Saturday, March 12, 2022

காலம் கடந்த வேண்டுகோள்

சேமிப்பே முதல் செலவாக இருக்க வேண்டும்  என்றசொல்லாடல்  சேமிப்புக்கான முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. சிறுதுளி பெரு வெள்ளம் என்பார்கள். சேமிப்பின்  பலனை வெளிப்படுத்துவதற்காக பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன.

  மின்சாரத்தைச் சேமிக்கும் படி அரசாங்கம் அறிவிக்கின்றது. வீதியில் ஒளிரும் மின்குமிழ்களை அணைத்து விடும்படி அமைச்சர் அறிவுரை சொல்லியுள்ளார். தேவையற்ற இடங்கலில் இரவு பகலாக ஒளிரும் மின் குமிழ்களை அனைத்தால் பல யுனிற் மின்சாரத்தை சேமிக்கலாம் என்பது  உண்மைதான்அதனை முன்நின்று செயற்படுத்துவது யார்   என்ற கேள்விக்கு  விடை தெரியவில்லை.

வீட்டின் அத்தியாவசியப் பாவனையாக மின்சாரம்  உள்ளது. மின்சாரம் இல்லை என்றால் வேலை செய்ய முடியாது என்ற நிலைக்கு சிலர் ள்ளப்பட்டுள்ளனர்.

மின்சாரம் இல்லாவிட்டால் இந்த உலகம் இருளில் மூழ்கிவிடும்.   எமது அன்றாட காரியங்களை கூட செய்ய முடியாத நிலையானது ஏற்படும். ஏன் என்றால் மின்சாரம் அந்தளவிற்கு எம் அனைவருக்கும் அவசியமான ஒன்றாக உள்ளது.

வீட்டிலே நாம் இன்று பல உபகரணங்களை பாவிக்கின்றோம். அவை அனைத்தையும் இயக்குவது மின்சாரம் தான்.வெளிச்சம் தருகின்ற மின்குமிழ்கள், பார்த்து ரசிக்கின்ற தொலைக்காட்சி, மின்விசிறிகள், குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மின் அழுத்திகள், நீர் இறைக்கும் பம்பிகள், மின்சார அடுப்புகள் நாம் பாவிக்கின்ற தொலைபேசிகள், கணணிகள் என பலவகையான இலத்திரனியல் சாதனங்கள் இயங்க நாள் முழுவதும் எமக்கு மின்சாரம் தேவையானதாக உள்ளது. எமது வாழ்க்கையில் இருந்து மின்சாரத்தை பிரிக முடியாத் வகையில் மின்சாரம் இறுக்கமாகப் பிணைக்கபட்டுள்ளது.

பெரும்பாலான தருணங்களில் வீட்டில் மின்விசிறிகள் சுழன்றுகொண்டிருக்கும், விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருக்கும். இவை போன்ற மின்சாதனங்களை அவசியமற்ற தருணங்களில் நிறுத்திவிடலாம். ஆனால் அப்படிச் செய்கிறோமா என்பது சந்தேகமே. நமது பணம், நமது உரிமை என்னும் மெத்தனத்துடன் செயல்படுகிறோம். மின்னாற்றலை வீணாக்குவது நல்லதல்ல என்பதால் இதில் நாம் கவனத்துடன் இருப்பது நல்லது. முடிந்தவரை மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் நாட்டின் மின் சேமிப்புக்கு நாமும் உதவலாம். சிறு அளவில் மேற்கொள்ளும் சேமிப்பும் ஒரு நாட்டுக்குப் பெருமளவில் உதவவேசெய்யும்

பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாடு எவ்வளவு என்பதை ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதன்படி, 12 சதவீதம் குளிர்பதனப் பெட்டிக்கும், 20 சதவீதம் குளிர்சாதன வசதிக்கும், 8 சதவீதம் விளக்குகளுக்கும், 32 சதவீதம் வெந்நீர்க் கொதிகலத்துக்கும், 28 சதவீதம் பிற சாதனங்களுக்கும் செலவாகிறது. அவசியத்துக்குத் தானே நாம் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறோம் என நாம் நினைக்கலாம். ஆனால் நமது அஜாக்கிரதையால்கூட சில சமயங்களில் மின்சாரம் வீணாகிறது, குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள அறையில் இடைவெளியற்ற முறையான கதவு இருக்க வேண்டும். சிறிய இடைவெளி இருந்தால்கூட மின்சாரம் வீணாகக்கூடும் எனவே இதைத் தவிர்க்க வேண்டும். 

மிசாரம் கண்டுபிடிக்கப்பட்டு, 200 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. மின்சாரம் இல்லாமல் சில மணி நேரம் கூட நம்மால் சமாளிக்க முடியாது என்ற அளவிற்கு அதன் முக்கியத்துவம் உள்ளது. மின்சாரம் என்பது வற்றாத வளம் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்; நாட்டுக்கு பெரிய அளவில் செலவு ஏற்படுத்தும் செயல்பாடுகளில், மின் உற்பத்தியும் ஒன்று. 

வீட்டின் மின்சாரப் பயன்பாட்டில் 20 சதவீதம் குளிர்சாதன வசதிக்கெனத் தேவைப்படுகிறது. ஆகவே இதன் மின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் அவசியம். பசுமையான வெப்பநிலையைத் தரும் வகையில் குளிர்சாதன வசதி இயந்திரம் இயங்க வழிசெய்ய வேண்டும். அறையின் வெப்பநிலையைக் கூட்டும் பொருள்களையோ சாதனங்களையோ அந்த அறையில் வைக்கக் கூடாது.

அவசியத்துக்கு மட்டும்  தான் பயன்படுத்துகிறோம்' என்று கூறும் நம்மில் பலரின் அலட்சியத்தால் மின்சாரம் வீணாக்கப்பட்டு பற்றாக்குறை ஏற்படுகிறது.ஒவ்வொரு மின் நுகர்வோரும் குறைந்தது, 40 வோட்ஸ் மின்நுகர்வைக் குறைத்தாலே 1,000 மெகாவோட்ஸ் பற்றாக்குறையைச் சரிசெய்யலாம் என ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டில் ஆளே இல்லாத அறையில் மின் விசிறி சுற்றிக்கொண்டிருக்கும், மின் விளக்குகள் எரியும். ஆனால், இதை நாம் கண்டுகொள்வதில்லை. மின்வெட்டு சமயங்களில் அரசை திட்டி தீர்க்கும் நாம்; பயன்பாட்டில் பொறுப்பின்றி இருக்கிறோம்.இயற்கை வளங்கள், செயற்கை வளங்கள் எதுவாயினும் அதை சேமிக்கும் வழக்கம் நமக்கு கட்டாயம் வேண்டும்.

பெரிய தொழிற்சாலைகளிலும்., வணிக வளாகங்களிலும்., கல்லூரி விடுதிகளிலும்., அரசு அலுவலகங்களிலும் சோலார் எனர்ஜி பயன்படுத்தப்படவேண்டும். அதை சேமிக்கும் வழி முறைகளையும் அதிகப்படுத்த வேண்டும். சோலார் குக்கர்கள்., சோலார் வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுத்தலாம். சாதாரண காலநிலை  உள்ள நம் நாட்டில் ஏசி யின் பயன் பாடு குறைக்கப்பட வேண்டும். இயற்கை காற்றையும் அனுபவியுங்கள்.. தேவையற்ற இடங்களில் லிஃப்டை உபயோகிக்காம படியை உபயோகியுங்கள்

மழை வீழ்ச்சி குறைவடைவதும்  மின் தடிக்குக் காரணம்.இயற்கை வளங்களும், காடுகளும் அழிக்கப்பட்டால்  மழை எப்படிப் பெய்யும்.

மின்சாரத்தைக் குறைப்பதற்கும், சேமிப்பதர்கு விடும் கோரிக்கைகளுக்குப் பதிலாக மாற்று வழியில் மின்சாரத்தை எப்படி உருவாக்குவடு  என சிந்தித்தால் மின் தடையை  இல்லாமல் செய்யலாம்.

 

No comments: