Wednesday, April 19, 2023

ரணில் ,சஜித்.பஷில் மும்முனைப் போட்டி


   ரணில் ,சஜித்.பஷில் மும்முனைப் போட்டி சித்திரை   புது வருடத்தின்  பின்னர் இலங்கையின் அரசியல் கள நிலைவரம் மாற்றமடையவுள்ளது. பொருளாதார நெருக்கடியில்  இலங்கை சிக்கிச் சுழன்ற  போது துணிச்சல் மிக்க அரசியல் தலைமை  யைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. சித்திரை வருடத்தின் பின்னர்  ஜனாதிபதித் தேர்தல் நடத்தப் படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரணிலின் அரசியல் வியூகங்கள்  ஜனாதிபதித் தேர்தலை நோக்கிச் செல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு  வெற்றி பெற வேண்டும் என்பதே ரணிலின்  கனவு.   ஜனாதிபதித்  தேர்தலில் போட்டியிடாமலே அவரின் கனவு  நிஜமாகியது. ரணில்  ஜனாதிபதியாகியதன்  பின்னால் பல விமர்சனங்கள்  உள்ளன அந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்க  அவர் ஆசைப்படுகிறார்.

அரசியலில் அதி உயர் பதவியான ஜனதிபதியாக வேண்டும் என்பது  சஜித் பிரேமதாசவின் விருப்பம். பஷில் ராஜபக்ஷவும்  ஜனாதிபதித் தேர்தலில்  போட்டியிடப்போவதாக் செய்திகள் கசிந்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி என எழுதபட்டு விட்டது. ஜனதாவிமுக்திப் பெரமுனையும் தனது கட்சியின் சார்பில் ஒருவரை களம்  இறக்க  உள்ளது.இவர்களைத் தவிர சுயேட்சைகள் சிலர் புற்றீசல்போல் திடீரென வருவார்கள். சிவாஜிலிங்கம்  போன்ற தமிழர்களும் தமது  பலத்தைக் காட்ட  ஜனாதிபதித் தேர்தலில்சில வேளை போட்டியிடுவார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீது கடுமையான விமர்சனங்கள் சுமத்தப்பட்ட போது அவற்றுக்குக் காது கொடுக்காது தனது  இலக்கை நோக்கிப் பயணித்தார். பொருளாதாரத்தை மீட்பதற்கானஅவர் மேற்கொண்ட முயற்சி  சாதாரண மக்களிடம் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.  ரணில் ஜனாதிபதியான  போது நாடு மட்டுமல்ல அவரது வீடும் தீக்கிரையானது.  அப்போதிருந்த அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு,  பொருட்கள் விலையேற்றம், நீண்ட வரிசை ,  போராட்டம், நாடு முடக்கம்  எதுவும்  இப்போ இல்லை.  பொருட்களின் விலை அதிகம்தான் காலப்பொக்கில் விலை குறையும் என மக்கள் நம்புகிறார்கள்.

 ஜனாதிபதி ரணிலின்  ராஜதந்திரத்தால் சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க  உடன்  ப்டாது.  ஆனாலும் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்  முன் வைக்கப்படுகின்ரன.   எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள்   போராட்டங்கள் நடத்துகின்றன.  இதனால் ஜனாதிபதி ரணில் மனம் தளரவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு ரணிலுக்கு  உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.  இதே சுட்டுடன் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ரணீல் ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நோக்கி  ரணிலின் பார்வை விழுந்துள்ளது.

  2020  ஆண்டு நடந்த தேர்தலி ரணிலின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியடைந்தது.  ஆளும் கட்சியும் எக்திர்க் கட்சிகளும் சேர்ந்தெ ரணிலை ஜனாதிபதியாக்கின.            நிலின் ப் அரம எதிரியான  ம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா  உறுப்பினர்கள் அவரை  ஆதரித்த்னர்.

