Sunday, March 13, 2022

ஐபிஎல் இல் வெற்றி பெறாத கப்டன்கள்


   2008ஆம் ஆண்டு முதல் துவங்கி நடைபெற்று வரும்   ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றின் வெற்றிகரமான ப்டனாக சாதனை படைத்துள்ளார். சொல்லப்போனால் இதன் காரணமாகவே தற்போது 3 வகையான இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகும் அளவுக்கு அவர் வளர்ந்து உயர்ந்துள்ளார். அவரைப்போல இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த மகத்தான ப்டனாக சாதனை படைத்த எம்எஸ் டோனி     சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆரம்பம் முதல் அபாரமாக க‌ப்டன்ஷிப் செய்து 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான க‌ப்டனாக அவர் ஜொலிக்கிறார். இவர்களுடன் கௌதம் கம்பீர், டேவிட் வானர் ஆகியோரும் வெற்றிகரமான கப்டன்களாக உள்ளனர்.

கோப்பைகளை பெற்றுக் கொடுக்காத விராட் கோலி போன்றவர்கள் கூட புள்ளிவிவர அடிப்படையில் இந்த தொடரில் வெற்றிகரமாக இருந்துள்ளார்கள். இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்ட போதிலும் ஐபிஎல் தொடரில் வெற்றியை ருசிக்க தவறிய 3 மோசமான ஐபிஎல் ப்டன்கள் பற்றி பார்ப்போம்.


1.                                                               குமார் சங்ககா 

 சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினுக்கு பின் அதிக ஓட்டங்கள்  குவித்த வீரராக உலக சாதனை படைத்துள்ள குமார் குமார் சங்ககா  ஐபிஎல் வரலாற்றில் டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட 3 அணிகளுக்காக ப்டன்ஷிப் செய்துள்ளார். 2009ஆம் ஆண்டு முதல் முறையாகஅவர் தலைமையில் விளையாடிய பஞ்சாப் அணி 5வது இடத்தை மட்டுமே பிடித்தது- அதன்பின் 2011 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக க‌ப்டன்ஷிப் செய்த அவர் தலைமையில் அந்த அணி 7-வது இடத்தை மட்டுமே பிடித்தது. மொத்தத்தில் 47 ஐபிஎல் போட்டிகளில் ப்டன்ஷிப் செய்த அவர் அதில் வெறும் 15 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளார். 30 போட்டிகளில் தோல்வி அடைந்ததன் வாயிலாக 34.04% வெற்றி சராசரியை மட்டுமே பெற்றுள்ள அவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் மோசமான ப்டன் என்ற மோசமான சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.


2.    மஹேல ஜயவர்தன‌

சங்கக்காரவின் நெருங்கிய நண்பர் மற்றும் இலங்கையின் மற்றொரு ஜாம்பவான் மஹேல ஜயவர்தன‌இலங்கை அணிக்காக ஒரு மிகச்சிறந்த ப்டனாக செயல்பட்டவர். இவரும் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா போன்ற அணிகளுக்கு ப்டன்ஷிப் செய்த போதிலும் பெரிய அளவில் வெற்றிகளை வாங்கி தர முடியவில்லை. மொத்தத்தில் 30 போட்டிகளில் ப்டன்ஷிப் செய்த அவர் வெறும் 9 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளார். அவர் தலைமையில் விளையாடிய ஐபிஎல் அணிகள் 16 போட்டிகளில் தோல்வி அடைந்தது. ஒரு போட்டி டையில் முடிந்தது.


 3.       அஜிங்கிய ரஹானே :

இன்று டெஸ்ட் போட்டிகளில் கூட ஓட்டங்கள் அடிக்க முடியாமல் தடுமாறித் இந்திய அணியில் தனது இடத்தை தொலைத்து நிற்கும் அஜின்க்யா ரகானே ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் அதிரடியாக பேட்டிங் செய்து ப்டனாகும் அளவுக்கு ஜொலித்தவர். சொல்லப்போனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நீண்ட நாட்கள் ப்டனாக இருந்த அவர் அதை பயன்படுத்தி தான் இந்திய டெஸ்ட் அணியின் துணை ப்டனாகும் அளவுக்கு உயர்ந்தார். இருப்பினும் அதில் பெரிய அளவு வெற்றிகளை குவிக்க தவறியதுடன் ஓட்டங்கள்களும் குவிக்க திணறியதால் தற்போது விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. மொத்தமாக 25 ஐபிஎல் போட்டிகளில் ப்டனாக செயல்பட்ட அவர் அதில் 9 வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொடுத்தார். 16 போட்டிகளில் அவர் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி அடைந்தது.

No comments: