அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் நடந்த தலைமைத்துவப் போட்டியில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றியடைந்தார். நீதிமன்றத்தையும், பாரதீய ஜனதாவையும் நம்பி இருந்த ஓ. பன்னீர்ச்செல்வம் கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல்
ஆணையம் அங்கீகரித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக
அங்கீகரித்ததால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னமும் கிடைத்துள்ளது.
கழகப் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியின்றி
தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியை
அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்காமல் இருந்து வந்தது. இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில்,
தம்மை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி
பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தாங்கள் முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம்
கேட்டது தேர்தல் ஆணையம். இதற்கு டெல்லி உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியது. கடந்த வியாழக் கிழமை தமது முடிவை தேர்தல் ஆணையம்
அறிவித்தது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முற்று முழுதாக எடப்பாடியின் கைக்குச் சென்றுள்ளது.ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்டுள்ள கட்சி என்ர பெருமை பெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நான்கு துண்டுகளாகப் பிரிந்துள்ளது.பன்னீர்ச்செல்வம், தினகரன், சசிகலா ஆகிய மூவரும் தொண்டர்கள் தம் பக்கம் இருப்பதாக நம்புகிறார்கள்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களில் பலர் வேறு கட்சிகளில் இணைந்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் எதிரியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் பலர் இணைந்து அதிர்ச்சியளித்துள்ளனர்.
சட்டப் போராட்டம் நடத்திய
ஓ.பனீர்ச்செல்வம் 11 வழக்குகளில் தோல்வியடைந்துள்ளார். தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்ட
எடப்பாடி 8 தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்துள்ளார். வழக்குகளில் தோற்பதால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை. தொடர்ச்சியாக எட்டுத்
தேர்தல்களின் தோல்வி என்பது கழகத்துக்குப் பெரும்
பின்னடைவைத் தோற்றுவிக்கவல்லது.
பன்னீர்ச்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் தமது பலத்தை
நிரூபிப்பதற்கு கர்நாடகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மேமாதம் 10 ஆம்
திகதி நடைபெற உள்ளது. தமிழர்கள் அதிகளவில்
வாழும் தொகுதிகளில் பன்னீரும், எடப்பாடியும் தமது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர், பெங்களூர்
காந்தி நகர் , கோலார் தொகுதிகளில் ஓ.பன்னீர்ச்செல்வம் தனது அணி வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. அனைத்து
தொகுதிகளிலும் ஒரே கட்டமாக மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
புலிகேசி நகர் தொகுதியில் பாரதீய ஜனதாக் கட்சியை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை எடப்பாடி களம் இறக்கு உள்ளார். கர்நாடகாவில் ஆளும் பாரதீய ஜனதா,, ஜேடிஎஸ், காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையே இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாரதீய ஜனதா க ஆட்சியை இழக்கும்; காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கூறி வருகின்றன. கர்நாடகா தேர்தல் களத்தில் ஜேடிஎஸ், காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஆனால் பாஜகவில்தான் உட்கட்சி பூசல் மிக அதிகம். பாஜகவில் சீட் மறுக்கப்பட்ட ஏராளமான தலைகள் ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிக்கு நித்தம் நித்தம் தாவி வருகின்றனர். இந்த களேபர சூழ்நிலையில் கர்நாடகா தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட அதிமுகவும் விரும்பியது. கர்நாடகாவிலேயே உட்கட்சியிலேயே மிகப் பெரிய குழப்பம் இருக்கும் நிலையில் கோரிக்கையை பாஜக ஏற்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென வேட்பாளரை அறிவித்தார். கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசிநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இபிஎஸ் அணியின் கர்நாடகா மாநில அவைத்தலைவராகவும் அன்பரசன் இருந்து
வருகிறார். இந்த அறிவிப்பை வெளியிட்ட கையுடன், இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகியது இபிஎஸ்
தரப்பு. தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் தரப்பு அளித்த மனுவில், கர்நாடகா தேர்தலில் வேட்பாளரை
அறிவித்துவிட்டோம். வேட்புமனுத் தாக்கல் செய்ய வியாழக்கிழமை இறுதி நாள். ஆகையால் அதிமுக
பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரித்து உடனே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் திடீரென அதிமுக ஓபிஎஸ்
அணி இன்று அதே புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியனை வேட்பாளராக அறிவித்துள்ளது.
அதாவது கர்நாடகா புலிகேசி நகர் தொகுதியில் பாஜக, அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளர்களை எதிர்த்து
அதிமுகவின் ஓபிஎஸ் அணி வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள்
பெங்களூர் காந்தி நகர் தொகுதியில் குமார், கோலார் தங்கவயல் சட்டசபை தொகுதியில் அனந்தராஜா
ஆகியோரையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது ஓபிஎஸ் அணி. கர்நாடகாவில் மொத்தம் 3 தொகுதிகளில்
அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர்களை அறிவித்து களமிறங்கி உள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தலில்
போட்டியிட மேலும் இரு வேட்பாளர்களை ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடகா சட்டசபை தேர்தலில் மேலும் இரு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்
தமிழகத்தில் ஒரே கூட்டணியில் இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதீய ஜனதாக் கட்சியும் கர்நாடகத் தேர்தலில் மல்லுக் கட்டுகின்றன. ஓபிஎஸ் அணியின் வேட்பாளரும். எடப்பாடியின் வேட்பாளரும் வெற்றி பெறப் போவதில்லை. ஆனால், கர்நாடகக்தில் செல்வாக்கு மிக்கவர் யார் என்பது தேர்தலின் மூலம் தெரிய வரும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment