Friday, April 21, 2023

ஐபிஎல் அட்டவணையில் திடீர் மாற்றம்


   சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ,லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்   அணிகளுகிடையே  மேமாத 3 ஆம் திகதி நடைபெற இருந்த  போட்டி ஒருநாள்  முன்னதாக  மே 3 ஆம் திகதி   மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.லக்னோவில் மே 4ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த போட்டியின் அட்டவணை மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்றைநாளில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அ்ணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் சிஎஸ்கே - லக்னோ அணிகளுக்கு இடையே ஏப்ரல் 3ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.  ருதுராஜ் கெய்வாட் அதிரடி பேட்டிங், மொயின் அலி தரமான பெளலிங் காரணமாக லக்னோ அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே பதிவு செய்த முதல் வெற்றியாக அமைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 21ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டியை தொடர்ந்து ஏப்ரல் 23ஆம் திகதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும், ஏப்ரல் 27ஆம் திகதி ராஜஸ்தான் ராயல் அணியையும் எதிர்கொள்கிறது. 

ஏப்ரல் 30ஆம் தேதி மீண்டும் சென்னையில் வைத்து பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்துக்கு பின்னரே மே 4ஆம் திகதி லக்னோ - சிஎஸ்கே அணிகள், லக்னோவில்   மோதும் போட்டி நடைபெறுவதாக இருந்தது. தற்போது அந்த போட்டியின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக சனி, ஞாயிற்றுகிழமைகளில் இரண்டு போட்டிகள் நடைபெெறும் நிலையில், இந்த அட்டவணை மாற்றத்தால் வாரத்தின் மத்திய நாளான புதன்கிழமை இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது.

 

No comments: