ஐபிஎல் என்றாலே துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து தங்களது அணிக்கு வெற்றிகளை தேடித் தருவார்கள்.பொதுவாக ஒரு அணி வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு ஏதேனும் ஒரு வீரர் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாடி அதிக ஓட்டங்கள் அடிக்க வேண்டும்.
அதேசமயம் இரண்டு
வீரர்கள் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து எதிரணியை சிதறடித்ட்தால் கண்டிப்பாக
அந்த அணிக்கு வெற்றி நிச்சயம். அதேபோல் விக்கெட் விழுவதை தடுத்து ஒரு அணியை வெற்றி
பெற வைக்க 2ஜோடியிடமிருந்து ஒரு அற்புதமான பார்ட்னர்ஷிப் தேவைப்படுகிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த டாப்-5
ஜோடிகளைப் பற்றி பார்ப்போம்.
1. விராட் கோலி – ஏபி டீ வில்லியர்ஸ்:
இந்தியாவை சேர்ந்த விராட் கோலி ,தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்ட்
ஏரியா பேட்ஸ்மேன் ஏபி டிவிலியர்ஸ் ஆகிய இருவரும் சேர்ந்தாலே அந்த பார்ட்னர்ஷிப் அபாரமாக
இருக்கும். இந்த இருவரும் ஜோடி சேர்ந்து வரலாற்றில் பெங்களூர் அணிக்காக எத்தனையோ வெற்றிகளை
பெற்று கொடுத்துள்ளார்கள்.
கடந்த 2016-ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த குஜராத்
லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிறிஸ் கெயில் 6 ஓட்டங்களில்
ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி , ஏபி டிவில்லியர்ஸ்
ஆகியோர் குஜராத் பந்துவீச்சாளர்களை ஒருகை பார்த்தனர். 4-வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள்
கடைசி ஓவர் வரை நின்று விளையாடி 2-வது விக்கெட்டுக்கு 229 ஓட்டங்கள் சேர்த்தனர்
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு விக்கெட்
எடுக்கும் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற அபார சாதனையையும் அவர்கள் படைத்தனர்.
அந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து 109 (55) ஓட்டங்கள் எடுக்க கடைசி வரை அவுட்டாகாமல்
அடம்பிடித்த ஏபி டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல்
129* (52) ஓட்டங்கள் எடுத்தார்.
2. விராட் கோலி – ஏபி டீ வில்லியர்ஸ்:
2015-ஆம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையிலான மும்பை
இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் ஜோடி
சேர்ந்தனர். 4-வது ஓவரில் ஜோடி சேர்ந்த அவர்கள் கடைசி வரை ஆட்டமிழக்காமல் மும்பை பந்துவீச்சாளர்களை
தெறிக்க விட்டார்கள் என்றே கூறலாம். அன்றைய நாளில் ஒருபுறம் விராட் கோலி 50 பந்துகளில்
ஆட்டமிழக்காமல் 82* ஓட்டங்கள் எடுத்தார்.மறுபுறம் மும்பையை பிரித்தெடுத்த ஏபி டிவில்லியர்ஸ்
59 பந்துகளில் சதமடித்து 133* அசத்தினார். மொத்தத்தில் 2-வது விக்கெட்டுக்கு 215* ஓட்டங்கள்
பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி மும்பையை தோற்கடித்து 39 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியை
பெங்களூருவுக்கு பெற்றுத்தந்தது.
3. அடம் கில்கிறிஸ்ட் – ஷான் மார்ஷ்:
2011-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக ஜோடி சேர்ந்த அவுஸ்திரேலியாவின் இடதுகை வீரர்ககளான அடம் கில்கிறிஸ்ட் , ஷான் மார்ஷ்
ஆகியோர் பெங்களூருக்கு எதிரான ஒரு போட்டியில் விஸ்வரூபம் எடுத்து அந்த அணியை பந்தாடினர்கள்.
2-வது விக்கெட்டுக்கு ஒன்று சேர்ந்த இந்த ஜோடியில் ஒருபுறம் மார்ஷ் 49 பந்துகளில்
79* ஓட்டங்கள் குவிக்க மறுபுறம் பெங்களூர் பந்துவீச்சாளர்களை புரட்டியெடுத்த ஜாம்பவான்
அடம் கில்கிறிஸ்ட் சதமடித்து 52 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசினார். இந்த ஜோடி
206 ஓட்டங்கள் விளாசியதால் பெங்களூருவை எளிதாக தோற்கடித்தது.
4. விராட் கோலி – கிறிஸ் கெயில்:
2012-ஆம் ஆண்டு அப்போது பெயரிடப்பட்டிருந்த டெல்லி
டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதன் சொந்த மண்ணில் பெங்களூரு விளையாடியது.
டெல்லியில் நடந்த அந்த போட்டியில் முதல் விக்கெட் இழந்தபின் பெங்களூர் அணியின் தொடக்க
வீரராக களமிறங்கிய அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் உடன் ஜோடி சேர்ந்த கப்டன் விராட் கோலி
டெல்லி பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடித்தார். இந்த ஜோடியை கடைசி வரை அவுட் செய்ய
முடியாமல் டெல்லி வீரர்கள் விழி பிதுங்கி நிற்க ஒருபுறம் விராட் கோலி 73* (53) எடுக்க
மறுபுறம் பட்டையை கிளப்பிய கிறிஸ் கெய்ல் சதமடித்து 128* (62) நொறுக்கினார். 204* ஓட்டங்களை இந்த ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து
இந்தப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
5. டேவிட் வார்னர் – நமன் ஓஜா:
2012-ஆம் ஆண்டு அப்போது இருந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் டெல்லி விளையாடியது. அதில் முதலில் விளையாடிய டெக்கான் சார்ஜஸ் 187/4 ஓட்டங்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து 188 என்ற இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு அதன் கப்டன் வீரேந்திர சேவாக் 4 ஓட்டங்களில் ஆஅட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த இந்திய வீரர் நமன் ஓஜா உடன் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் தனக்கே உரித்தான அதிரடி பாணியில் ஓட்டங்களை விளாசினார். 2-வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் டெக்கான் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து டெல்லிக்கு வெற்றியைத் தேடி கொடுத்தார்கள். அதில் 54 பந்துகளில் சதமடித்த டேவிட் வார்னர் 109* ஓட்டங்கள் எடுக்க நமன் ஓஜா 64* ஓட்டங்கள் எடுத்தார். மொத்தம் 189* ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி இந்த பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
No comments:
Post a Comment