Tuesday, March 1, 2022

அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்த ஸ்டாலின்


 

கருணாநிதி,ஜெயலலிதா ஆகிய இரண்டு முது பெரும் அரசியல்வாதிகளின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் நடைபெற்ற  தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற்று அசைக்க முடியாடக தலைவராக ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். கண்ணுக்கெட்டிய துரத்தில் எதிர்க் கட்சிகளைக் காணவில்லை என     ஜெயலலிதா  அன்று சொன்னது. இன்று ஸ்டாலினில் அரசியல் வாழ்வில் உண்மையாகி உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது, அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்தையும் திமுக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலில் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், வெற்றி வாய்ப்பு யாருக்கு என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வந்த நிலையில், திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

தமிழக உள்ளூராட்சி நகர்ப்புறத் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணிக் கட்சிகளுடன் கைகோர்த்து தேர்தலைச் சந்தித்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருந்த  பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலுக்கு முன்னரே வெளியேறிவிட்டது. கூட்டணிப் பேச்சு வார்த்தை  குழம்பியதால் பாரதீய ஜனதாக் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இரட்டைத் தலைமைப் பிரச்சினையால் துவண்டிருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றரைக் கோடித் தொண்டர்களை நம்பிக் களம் இறங்கி அவமானப்பட்டது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் திமுக 153, அதிமுக 15, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 13, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4, விடுதலை சிறுத்தைகள் கட்சி 4, மதிமுக 2, இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1, பாஜக 1, அமமுக 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1 வார்டு என தங்கள் வெற்றிகளை பதிவு செய்தன. அத்துடன் சுயேச்சை வேட்பாளர்கள் 5 இடங்களில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்தையும் திமுக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. அங்குள்ள பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில் திமுக 132 இடங்களையும், அதிமுக 3 இடங்களையும், மற்ற கட்சிகள் 3 இடங்களையும் கைப்பற்றின. அதேபோல், 489 பேரூராட்சிகளில் திமுக 435 இடங்களையும், அதிமுக 15 இடங்களையும், பாஜக 5 இடங்களையும், மற்ற கட்சிகள் 25 இடங்களையும் பிடித்தன.

2011-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, அன்று இருந்த 10 மாநகராட்சிகள் அனைத்தையும் கைப்பற்றி சாதனை படைத்தது. அப்போது, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகியவை மாநகராட்சிகளாக இருந்தன.

அதன் பின்னர், தமிழகத்தில் 11 மாநகராட்சிகள் கூடுதலாக உருவாக்கப்பட்டு தற்போது 21 மாநகராட்சிகள் இருக்கும் நிலையில், அனைத்து மாநகராட்சிகளையும், தற்போதைய முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையிலான திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் மார்ச் 2ஆம் தேதி பதவி ஏற்றுக்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவி இடங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள் வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 12,838 ஆகும். இந்த வார்டுகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 60.7 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. பேரூராட்சிகள், நகராட்சிகளில் வாக்குப்பதிவு சற்று அதிகமாக இருந்தாலும், மாநகரப் பகுதிகளில் மந்தமாகவே காணப்பட்டது. குறிப்பாக சென்னையில் 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பதிவானது.

கொங்குமண்டலத்தில் பலம் வாய்ந்தது திராவிட முன்னேற்றக் கழகமா, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமா என்ற  கேள்வி மறைந்து, செந்தில்பாலாஜியா, வேலுமணியா என்ற கெளரவப் பிரச்சினை  முன்னெடுக்கப்பட்டது. வேலுமணியின் கோட்டையில் அவரின் செல்வாக்கை உடைத்தெறிந்து வெற்றிக் கொடி நாட்டினார் செந்தில் பாலாஜி. வேலுமணி, பன்னீர்ச்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் சொந்த வார்ட்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்  வெற்றி பெற்றனர்.  சில இடங்களில் சுமார் 50 வருடங்களாக தோல்வியில் துவண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று மகிழ்ச்சியில் திளைத்தது.

தேர்தலுக்கு முன்னரே பாட்டாளி மக்கள் கட்சி கூட்டனியில் இருந்து வெளியேறியது. கூட்டணிப்  பேச்சுவார்த்தை பிசங்கியதால்  பாரதீய ஜனதாக் கட்சி தனித்துப் போட்டியிட்டது .தமக்கு ஒதுக்கப் பட்ட இடங்களில் திருப்தி இல்லாமல் போட்டியிட்ட  திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக் கட்சிகள் கணிசமான வெற்றியைப் பெற்றன. தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி சந்தர்ப்பம் கொடுக்கததனால் செல்வாக்குள்ள சில  சுயேட்சையாகப் போட்டியிட்டனர். அதிகள வான சுயேட்சைகளும் கட்சிகளும் தேர்தல் களத்தில் குதித்ததனால் எதிர் பார்க்காத வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். கழகக் கட்டுப்பாட்டை மீறி சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த 111  உறுப்பினர்களை  திராவிட முன்னேற்றக் கழகம் உடனடியாத தர்காலிகமாக கட்சியில் இருந்து வெளியேற்றியது. இதே பொன்ற நடவடிக்கையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் எடுத்தது.

உளூராட்சி  தேர்தல் கட்சியின்  செல்வாக்கு மிக்கவர்களுக்கானது. கட்சியின் செல்வாக்கு அங்கு பின்னுக்குத் தள்ளப்பட்டு தனி நபர் முன்னிலை பெறுவார். திராவிட முன்னேற்றக் கழக்த்துக்கும் , அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்துக்கும் சில இடங்களில் பலத்த  போட்டி இருக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், போட்டி இல்லாமலே திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது.  மூன்றாவது இடத்தில் காங்கிரஸ்  இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பாரதீய ஜனதாவுக்கும் இடையிலேதான் போட்டி என அண்ணாமலை சொன்னது புஸ்வாணமாகிப் போனது.

 கமல்,சீமான், விஜயின் மக்கள்  இயக்கம் என்பன வற்றின் வெற்றி சொல்லும்படியாக இல்லை.

சில வேட்பளர்களுக்கு  ஒருவாக்கும் விழவில்லை.  சிலர் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்றனர்.  ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி  பெற்றவர்களும் உண்டு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாலரும், பாரதீய ஜனதா வேட்பாலரும் சமமாக வாக்குப் பெற்றதால் குலுக்கல் முறையில் பாரதீய ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வெற்றி பெற்றவர்கள்  திராவிட முன்னேற்றக் கழ்கத்தில்  இணையும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை நகராட்சியில் பெரும்பான்மையான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது.  இந்நிலையில், நகராட்சி உறுப்பினராக வெற்றி பெற்ற அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் இணைத்தனர்.

சிவகங்கை நகராட்சி 4வது வார்டில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் சேதுநாச்சியார் வீரகாளை, 19 வார்டில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் பாக்கியலெட்சுமி விஜயகுமார் மற்றும் 22வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்  C.ள்.சரவணன் ஆகிய 3 பேரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் முன்னிலையில் திமுக-வில் இணைத்தனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை  சுய பரிசோதனை செய்ய வேன்டிய நிலை ஏற்பட்டுளது,. பன்னீரும், எடப்பாடியும் இன்னொருவர் மீது  இன்னொருவர் குற்றம் சுமத்தும் காரித்தைக் கைவிட வேண்டும். பாரதீய ஜனதாவின்  பிடி இறுகியுள்ளது. இந்த வெற்றி அவர்களுக்கு  நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. யாரும் எட்ட முடியாத உயரத்தில் ஸ்டாலின் இருக்கிறார்.

No comments: