Sunday, March 27, 2022

அக்ஷர் படேல், லலித் யாதவ் அதிரடி வென்றது டெல்லி


   மும்பை ப்ராபரௌன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்  மும்பைக்கு எதிரான போட்டியில்  டெல்லி4 விக்கெட்டால் வெற்றி பெற்றது.

நானயச் சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமறிங்கிய ரோஹித் சர்மாவும், இஷான் கிஷன் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

ரோஹித் சர்மா 41 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் 8 ஓட்டங்கள் மட்டுமே அடித்தார். அடுத்து களமிறங்கிய திலக் வர்மா 22 ஓட்டங்களும், பொல்லார்டு 3 ஓட்டங்களும் மட்டுமே எடுத்தனர்.

மறுபுறம் சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 81 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் எடுத்தது.

 178 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டெல்லி ணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷாடிம் சைய்ஃபெர்ட் களமிறங்கினர்சைய்ஃபெர்ட் 21 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மன்தீப் சிங் ஒட்டம்  ஏதும் எடுக்காமலும்ரிஷப் பந்த்  ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.மறுபுறம் சிறப்பாக ஆடிய ப்ரித்வி ஷா 38 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மும்பையின் பக்கம் சென்ற வெற்றியை லலித் யாதவ், ஷ்ரதல் தாகுர் இணை   மீட்டது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷ்ரதல் தாகுர் சிறப்பாக ஆடி 22 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பசில் தம்பி சிறப்பாக பந்துவீசி அவரை ஆட்டமிழக்கச் செய்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அக்ஷர் படேல் அதிரடியைக் காட்டினார். 17 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றார். மறுபுறம் லலித் யாதவ் 48 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். டெல்லி அணி 18.2 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

No comments: