Friday, March 11, 2022

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடும், விலை அதிகரிப்பும் 1970 ஆம்  ஆண்டை நினைவு படுத்துகிறது. அரிசி, கோதுமை மா, சீனி போன்ர உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூப்பன்  முறை அமுல் படுத்தப்பட்டது. பாண் வாங்குவதற்கு அதிகாலையில்  நீண்ட வரிசையில் காத்திருக்க  வேண்டிய நிலை உருவானது. ஒருவருக்கு ஒரு இறாத்தல் பாண் மட்டுமே  கொடுக்கப்பட்டது. ஆப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதே அனைவரின் விருப்பம்.

கோதுமை மா, பெற்ரோல், டீசல் என்பனவற்றின் சடுதியன விலை உயர்வு அடிமட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு பலத்த அடியாக  விழுந்துள்ளது.   ஒரு கிலோகிராம் கோதுமா மாவின் விலையை 35 ரூபாவால்  செரண்டிப் நிறுவனம்  அதிகரித்துள்ளது. பீரிமா நிறுவனம்  ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரித்துள்ளது. கோதுமை மாவின் விலை உயர்வால் வறுமைக்கோட்டினுள் வாழும் மக்கலின் வயிற்றிலடிக்கும் நிலை தோன்றியுள்ளது. பாண், பணிஸ்  போன்ற உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பைத் தடுக்க முடியாது.

மாவு நிறுவனங்கள், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை athikarikkappaddathan kaaraNamaaka anaiththu  பேக்கரி பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளthaaka (ACBOA) தலைவர் என்.கே.ஜெயவர்தன கூறினார்.

இதேவேளை எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, கோதுமை மா தட்டுப்பாடு, மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கடந்த சில மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.  மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் காரணமாக பல அடிப்படை உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதால், பெரும்பாலான இலங்கையர்களுக்கு அன்றாட வாழ்க்கை ஒரு போராட்டமாக மாறியுள்ளதுஇதேவேளை எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, கோதுமை மா தட்டுப்பாடு, மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. , தற்போது இயங்கி வரும் 6,000 பேக்கரிகளில் பெரும்பாலானவை தினசரி உற்பத்தியில் 50% கூட இல்லை என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்திருந்தார்.

இலங்கையில் வழங்கப்படும் அனைத்து விமான டிக்கெட்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாட்டில் நாணய மாற்று வீதம் அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் வழங்கப்படும் அனைத்து விமானப் பயணச்சீட்டுகளுக்கான கட்டணம் 27% ஆக அதிகரிப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டீசல் , பெற்றோல் ஆகியவற்றின் விலை உயர்வு மக்களின் தலையின் மீது விழுந்த இனொரு பேரிடியாக உள்ளது. பெற்றோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வால் போக்குவரத்து செய்வதில்  பெரும் நெருகடி தோன்றியுள்ளது. போக்கு வரத்து பஸ் கட்டணம் ஆகியன அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருளின் விலை உயர்வு காரணமாக ஏற்றி இறக்குக் கூலியும் அதிகரிக்கும், டீசலுக்கு 75 ரூபாவும், பெற்றோலுக்கு 50 ரூபாவும் அதிகரிக்கப்பட்டுளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) டீசல் விலையை உயர்த்தினால், பஸ் கட்டணத்தை அதிகரிக்கப் போவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் (LPBOA) மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் (IPPBOA) இன்று கூறியுள்ளன.

LPBOA மற்றும் IPPBOA இந்த அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு அரசாங்கம் உடனடி தீர்வுகளை தேட வேண்டும் என்று கூறியது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இருந்து தமது பஸ்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியவில்லை என LPBOA தலைவர் கெமுனு விஜேரதே மற்றும் IPPBA செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் ஆகியோர் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான டிப்போக்களில் இருந்து மக்களுக்கு தேவையான டீசலை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அஞ்சனா பிரியஞ்சித் கூறுகையில், டீசல் விலை உயரும் பட்சத்தில் குறைந்தபட்ச பஸ் கட்டணம் உட்பட மொத்த பஸ் கட்டணம் 50% உயர வேண்டும்.

இதேவேளை, இது தொடர்பில் அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

  விலைவாசி உயர்வு மற்றும் அதிக கடனின் இரட்டைச் சுமை ஆகியவற்றை இலங்கை எதிர்கொள்கிறது, மேலும் உள்நாட்டு நிலைமை மேலும் மேலும் மோசமாகி வருவதால்   மக்கள் அதன் சுமைகளைச் சுமந்து வருகின்றனர்.மருந்துகளின் விலை 18 சத வீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளது. புற்று நோய், சிறு நீரக நோய் ஆகியவற்றூக்கான மருந்துகள் குறைந்தளவே கையிருப்பில் உள்ளதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவிட்துள்ளது. கையில் இருக்கும் மருந்துகள் நான்கு மாதங்கள் வரை மட்டுமே  போதுமானதெனவும்  தெரிவிக்கப்படுகிறது.

2.2 கோடி மக்கள் வாழும் தீவுவான இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில்,  அந்நியச் செலாவணி கிட்டத்தட்ட 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு சரிந்துவிட்டதுஅதன் விளைவாக, அரசு சில அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிகளைக் குறைக்க வேண்டி வந்தது, அதில் உணவுப் பொருட்களும் அடக்கம். இது போக எரிபொருள் மற்றும் சரக்கு போக்குவரத்து விலை அதிகரிப்பால், பால் பவுடர் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரித்தது.

விலைவாசி அதிகரிப்பு இலங்கை மட்டுமே எதிர்கொள்ளும் பிரச்சனையல்ல. இந்தியா, பாகிஸ்தான் போன்ற மற்ற ஆசிய நாடுகளும் பணவீக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. ஆசிய கண்டத்தில் வாழும் மக்கள் தங்களின் தினசரி உணவு மற்றும் எரிசக்தி செலவுகளைச் சமாளிக்க மற்ற செலவுகளைக் குறைத்து வருகிறார்கள்.

வரவுக்கு  மிஞ்சி செலவு செய்யப்படுவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் நிலை தோன்றியுள்ளது.  இந்த இக்கட்டில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

No comments: