Saturday, March 12, 2022

சாதித்தது பா.ஜ. க: வளர்கிறது ஆம் ஆத்மி: காணாமல் போன காங்கிரஸ்

ஐந்து மாநில சட்ட சபைத் தேர்தல்களில் பாரதீய ஜனதா, ஆம் ஆத்மி ஆகியன  வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி கரைந்து விட்டது.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநிலங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடந்தது. மற்ற மாநிலங்களில் பா.., ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் ஆட்சி செய்த பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.

பாரதீய ஜனதாவுக்கு எதிரான வாக்குகளை எதிரணிகள்  சிதறடித்ததால் பாரதீய ஜனதா இலகுவாக வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் பத்து வருடங்களாக கடுமையாக உழைத்த ஆம் ஆத்மி அறுவடை செய்துள்ளது. டில்லியில் மட்டுமே சுழன்றடித்த ஆம் ஆத்மி பஞ்சாப்பிலும் கால் பதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சி மாறியதும், காங்கிரஸின் உள்ளக அரசியலும் அக் கட்சியின் தோல்விக்கு  பிரதான காரணமாகும்.

ஐந்து மாநிலங்களிலும் முன்னொருகாலத்தில் ஆட்சி பீடத்தில் இருந்த காங்கிரஸ் மிக மோசமான தோல்வியைச் சந்துத்துள்ளது. கோவாவில் கடந்த முறை போல் உறுப்பினர்கள் கட்சி மாறிவிடாமல் இருப்பதற்காக அவர்களிடம் வாக்குறுதி வாங்கியது. தேர்தல் முடிந்த பின்னர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஆனால்,   எண்ணிக்கை துவங்கிய நிலையில் அக்கட்சியின் கனவுகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் தவிடு பொடியாகியன‌. பஞ்சாபில் ஆட்சியை ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடிக்கிறது.


கோவாவில் பா.., ஆட்சி மீண்டும் அமைய உள்ள நிலையில், முதல்வர் யார் என்பதில் தற்போதைய முதல்வர் பிரமோத் சாவந்துக்கும், அமைச்சர் விஷ்வஜித் ராணேவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

கோவாவில், 40 உறுப்பினர்கள் அடங்கிய சட்டசபைக்கு கடந்த மாதம் தேர்தல் நடந்தது.  தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள பா.., ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கிடையே, பா..,வில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போது முதல்வராக உள்ள பிரமோத் சாவந்தே மீண்டும் முதல்வராக வேண்டும் என கோவா பா..,வில் ஒரு பிரிவினர் வலியுறுத்துகின்றனர்.

மேலும் சிலர், மாநிலத்தில் மூத்த அமைச்சர் விஸ்வஜித் ராணே முதல்வராக வேண்டும் என விரும்புகின்றனர். இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவைப் பொறுத்தே, முதல்வர் யார் என்பது தெரியும். இது பற்றி விஸ்வஜித் ராணே கூறுகையில், ''கட்சி மேலிடம் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன். ஏனெனில், கட்சியில் நான் ஒரு சாதாரண தொண்டன்,'' என்றார்.

நான்தான் அடுத்த முதல்வர்' என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்த சித்துவும் தோற்றுவிட்டார். அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் ஜீவன் ஜோத் கவுர் என்ற ஆம் ஆத்மி கட்சியின் பெண் வேட்பாளரிடம் அவர் தோற்றுவிட்டார்.


முதல்முறையாக பிரமாண்ட வெற்றி பெற்று பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்கிறது ஆம் ஆத்மி கட்சி. ஆட்சி அவர்களுக்குத்தான் என்று கருத்துக் கணிப்புகள் சொன்னாலும், 117 தொகுதிகளில் 90-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்து ஆட்சியில் அமர்வது மகத்தான சாதனை. டெல்லியை அடுத்து ஆம் ஆத்மி ஆட்சி அமையும் இரண்டாவது மாநிலம் பஞ்சாப். காங்கிரஸும் ராஜஸ்தான், சட்டீஸ்கர் என இரண்டே மாநிலங்களில்தான் ஆட்சியில் இருக்கிறது. எனவே, காங்கிரஸுக்கு சமமான அந்தஸ்தை ஆம் ஆத்மி பெற்றிருக்கிறது எனலாம்.

பஞ்சாப்பில் முதல்வர் போட்டியில்  இருந்த அத்தனை பேரையும் மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறது ஆம் ஆத்மி. இதன்மூலம் முறையான எதிர்க்கட்சியே இல்லாமல் செய்ததுடன், வலுவான எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் சட்டமன்றத்துக்குள் நுழைய முடியாதபடி செய்துவிட்டது.

ஆட்சியை இழந்திருக்கும் காங்கிரஸ் கட்சியில் முதல்வராக இருந்தவர் சரண்ஜித் சிங் சன்னி. இவரையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து, இரண்டு தொகுதிகளில் போட்டியிடவும் வைத்தது காங்கிரஸ். இரண்டு தொகுதிகளிலும் அவர் தோற்றுவிட்டார்.பதார் தொகுதியில் லப் சிங் உகோக் என்ற எளிய ஆம் ஆத்மி தொண்டரிடம் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் சன்னி தோற்றிருக்கிறார். லப் சிங்கின் தந்தை டிரைவராக இருக்கிறார். அம்மாவோ அரசுப் பள்ளி ஒன்றில் துப்புரவுத் தொழிலாளியாக இருக்கிறார்.

சம்கார் சாஹிப் என்ற இன்னொரு தொகுதியிலும் முதல்வர் சன்னிக்கு தோல்வியே கிடைத்தது. கடந்த முறை இங்கு அவர் ஜெயித்திருந்தார். இம்முறை அவர் பெயர் கொண்ட சரண்ஜித் சிங் என்ற ஆம் ஆத்மி வேட்பாளரிடமே அவர் தோற்றுவிட்டார். இந்த சரண்ஜித் கண் மருத்துவராக இருக்கும் கோடீஸ்வரர்.

காங்கிரஸில் முதல்வர் பதவிக்காக முட்டி மோதிய இன்னொருவர் நவ்ஜோத் சிங் சித்து. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே காங்கிரஸ் கட்சியில் நிகழ்ந்த பல குழப்பங்களுக்கு சித்துவே காரணமாக இருந்தார். முதல்வர் சன்னியை வெளிப்படையாக விமர்சனம் செய்தார். சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததும் அவருக்குப் பிடிக்கவில்லை. 'நான்தான் அடுத்த முதல்வர்' என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்த சித்துவும் தோற்றுவிட்டார். அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் ஜீவன் ஜோத் கவுர் என்ற ஆம் ஆத்மி கட்சியின் பெண் வேட்பாளரிடம் அவர் தோற்றுவிட்டார்.

 முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பெரும்பாலான காலம் முதல்வராக இருந்தவர் ப்டன் அமரிந்தர் சிங். காங்கிரஸ் கட்சியில் எழுந்த கலாட்டாவில் பதவியை ராஜினாமா செய்தவர். பிறகு கட்சியை விட்டே விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார். பா..-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.

பஞ்சாப் தேர்தல் களத்தில் இருந்த ஐந்து முதல்வர் வேட்பாளர்களையும் ஆம் ஆத்மி கட்சியே வீழ்த்தியது விநோதம். ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், தான் போட்டியிட்ட துரி தொகுதியில் அத்தனை வேட்பாளர்களையும் கட்டுப்பணம் இழக்கச் செய்து ஜெயித்திருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் இரண்டாவது முறையாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டுள்ளார்.உத்தரப்பிரதேசத்தில் மிகவும் இளம் வயதில் முதல்வரானவர் என்ற பெயருடன் இருப்பவர் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். முலாயம் சிங் யாதவ் மகனான அகிலேஷ் யாதவ் 2012-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வந்த திடீர் முதல்வராகவே பார்க்கப்படுகிறார். அது வரை சமாஜ்வாடி கட்சி தலைவராகவும், 3 முறை முதல்வராகவும் இருந்த முலாயம் சிங் யாதவ் மூன்று முறையும் பிறகட்சிகளின் துணையோடுதான் முதல்வர் பதவியில் இருந்தார். ஆனால் 2012-ம் ஆண்டு நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 224 தொகுதியில் வெற்றி பெற்றுதனிப்பெரும் கட்சியாக வந்தது. அந்நேரம் 73 வயதில் இருந்த முலாயம் சிங் யாதவ் தனது மகனை முதல்வராக்க இதுவே சரியான நேரம் என்று கருதி அகிலேஷ் யாதவை முதல்வராக்கினார்.

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவே எதிர்பாராத விதமாக பிற்படுத்தப்பட்ட தலைவர்களை தன் வசம் இழுத்த அகிலேஷ் யாதவ் பாஜகவிற்கு கடுமையான போட்டியை கொடுத்தார். இதனால் பாஜக அகிலேஷ் யாதவ் குடும்பத்தில் இருந்து சிலரை தங்களது கட்சிக்கு இழுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களில் சமாஜ்வாடி கட்சி 150 இடங்களுக்கு குறையாமல் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த எண்ணிக்கையை பெற முடியாமல் அகிலேஷ் யாதவ் இரண்டாவது முறையாக தோல்வியை தழுவி இருக்கிறார். இன்னொரு புறம், பலம் வாய்ந்த பாஜக-வுக்கு எதிராக தனியாக களத்தில் நின்று கடந்த முறை பிடித்த இடங்களை விட இரு மடங்குக்கும் அதிகமான இடங்களை அகிலேஷ் கைபற்றியுள்ளதே பாஜகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவும் அரசியல் பார்வையாளர்களால் முன்வைக்கப்படுகிறது. அகிலேஷ் மீண்டும் கோட்டை விட்டாரா, அல்லது இது வெற்றிகரமான தோல்வியா என்பது 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜகவை எதிர்ப்பதில் அவரின் வியூகம் போன்றவை முடிவு செய்யும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. நாட்டில் அதிக தொகுதிகளை கொண்ட மாநிலம் என்பதால், நாடாளுமன்ற தேர்தலிலும் உத்தரபிரதேசம் அதிக கவனம் கொண்டதாக இருக்கும்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இத் தேர்தல் கணிக்கப்படுகிறது.

No comments: