புனேயில் நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் 61 ஓட்டங்களால் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
இரு அணிகளும் இந்த தொடரில் தங்கள் முதல் போட்டியை விளையாடின. இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணியின் கப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 20 ஓட்டங்களில் வெளியேறினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 35 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மறுபக்கம் ஐதராபாத் பந்துவீச்சாளர்களை தேவ்தத் படிக்கல் துவம்சம் செய்தார். அவர் 29 பந்துகளில் 41 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்குஓட்டங்ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.தொடக்க வீரராக களமிறங்கிய கேன் வில்லியம்சன் 2 ஓட்டாங்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் தேவ்தத் படிக்கலிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதை தொடர்ந்து ராகுல் திரிபாதி மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகிய இருவரும் டக் அவுட்டாகினர். மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் ஐதராபாத் அணி 29ஓட்டங்களுளுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பிறகு களமிறங்கிய மார்க்ரம் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி நிலைத்து நின்று விளையாடினர். குறிப்பாக அதிரடி காட்டிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 40 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஐதராபாத் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் ராஜஸ்தான் அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
No comments:
Post a Comment