Saturday, March 19, 2022

ராகுல் காந்திக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி

 உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியை சந்தித்து உள்ளது. தோல்வியைப் பற்றி ஆராய்வதற்காககட்சியின் செயற்குழு கூட்டம் சமீபத்தில் டில்லியில் நடந்தது.இதில், கட்சி தலைவர் பதவியில் இருந்து சோனியா விலகப் போவதாகத் தெரிவித்தார். ஆனால்சோனியாவே நீடிப்பார் என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. ராகுலும்பிரியங்காவும் தமது பொறுப்புகளில் இருந்து விலகத் தீர்மானித்தனர்.செயற்குழுக் கூட்டம் அதற்கும் அனுமதி கொடுக்கவில்லை.

  தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஐந்து மாநில காங்., தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என சோனியா உத்தரவிட்டார். தோல்வியைப்  பற்றி ஆராய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இல்லாத  பாரதம் எனபதே  மோடியின் கோஷம். ராகுல் இல்லாத காங்கிரஸ் உருவாகப் போகிறதோ என்ற அச்சம் உருவாகி உள்ளது.

கடந்த 2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து, காங்கிரஸ் தொடர்ந்து பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருவது, கட்சித் தலைமை, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, 'கட்சியில் சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என 23 மூத்த தலைவர்கள், கட்சித் தலைவர் சோனியாவுக்கு, 2020ல் கடிதம்எழுதியிருந்தனர். தற்போதைய தோல்விகளுக்குப் பின், அவர்கள் அதை மீண்டும் வலியுறுத்தினர். இதையடுத்து, தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக, கட்சியின் உயர்நிலை அமைப்பான செயற்குழுவின் கூட்டம் சமீபத்தில் நடந்தது.

இதில், 'உட்கட்சி தேர்தல் நடக்கும் வரை, சோனியாவே கட்சித் தலைவராக தொடருவார்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சோனியா, அவருடைய மகனும், முன்னாள் தலைவருமான ராகுல், மகளும், பொதுச் செயலருமான பிரியங்கா ஆகியோர்கட்சியில் இருந்து விலகிஇருக்க தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு ஆதரவான கட்சியின் மூத்த தலைவர்கள், இதை நிராகரித்தனர்.

இந்தியாவில் நடைபெற்ற 50 தேர்தல்களில் ஒன்பது தேர்தல்களில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதுவும் மாநிலக் கட்சிகளின் பலத்தில்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது.உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பலமான கட்சியாக ஒரு காலத்தில் விளங்கியது.400க்கும் அதிகமான தொகுதிகளில்  இரண்டு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

மாநிலத்தில் செல்வாக்குள்ளவர்கள் புதிய கட்சிகளை ஆரம்பித்தது காங்கிரசுக்கு விழுந்த முதல் அடியாக  விழுந்தது. தொடர் தோல்விகளால் துவண்ட மூத்த தலைவர்கள்  பாரதீய ஜனதாவிலும் வேறு கட்சிகளிலும் இணைந்ததும் தோல்விக்குப் பிரதான காரணம்.

தேர்தல் தோல்விக்கு காரணம் தேட, காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 'ராகுல் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை' என, 'ஜி - 23' என்று அழைக்கப்படும் 23 மூத்த அதிருப்தி தலைவர்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்

 23 அதிருப்தி தலைவர்கள் கூட்டம்டில்லியில், மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வீட்டில் நடந்தது. இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.'அனைவரையும் அரவணைத்து செல்லும், திடமான முடிவுகள் எடுக்கக்கூடிய தலைமை தான் கட்சிக்கு தேவை' என, கூட்டத்தின் முடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இக்கூட்டத்தின் நோக்கம் குறித்து சோனியாவிடம், தொலைபேசி வாயிலாக குலாம் நபி ஆசாத் பேசி விளக்கியதாகவும் கூறப்படுகிறது.

"ராகுல் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. கட்சி பிளவுபடுவதை நாங்கள் விரும்பவில்லை. பிளவை தாங்க முடியாத அளவுக்கு கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது.

கட்சி மீண்டும் வலு பெற வேண்டும்; அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். தனக்கு பொய்யான தகவல்களை கூறி வரும் தலைவர்களை, சோனியா ஒதுக்கி வைக்க வேண்டும்.அனைத்து தரப்பினரும் ஏற்கக்கூடிய மிகவும் வலுவான தலைமை கட்சிக்கு தேவை. இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், கட்சி மிக மோசமான விளைவுகளைசந்திக்க நேரிடும்" என்றார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் 23 அதிருப்தி தலைவர்கள், மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் டில்லி இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.இதில் கபில்சிபல், ஆனந்த்ஷர்மா, பூபிந்தர்சிங் ஹூடா, சசிதரூர், மணிசங்கர ஐய்யர், அம்பிகா சோனி, மணீஷ் திவாரி உள்ளிட்டோர் பங்றே்றனர்.இந்நிலையில்   பூபிந்தர்சிங் ஹூடா, காங். எம்.பி., ராகுலை சந்தித்து பேசினார். 45 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. விரைவில் மற்ற அதிருப்தி தலைவர்களும் சந்தித்து பேசலாம் என கூறப்படுகிறது.

ஐந்து மாநிலத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. கடந்தகால வெற்றியுடன்  ஒப்பிடும்போது  குறைந்த தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது.இதன் காரணமாக நன்கு   மாநிலங்களில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. கங்கிராசஸ் ஆட்சி செய்த  பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இது பாரதீய ஜனதாவுக்குக் கிடைத்த  தோல்வியாகும். தேசியக் கட்சிகளை வீழ்த்தி மாநிலக் கட்சிகள் ஆட்சியைப் பிடிப்பது  வழமைதான். டிலியில் மையம் கொண்ட ஆம் ஆத்மி, பஞ்சாப்பில் தேசியக் கட்சிகளை வீழ்த்தீயது இந்தியத் தேர்தல் வரலாற்றில் புதிய பாய்ச்சலைத் தோற்றியுள்ளது.

எதிர்க் கட்சிகள் னித்தனியாகப் போட்டியிட்டதே பாரதீய ஜனதாவின் வெற்றிக்கு பிரதான காரணம். ஆய்வாளர்கள் பலமுறை இதனைச் சுட்டிக் காட்டியும் பதவி ஆசை கண்னைக் கடியது. தோல்வியின் பின்னர் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட தயாராக  இருப்பதாக மம்தா அறிவித்துள்ளார்.

 மோடி, அமித் ஷா ஆகியோருக்கு எதிரான வலிமை மிக்க தலவர் காங்கிரஸில் இல்லை. வலிமை மிக்க புதிய தலைவரைத் தேட வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.சரத் பவர்ர், மம்தா போன்ற மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியின் தலைமையை விரும்ப மாட்டார்கள். அனுபவம் மிக்க மூத்த தலைவர் காங்கிரஸ் கட்சிக்குத் தலலைமை ஏற்க வேண்டும்.

திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க் கட்சியாக இருந்த போது கருணாநிதி மறைந்தார். அப்போது கட்சிகுத் தலைவரான ஸ்டாலின், தனது சாதுரியமான அரசியல் நகர்வுகளால் கூட்டணித்தலைவர்களில் ஆதரவைப் பெற்று தமிழக முதல்வராக வீற்றிருக்கிறார். அப்படியான பல சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் ராகுல் அதனைத் தவற விட்டார். பாரதீய ஜனதாவை எதிர்க்க பலமான தலைவர் காங்கிரஸுக்குத் தேவை. அதுதான் மத சார்பற்ற இந்தியாவின் அடையாளம்.

No comments: