Friday, April 7, 2023

நிசங்காவின் பற்றை உடைத்த மில்னே


 

இலங்கை, நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையேயான  இரண்டாவ‌து ரி20 போட்டி மார்ச் 5ஆம் திகதி நடைபெற்றபோது  இலங்கௌ முதலில் துடுப்பெடுத்தாடியது.

 இலங்கைக்கு எதிராக முதல் ஓவரை ஆடம் மில்னே வீசினார்.   அதிரடியான வேகத்தில் பந்து வீசக்கூடிய அவர் இந்த போட்டியில் புதிய பந்தில் சற்று கூடுதலான வேகத்தில் வீசி ஆரம்பத்திலேயே இலங்கை வீரர் நிசங்காவின் பற்றை  இரண்டாக உடைத்தார்.

4 ஓவர்களில்  26 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்த ஆடம் மில்னே சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தவ‌ர் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

   1. அடம் மில்னே : 5/26, 2023*

 2. ஓசினோ தாமஸ் : 5/28, 2020

3. ரவிச்சந்திரன் அஸ்வின் : 4/8, 2016

 4. ஜோஸ் ஹேசல்வுட் : 4/12, 2022

ஐந்து  விக்கெட்டுகளை எடுத்து சாதனையுடன் முக்கிய பங்காற்றிய ஆடம் மில்னேக்கு ஆட்டநாயகன் விருதுவழங்கப்ப‌ட்டது.

No comments: