ஜெயலலிதாவால் ஆசீர்வதிக்கப்பட்டு முதலமைசரானவர் ஓ.பன்னீரச்செல்வம். சசிகலாவால் வஞ்சிக்கப்பட்டு முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் அவர் மீது தீரா வன்மம் கொண்டிருந்தார் பன்னீர். சசிகல நம்பி இருந்த எடப்பாடி துரோகம் செய்ததால் அரசியல் அரங்கில் அநாதையானார் சசிகலா. பன்னீர்ச்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் இணைந்தால்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கும் என்ற நிலை வந்த போது வேண்டா வெறுப்பாக இருவரும் சேர்ந்தனர். பெயருக்கு இரட்டைத் தலைமை. ஆனால், ஒற்றைத்தலைமையை நோக்கி காய் நகர்த்தினர்.
ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்னால் தர்ம
யுத்தம் செய்த பன்னீர் விதித்த முக்கிய நிபந்தனை
ஜெயலலிதாவின் மரணத்தைக் கண்டறிவதற்கான
விசாரணைக் கமிஷன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் தொடர்பாக விசாரிக்க,
ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை, 2017ல் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழக , அரசு அமைத்தது. சென்னை அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கால்,
2019-ல் நிறுத்தப்பட்ட விசாரணை, உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மீண்டும் துவங்கியுள்ளது.
விசாரணை ஆனையத்தி வாக்குமூலம் வழங்கும் படி
பன்னீர்ச்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அதனை அவர் தட்டிக்கழித்தார்.
ஆட்சி மாறியபின்னர் ஓடோடிச்சென்று வாக்குமூலம் கொடுத்தார்.
ஓ.பன்னீர்ச்செல்வம் என்ன சொலப்போகிறார் என்பதை அறிய இந்திய அரசியல்வாதிகள் அனைவரும் ஆவலாக இருந்தனர். ஜெயலலிந்தாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சை பன்னீர் அவிழ்பார் என எதிர்பார்த்த அனைவரும் ஏமாந்து போயினர். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகமில்லை. சசிகலா தரப்பு சதிசெய்யவில்லை, மக்கள் சந்தேகப்பட்டார்கள். அதனால்தான் விசாரணக் கமுஷன் வேண்டும் என்ச்சொனேன் என்று வாக்கு மூலம் கொடுத்தார் ஓ.பன்னீர்ச்செல்வம். எடப்பாடியைச் சிக்க வைப்பதற்காக பன்னீர் அரசியல் வலையை விரித்துள்ளார்.இது வரை காலமும் சசிகலா என்று சொலிய பன்னிர்ச்செல்வம் இன்று சின்னம்மா என மதிப்புக் கொடுத்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையைக் கைப்பற்றுவதர்கு சசிகலாவின் உதவி பன்னீருகுத் தேவைப்படுகிறது.
ஆறுமுகசாமி ஆணையத்தில்,அண்ணா திராவிட முன்னேற்றக்
கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முதல்
முறையாக ஆஜரானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது
முதல் மரணம் அடைந்தது வரை நடந்த சம்பவங்கள் தொடர்பான பெரும்பாலான கேள்விகளுக்கு, 'தெரியாது...
தெரியாது...' என்றே பதில் அளித்தார். ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை என
தெரிவித்த அவர், சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அழைத்துச் செல்லும்படி கூறியதாகவும் வாக்குமூலம்
அளித்தார். தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பன்னீர்ச்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது. அப்பலோ மருத்துவமனையின் சட்டத்தரணிகளும், சசிகலாவின் சட்டத்தரனிகளும் குறுக்கு விசாரணை செய்தனர். சுமார் 150 கேள்விகள் பன்னீர்ச்செல்வத்திடம் கேட்கப்பட்டன.
அதிகமான கேள்விகளுக்கு தெரியாது ஞாபகம் இல்லை. மரந்து விட்டேன் அனப் பதிலளித்தார்.
அப்போது பன்னீர் வெளியிட்ட அறிக்கைகளும், பேட்டிகளும் மக்களுக்கு ஞாபகத்தில் உள்ளது.
நீதிபதி ஆறுமுகசாமியும், ஆணைய வழக்கறிஞர்
நிரஞ்சனும் கேட்டனர். இடையிடையே, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன்
சில சந்தேகங்களை, நீதிபதியிடம் எழுப்பினார். இந்த விசாரணையின் போது, 'வீடியோ கான்பரன்ஸ்'
வாயிலாக டில்லி எய்ம்ஸ் டாக்டர்களும் பங்கேற்றனர்.
ஜெயலலிதாவின் மரணத்தில் நிலவும் மர்மம் தொடர்பாக பல்வேறு விவாதங்களை
பன்னீரின் ஓ பன்னீர்செல்வம் கொடுத்த முதல் பரபரப்பு வாக்குமூலம், தான் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை.ஜெயலலிதா
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் அவரை பார்த்தேன். மெட்ரோ திறப்பு
விழாவில் சந்தித்தேன். மறுநாள் செப்டம்பர் 22, 2016 அன்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் சேர்த்த பின் நான் அவரை சந்திக்கவே இல்லை. நான் சொந்த ஊரில் இருந்த
போது அதை பற்றி எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று வாக்குமூலம் கொடுத்தார்
திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி
தேர்தலில் ஜெயலலிதா கைரேகை போட்டது உண்மைதான். அது எனக்கு தெரியும் என்று ஓ பன்னீர்செல்வம்
குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா மரணம் காரணமாக அவர் சுயநினைவோடுதான் வேட்பாளர்கள் தேர்விற்கு
ஒப்புதல் அளித்தாரா என்ற கேள்வி நிலவி வந்தது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா கைரேகை போட்டது
உண்மைதான் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை
பற்றி தெரியாது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். ஜெயலலிதாவிற்கு உடலில் என்ன பிரச்சனை, நோய்
இருந்தது என்று எனக்கு தெரியாது. அவருக்கு சர்க்கரை அதிகமாக இருந்தது மட்டும் எனக்கு
தெரியும் என்று ஓபிஎஸ் குறிப்பிட்டார். அதோடு இவரிடம் சிகிச்சை பற்றிய கேள்விகள் எதையும்
கேட்க கூடாது என்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சசிகலாதான் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அப்டேட்களை தனக்கு வழங்கியதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு இருந்த போது அவர் நன்றாக இருப்பதாக சசிகலாதான் என்னிடம் கூறினார். ஜெயலலிதா உடல்நிலை பற்றி என்னிடம் தெரிவித்து வந்தார்.ஆனால் ஆட்சி நிர்வாகம் ரீதியாக சசிகலா என்னிடம் எதுவும் கூறவில்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது சரியாக
35வது நாளில் அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பது பற்றி பேசியதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இதை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் பேசினேன். ஆனால்
அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்து
சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதா ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு உள்ளதாக ப்போலோ தலைவர்
பிரதாப் ரெட்டி மருமகன் விஜயகுமார் ரெட்டி என்னிடம் தெரிவித்தார் என்று ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
சிசிடிவி இதில் இன்னொரு முக்கியமான வாக்குமூலம்
அப்போலோ சிசிடிவி. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி அகற்றப்பட்டது
ஏன் என்ற கேள்வி நிலவி வருகிறது. ஆனால் இந்த சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும்
சொல்லவில்லை. அதற்கும் தனக்கு தொடர்பு இல்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதா
என்ன சாப்பிட்டார் என்பது போன்ற விவரங்கள் எதுவும் தனக்கு தெரியாது என்றும் ஓபிஎஸ்
கூறியுள்ளார்.
இதில் சமீபத்தில் கொடுத்த வாக்குமூலம்தான்
முக்கியமானது. அதில், ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை. தனிப்பட்ட
முறையில் நான் சந்தேகம் அடையவில்லை. பொதுமக்களிடயே கருத்து வலுத்ததால் மட்டுமே நான்
அதை பற்றி விசாரிக்க கோரிக்கை விடுத்தேன். சசிகலாவை நான் தனிப்பட்ட முறையில் மதிக்கிறேன்
என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். பார்த்ததாக
வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், நான் உட்பட 3 அமைச்சர்கள் ஜெயலலிதாவை அவரின் மரணத்திற்கு
முன்பாக சந்தித்ததாக அவர் தனது வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதாவிற்கு எக்மோ கருவி
நீக்கப்பட்ட முன்பாக, டிசம்பர் 5ம் திகதி ஜெயலலிதா மறைவிற்கு முன்பாக அவரை பார்த்ததாக
ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். வாக்குமூலங்கள்
எழுப்பி உள்ளன.
எதற்காக மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. அப்போது சொந்த ஊரில் இருந்தேன். நள்ளிரவில் உதவியாளர் வாயிலாக தகவல் கிடைத்தது. மறுநாள் பிற்பகலில், அப்பல்லோ மருத்துவமனை சென்றேன். அங்கு இருந்த தலைமை செயலர் ராம்மோகன் ராவிடம் விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டேன்.
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, அன்றைய சுகாதார
அமைச்சர் விஜயபாஸ்கர் மூலமாக தெரிந்து கொள்வேன். காவிரி குறித்த கூட்டத்திற்கு பின்,
ஜெயலலிதாவுக்கு இதய பிரச்னை ஏற்பட்டு, உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டதும் எனக்கு தெரியாது.
ஆனால், ஜெயலலிதா இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன், விஜயபாஸ்கரிடம் கேட்டபோது,ஜெயலலிதாவுக்கு
இதய பாதிப்பு இருந்ததாக கூறினார்.
எந்த ஒரு விசயத்தையும் ஓ.பன்னீர்ச்செல்வம் முழுமையாகச் செய்யவில்லை. இன்னொருவர் செயற்படிதான் நடந்தார். விசாரணைக் கமிசன் இப்போதுதான் சூடு பிடித்துள்ளது.
No comments:
Post a Comment