கொல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.தனிநபராக அசத்திய டோனி இரன்டு வருடங்களின் பின்னர் அரைசதம்விளாசினார்.
இந்தியாவில்
15வது ஐ.பி.எல்., தொடர்நேற்று துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல்
லீக் போட்டியில்'நடப்பு சாம்பியன்' சென்னை, கொல்கட்டாஅணிகள் மோதின. நாணயச் சுழற்சியில்
வென்ற கொல்கட்டா கப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
சென்னை
அணியின் துவக்க வீரர்களான ருதுராஜ், கான்வே தடுமாறினர். உமேஷ் 'வேகத்தில்' ருதுராஜ்
'டக்' அவுட்டானார். அடுத்து வந்த உத்தப்பா அசத்தினார். உமேஷ், ஷிவம் மாவி பந்துகளை
சிக்சருக்கு பறக்க விட்டார். மந்தமாக ஆடிய கான்வே மூன்று பந்துகளில் 8 ஓட்டங்கள் எடுத்து
ஆட்டமிழந்தார். வருண் 'சுழலில்' ஜாக்சனின் மின்னல் வேக 'ஸ்டம்பிங்கில்' உத்தப்பா(28)
சிக்கினார்.
நரைன் பந்தை தட்டி விட்ட கப்டன் ரவிந்திர ஜடேஜா தயக்கத்துடன் சில அடிகள் எடுத்து வைத்தார். அதற்குள் மறுமுனையில் இருந்த ராயுடு(15) பாதி துாரம் ஓடி வந்துவிட்டார். இதனை பார்த்த ஸ்ரேயாஸ் பந்தை எறிய, பரிதாபமாக ரன் அவுட்டானார். ரசலிடம் ஷிவம் துபே(3) 'சரண்டர்' ஆ ஓட்டங்கள் மட்டும் எடுத்ததால், பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போனது.
அணியை மீட்கும் முயற்சியில் ஜடேஜாவும் ,டோனியும் இறங்கினர்.ரசல் வீசிய 18வது ஓவரில் டோனி 3 சிக்சர் விளாச, 14 ஓட்டக்கள் எடுக்கப்பட்டரது.ன. தொடர்ந்து ஷிவம் மாவி வீசிய 'நோ-பாலை' தோனி சிக்சருக்கு அனுப்பினார். அப்போது 'தல இஸ் பேக்' என்ற வாசகம் 'மெகா ஸ்கிரீனில்' காண்பிக்கப்பட்டது.ரசல் வீசிய போட்டியின் கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த டோனி, 38 பந்தில் அரைசதம் எட்டினார். 40 வயசானாலும் தனது 'ஸ்டைலான' ஆட்டம் மாறவில்லை என்பதை நிரூபித்தார். ரசல் வீசிய கடைசி பந்தை ஜடேஜா சிக்சருக்கு அனுப்ப, சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 131 ஓட்டங் எடுத்தது. டோனி(50), ஜடேஜா(26) அவுட்டாகாமல் இருந்தனர்.
சுலப இலக்கை விரட்டிய கொல்கட்டா அணிக்கு ரகானே அசத்தல் துவக்கம் தந்தார். சென்னையின் பந்துவீச்சும் எடுபடவில்லை. மில்னே பந்தை சிக்சருக்கு அனுப்பினார் ரகானே. வெங்கடேஷ், 16 ஓட்டங்கள் . அடுத்து வந்த ராணா21 சான்ட்னர் 'சுழலில்' ரகானே44 ,சாம் பில்லிங்ஸ் 25 ஓட்டங்கள். பொறுப்பாக ஆடிய கப்டன் ஸ்ரேயாஸ்(20*) வெற்றியை உறுதி செய்தார். கோல்கட்டா அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 133 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டோனி
தடுமாறுவதில் ஆச்சரியமில்லை. அவர் முதல்தர போட்டிகள் ஆடி மூன்றாண்டுகள் ஆகின்றன. அவருக்குப்
போட்டியாக ஜடேஜாவும் தடுமாற, ஸ்கோர் போர்டை யாரோ pause செய்துவிட்டது போல ஸ்கோர் நகரவே
இல்லை. 17 ஓவர்கள் வரை ஸ்பின் தொடர, தட்டுத் தடுமாறி தடுத்தாடினார் டோனி. 18வது ஓவரில்
ரஸல் வர, மூன்று பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை ஏற்றினார் . அதுவரை 25 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்திருந்தவர்
இப்போது 30 பந்துகளில் 28 ஓட்டங்கள். அதற்கடுத்த ஓவர் ஷிவம் மாவி. அதிலும் ஒரு பவுண்டரி
ஒரு சிக்ஸர். 'தலலலலலல' என வின்டேஜ் டோனியை தரிசித்தார்கள் ரசிகர்கள். நப்பாசையாக
'ஒரு பிப்டி போட்டா நல்லாயிருக்குமே' என ஆசைப்பட்டாலும் அது மெடிக்கல் மிராக்கிள் என்றே
மூளை சொல்லியது.
'நான்
பார்நான் பார்க்காத மிராக்கிளாடா தம்பி?' எனக் கடைசி ஓவரில் தொடர்ந்து டோனி இரண்டு
பவுண்டரிகள் அடிக்க அரைசதத்திற்கு இப்போது தேவை ஒரே ஒரு ஓட்டம் மட்டுமே. லாங் ஆஃப்பில்
தட்டிவிட்டு சிங்கிள் ஓட, இறுதியாக அரைசதம். இரண்டு சீசன்கள் கழித்து. அதுவும் இனிமேல்
வாய்ப்பே இல்லை என எல்லாரும் நினைத்தபோது. 38 பந்துகளில்... மொத்த அரங்கமும் எழுந்து
நின்று சிலிர்க்க, சிம்பிளாய் பேட்டைத் தூக்கிக் காட்டிவிட்டு களத்தில் கவனம் செலுத்தினார்
டோனி. கடைசி பந்தில் சம்பிரதாயமாக ஜடேஜா சிக்ஸ் அடித்தார்.
No comments:
Post a Comment