   தேர்தலின் மூலம்   தன்னை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தும் மற்றும் தனது பொருளாதார சீர்திருத்தப் பணியை வலுப்படுத்தும் என்பதை ரணில் உணர்ந்துள்ளார். கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நன்கொடை நாடுகளும் உறுதியான   அரசாங்கத்துடன் இணைந்து போக விரும்புகின்றன. ஆகவே  தேர்தலின்  மூலம் தனது பலத்தை வெளிப்படுத்த ஜனாதிபதி ரணில்  விரும்புகிரார்.

இன்றைய நிலையில் ரணிலுக்குச் சவால் விடும்  போட்டியாளர்  கண்ணுக்கு எட்டியதூரத்தில் இல்லை. ஒரு சில கட்சிகளின்  ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்  வெற்றி பெறலாம் என ஜனாதிபதி ரணில்  நினைக்கிறார்.   சஜித்தின்  கட்சியில் உள்ளவர்கள் ஜனதிபதியின் பக்கம் தாவத் தயாராக  இருக்கிறார்கள்  புது வருடத்தின்  பின்னர் அணிமாறும் படலம் நடைபெறும் என நம்பப்படுகிறது.  தனது கட்சியைச்   சேர்ந்தவர்களுக்குப் பணம் கொடுத்து  இழுப்பதாக சஜித்   குற்றம் சாட்டியுள்ளார். 

ரணிலின் தலைமையில் சஜித்தும்  ஒருகாலத்தில் இருந்தவர்தான். சஜித்தின் பின்னால் நிர்பவர்கள் அனைவரும் அசல் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்தவர்கள். ரணிலின் தலைமையில் கட்சி தோல்வியடைகிறது என்பதால் சஜித்தின் பின்னால் சென்றவர்கள்  மீடும் தாய்க்கழகத்துக்குச் செல்ல விரும் புகிரார்கள் அரசிலைல் இது சகஜம் ஆனால், காசு கொடுக்கும்  குற்றச்சாட்டு புதியது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதர்கு சஜித் தயாராக  இருக்கிறார். இந்த நிலையில் அவரை ஆதரிக்க வேண்டிய கட்சியின் முக்கியஸ்தர்கள் ரணிலின் பகம் சாயத்துடிக்கிறர்கள். ரணிலையும், சஜித்தையும்  ஒற்றுமையாகுவதர்கு மேற் கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.     புதிய கூட்டணிஅய் உருவாக்க்  ரணில்  முயற்சி செய்கிறர்.சஜித்தின்பக்கம் இருப்பவர்களில் பாதிப்பேர் ரணிலுடன்  இணையத்ட் கயாராக  இருக்கிறார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்த சிலர் சஜித்தின்பக்கம் சென்றுள்ளனர்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் இணைந்து கட்சி தனது பங்களிப்பை வழங்க வேண்டும்  டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“சில சமகி ஜன பலவேகய (ஸ்JB) பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், கட்சி தீர்மானம் எடுக்கத் தவறினால் குழுவாகச் செயற்படுவதாகவும்  பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன  தெரிவித்தார்.“ஹர்ஷ டி சில்வா போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்   ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர்.

 சஜித் பிரேமதாசவின்  தலைமைத்துவ பாணி மீதான உகட்சியின அதிருப்தியடைந்துள்லனர்.  மூத்த கட்சிக்காரர்களை புறக்கணிப்பதாகவும், ஒரு கும்பலை நம்பி எதேச்சதிகாரமாக விஷயங்களை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் மீதான அதிருப்தியே பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறும் எண்ணத்துடன் வி இருப்பதற்கு ரு முக்கிய காரணமாகும். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

"ஆனால் சந்திம வீரக்கொடி மற்றும் ஜயரத்ன ஹேரத் மற்றும்   (ஸ்ள்PP) அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களும் எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர், மேலும் பலர் வருவதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர்," என்று அவர் கூறினார்.

ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து  பஷிலைக் களம்  முயற்சி நடக்கிறது.  ராஜபஷ குடும்பத்தின் மீதான  கொபம்  மக்களிடன்  இன்னமும் தணியவில்லை 

புது வருடத்தின் பின்னர் புதிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகம்  இல்லை. 

 

 

 

No comments: