுக்கு முள்ளும் மலரும் படம் கிடைக்க சிபாரிசு செய்தவர் கமல்.  புதியவர், ஆனால் திறமையானவர் என்று கமல் உத்தரவாதமளித்ததால்  ஆரம்பமானது.  பட்ஜெட்டை தாண்டி செலவு செய்துவிட்டதாகக் கூறி, படத்தில் இடம்பெறும், ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்பாடலை எடுக்க முடியாது என்று கூறி விடுகிறார் தயாரிப்பாளர்.  தயாரிப்பாளர் பாடலை படமாக்க மறுத்ததும் கமலுடன் அதைப்பற்றி  மகேந்திரன் உரையாடினார். பாட்டின்  முக்கியத்துவத்தை கமலுக்கு எடுத்துரைத்தார். எல்லாவற்றையும் விபரமாகக் கேட்ட கமல் தயாரிப்பாளரைச் சந்தித்து   மகேந்திரனுக்காக  பேசினார்.  கமல்   சொல்லியும் தயாரிப்பாளர் கேட்பதாகயில்லை. செந்தாழம் பூவில் பாடல் இல்லையென்றால் படம் முழுமையடையாது என்கிறார் மகேந்திரன். அதன் பின்பு கமலே அந்தப் பாடலை படமாக்குவதற்கான அனைத்து செலவையும் ஏற்றுக் கொள்கிறார். பாடல் படமாக்கப்பட்டு படம் வெளியாகி வெற்றி பெறுகிறது. இன்றைக்கும்  முள்ளும் மலரும் என்றால் அந்தப் பாடல் காட்சி மனதில் நிழலாடும். கமல் இல்லை என்றால் அந்த அற்புதமான பாடல் கிடைத்திருக்காது.    செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்  பாடல் காட்சியின் தன்னை அதிக நேரம் காட்டவில்லை என   பேட்டி ஒன்றில் சரத்பாபு தெரிவித்தார்

முள்ளும் மலரும் காலகட்டத்தில் கமலும், ரஜினியும் தொழில் போட்டியாளர்கள். மகேந்திரன் அறிமுக இயக்குனர். ஒரு அறிமுக இயக்குனரின் மீது நம்பிக்கை வைத்து, தனது போட்டியாளரின் படத்துக்கே பணம் செலவு செய்தார் கமல். 

  இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு பணமுடை. இரண்டு லட்சம் வேண்டும். பலரிடம் கேட்டும் பலனில்லை. கடைசியாக கமலிடம் கேட்பது என்று முடிவு செய்து அவரை சந்திக்கிறார். ஆனால், எப்படி கேட்பது? சினிமா குறித்து இருவரும் மணிக்கணக்கில் பேசுகிறார்கள். அனைத்தைம் கேட்டு தெரிந்து கொள்ளும் கமல், பாலுமகேந்திரா வந்த காரணத்தை மட்டும் கேட்கவில்லை. பாலுமகேந்திராவுக்கோ பணம் கேட்க தயக்கம். கேட்டு இல்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? சரி, கேட்க வேண்டாம் என்று முடிவு செய்கிறார்.

கிளம்புகிற நேரம், உள்ளே சென்ற கமல், பத்து லட்சம் ரூபாயை எடுத்து வந்து பாலுமகேந்திராவிடம் தந்து, நீங்க ராஜ் கமலுக்காக ஒரு படம் பண்ணணும், அதுக்கு அட்வான்ஸ் என்று சொல்கிறார். எதிர்பார்த்து போனது 2 லட்சம். கிடைத்ததோ 10 லட்சங்கள். அதுவும் கடனாக இல்லை, சம்பளமாக. அந்தப் படம்தான் சதிலீலாவதி. அந்தப் படத்துக்கு கமல் பாலுமகேந்திராவுக்கு நிர்ணயித்த சம்பளம் 35 லட்சங்கள். இதைக் கேட்டதும் பாலுமகேந்திராவுக்கு கடும் கோபம். குறைவாக தந்து விட்டோமோ என நினைக்கிறார் கமல். பாலுமகேந்திராவோ தனது உதவியாளர்களிடம் வந்து கத்துகிறார். "கமல் என்னை ஃபூல் பண்ணலாம்னு நினைக்கிறார். எனக்கு 35 லட்சம் சம்பளமாம். யாரு எனக்கு அவ்வளவு சம்பளம் தருவாங்க? என்னை என்ன முட்டாள்னு நினைக்கிறாரா?" இன்று இரண்டு ஹிட் கொடுத்த இயக்குனர்கள் மூன்றாவது படத்துக்கு பதினைந்து கோடி கேட்கிறார்கள். நல்லவேளை பாலுமகேந்திரா இப்போது இல்லை.ஒரு கலைஞனுக்கு அவனது மனம் நோகாதபடி, கண்ணியம் கலையாதபடி எப்படி உதவ வேண்டும் என்பதை அறிந்தவர் கமல்.

  முள்ளும் மலரும் படம்   1978-ஆம் ஆண்டு வெளியானது. 38 வருடங்களுக்குப் பிறகு பாலுமகேந்திரா சொன்ன பிறகே கமல் செய்த உதவி வெளியுலகுக்கு தெரிய வந்தது.

இன்று முன்னணியில் இருக்கும் வெற்றிமாறன்,பாலா, சீனு ராமசாமி , ராம் ஆகியோர்  பாலு மகேந்திராவின்  சீடர்கள். இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்து சிறு வயதிலிருந்தே பல சர்வதேச படங்களையும்பதேர் பதஞ்சலிஉள்ளிட்ட இந்திய கிளாசிக் படங்களையும் பார்த்து சினிமா என்னும் கலை மீது காதல் வயப்பட்டவர் பாலு மகேந்திரா. அவர் வாழ்வின் இறுதிக் கனம் வரை சற்றும் தளர்வடையாத காதல் அது . தளர்வடையவில்லை என்று சொல்வதைவிட உறுதியடைந்துகொண்டே இருந்தது என்று சொல்லலாம். வணிக அழுத்தங்களுக்கு ஆட்படாமல் தான் விரும்பிய நல்ல சினிமாவுக்காகவே வாழ்ந்வர்.

 

முறையாகத் திரைக் கல்வியைப் பயின்றுபனிமுடக்கு’ (1972) என்னும் மலையாளப் படத்தின் ஒளிப்பதிவாளராகத் திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்தார். இயக்குநராவதற்கு முன் மலையாளம். தெலுங்கு, உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் இருபதுக்கு மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து புகழ்பெற்றுவிட்டார். அவர் இயக்குநராகக் கால் பதித்தது கன்னட மொழியில். அவர் இயக்குநராக அறிமுகமானகோகிலா’ 1977இல் வெளியானது. கமல் ஹாசனின் அரம்பகாலப் படங்களில் முக்கியமான ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்தப் படம் 1980களில் தமிழ் சினிமாவில் வெற்றிவாகை சூடிய நடிகர் மோகனின் அறிமுகப் படம்.

மகேந்திரன் இயக்கிய தமிழ் சினிமாவின் தலைசிறந்த கிளாஸிக் படங்களில் ஒன்றானமுள்ளும் மலரும்படத்தின் ஒளிப்பதிவாளராகத்தான் தமிழ் சினிமாவுக்கு வந்தார் பாலு மகேந்திரா. அதற்கு அடுத்த ஆண்டில் வெளியானஅழியாத கோலங்கள்படத்தின் மூலம் தமிழிலும் இயக்குநராகத் தடம் பதித்தார்.

மணி ரத்னம் இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தபோதே தன் முதல் படத்துக்கு பாலு மகேந்திராதான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார். அப்போது ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் பல படங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த பாலு மகேந்திரா அந்த அறிமுக இயக்குநரின் திறமையைச் சரியாகவே கணித்திருந்தார். பாலு மகேந்திரா ஒளிப்பதிவில் மணி ரத்னத்தின் அறிமுகப் படமானபல்லவி அனு பல்லவி’ (1983) கன்னட சினிமாவின் தரமான படைப்புகளில் ஒன்றாக நிலைத்துவிட்டது. அதன் பிறகு இந்தியா முழுவதும் புகழைப் பெற்ற இயக்குநராக உயர்ந்தார் மணி ரத்னம். திறமையாளர்களைத் தரமான படைப்பாளிகளை அடையாளம் காணும் திறன் பாலு மகேந்திராவுக்குத் தொடக்கத்திலிருந்தே இருந்தது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். பாலு மகேந்திராவின் படத்துக்கு இளையராஜாதான் இசையமைப்பார்.

புத்தாயிரத்தின் தொடக்கத்தில் தொலைக்காட்சி ஊடகத்தில் அடி எடுத்து வைத்தபோது பல எழுத்தாளர்களின் நல்ல சிறுகதைகளை அரை மணிநேர தொலைக்காட்சிப் படங்களாகபாலு மகேந்திரா கதை நேரம்என்னும் பெயரில் இயக்கினார். இப்படியாக 50க்கு மேற்பட்ட சிறுகதைகள் அவரால் திரைவடிவம் பெற்று இன்னும் பரவலான மக்களைச் சென்றடைந்தது. இவற்றில் பெரும்பாலான கதைகள் தமிழ்ச் சமூகம் அன்று பொதுவில் உச்சரிக்கவே தயங்கிய கருப்பொருள்களைப் பேசுபொருளாகக் கொண்டிருந்தன. ஆனால்பாலுமகேந்திரா கதை நேரம்தமிழ்க் குடும்பங்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது என்பதற்குக் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக் காலம் அது நீண்டது என்பதே சான்று.

பாலுமகேந்திரா என்றதும் நினைவுக்கு வரும் பல விஷயங்களில் ஒன்று, அவரது நாயகிகள். வெள்ளைத் தோல் அழகிகள் அணிவகுத்த சினிமாவில் கருப்பழகிகளை அறிமுகப்படுத்தியவர். இதுகுறித்து கேட்ட போது, அது என் ஈழத்து நினைவு என்று பதிலளித்தார். ஈழத்தமிழரான அவர் ஈழம் குறித்து அதிகம் பொதுவெளியில் பேசியதில்லை. அதுபற்றி திரைப்படம் எடுத்ததில்லை. ஈழம் அவரது மனக்கொந்தளிப்பான விஷயமாக கடைசிவரை இருந்தது. பேட்டியொன்றில் ஈழம் குறித்த கேள்விக்கு பதில் சொல்கையில் அழுதிருக்கிறார். ஈழத்திலிருந்து வரும் படைப்புகள், படைப்பாளிகள் குறித்து நெருக்கமாக அறிந்திருந்தார். கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் கவிஞரும், பாடலாசிரியமான தேன்மொழி தாஸின் முதல் கவிதைத் தொகுப்பான 'இசையில்லா இலையில்லை' வெளியீட்டு விழாவில் ஈழக்கவிஞரின் கவிதைகளை தேன்மொழி தாஸின் கவிதைகளுடன் ஒப்பிட்டுப் பேசினார் பாலுமகேந்திரா.

ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய சின்னச் சின்ன படங்களை எடுக்க வேண்டும் என்று விரும்பினார். பாலா, வெற்றிமாறனையும் அதுபோன்ற படங்களை இயக்க வைக்க வேண்டும் என்ற திட்டம் இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை. வெற்றிமாறன் லாக்கப் நாவலை ஒரு மணிநேரம் ஓடக்கூடிய படமாகவே எடுத்தார். அப்போது, ஒருமணி நேர படத்தை சந்தைப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு இல்லாததால், இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளை தானே எழுதி அதனை முழுநீளத் திரைப்படமாக்கினார்.

தொலைக்காட்சிக்காக பாலுமகேந்திரா இயக்கிய கதைநேரம் எந்தமொழி படைப்புகளுடனும் ஒப்பிடத்தகுந்தவை. அவர் காலத்தில் ஓடிடி தளங்கள் இல்லை. இருந்திருந்தால், அதில் முத்திரை பதித்திருப்பார். ஓடிடி அவருக்கேற்ற தளம். இனத்தையும், மொழியையும், கலையையும் மனதார நேசித்த கலைஞன். அவரிடமிருந்து சினிமாவை கற்றுக் கொள்ள முடிந்தவர்கள் பாக்கியசாலிகள்.

No comments: