Friday, March 25, 2022

வாழ்வாதார நோக்கிலான அகதி வாழ்க்கை


பொருளாதார  நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிவகைகளை   இலங்கை அரசாங்கம் ஆராய்ந்துகொண்டிருக்கிறது. இந்த நெருக்கடியான  காலகட்டத்தில் ஆட்சிமற்றத்துக்கான போராட்டங்களை எதிர்க் கட்சிகள்  முடுக்கி விட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வீதி வீதியாக அலைகிறார்கள் அல்லது நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

கடந்த வாரம் இலங்கையில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நடந்தன. ஒன்று  சர்வகட்சி மாநாடு.  அடுத்தது இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் சென்றது.  

  தலைப்புச் செய்தியாக வரவேண்டிய சர்வகட்சி மாநாட்டுச் செய்திகள்  பெட்டிச்செய்தியாகப் பிரசுரமாகின.   சர்வகட்சி மாநாட்டுச் செய்திகள் வலுவிழந்த நிலையில் இலங்கையில் இருந்து அகதிகள் தமிழகம் சென்றது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.  

உயிர் வாழ முடியாத அச்சம் காரணமாக மக்கள் இடம்  பெயர்ந்து  அகதியாக  செல்வது உலக நியதி.  சாப்பிட வழி இல்லாது அகதியாக இன்னொரு நாட்டுகுச் செல்வது உலக ஆச்சரியம்தான். தமிழக மீனவர்கள் மீதான துன்புறுத்தல்,கொலை எல்லாவற்றையும் மறந்து அகதிகள் வரவேற்கப்பட்டுள்ளனர்.

  வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது. உணவுப் பஞ்சம் ஏற்படு என்ற அச்சத்தால் சட்டவிரோதமாக கடல்வழியில் உயிரைப் பணயம் வைத்து படகுகளில் தமிழகத்திற்கு அகதிகள் செல்லத் தொடங்கியுள்ளனர்.

ளாக வரத் துவங்கி உள்ளனர். அப்படி வருவோரை இப்போதுள்ள சட்ட நடைமுறையின்படி, சிறையில் அடைக்க ராமேசுவரம் நீதிமன்றம் உத்தரவிட்டு வரும் நிலையில், இந்தப் பிரச்சினையை தமிழக அரசு எப்படி அணுகப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை தலா மூன்று பேர் என மொத்தம் 6 கொண்ட இரண்டு குடும்பத்தினர் அதிகளாக ஒரே படகில் தனுஷ்கோடி அருகே உள்ள நான்காம் மணல் தீடை பகுதியில் இறங்கினர். செவ்வாய்க்கிழமை இரவு வவுனியாவிலிருந்து  10 பேர் ஒரு ஃபைபர் படகில் தனுஷ்கோடிக்குச் சென்றுள்ளனர்.

 இந்த 10 பேரும் தலைமன்னாரில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை புறப்பட்டு நடுக்கடலில் படகின் என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக உணவு, தண்ணீர் இன்றி சுமார் ஒன்றரை நாட்களாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்தளித்த நிலையில், என்ஜினை சரி செய்து தனுஷ்கோடியின் வடக்கு மீன்பிடி இறங்குதளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு  இறங்கியதாக அதிகாரிகளின் விசாரணையின்போது தெரிவித்தனர்.

இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்திலிருந்தே அகதிகளாகச் சென்றஇலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், 2012-ம் ஆண்டின் இறுதியில் இருந்து இலங்கையில் இருந்து அகதிகளாக வருபவர்களை காவல்துறையினர் கைது செய்து பாஸ்போர்ட் ஆவணச் சட்டத்தின் கீழும், சட்ட விரோதமாக வந்ததாகவும் 2 பிரிவுகளிலும் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தின் மூலம் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.

தமிழக  முதலமைச்சரின் கவனத்துக்கு அகதிகள் விவகாரம் சென்றுள்ளது. மத்திய அரசுடன்  பேசி இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம்  பிறக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முயற்சிக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஸ்டாலினின்  உறுதி மொழி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

  இலங்கையில் 1983-ம் ஆண்டு உள்நாட்டு போர் துவங்கிய போது     தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனால், இலங்கையிலிருந்து இருந்து அகதிகளாக உலகம் முழுவதும் தமிழ் மக்கள் புலம்பெயரத் துவங்கினர். கடந்த 1983-ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் சென்றுள்ளனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR), தமிழக மற்றும் இந்திய அரசின் மூலமாக சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் இலங்கைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களை அனைவரையும் இலங்கையில் குடியேற்ற வேண்டும் என்ற திட்டம் உள்ளது.

   இலங்கையில் இருந்து   வெளீநாடு செல்வோரின் தொகை அதிகரித்துளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடவுச்சீட்டு, விஸா பெற்று பலர் வெளியேறுகின்றனர். இந்த நிலையில், ஆகதியாக  இந்தியாவுக்கு  மக்கள்  செல்வார்கள் என யாரும் எதிர் பார்க்கவில்லை.  இலங்கைக் கடற்படை, இந்திய கரையோர கண்காணிப்பு அமைப்பு எல்லாவற்றிலும் மண்ணைத்தூவி விட்டு  அகதிகள் சென்றுள்ளார்கள். இன்னும் பலர் வரப்போவதாக அவர்கள் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர். இதனால்  இலங்கையின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்பதை  உலகம் அறியக்கூடியதாக  உள்ளது.

மோசமான பொருளாதார நிலையில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கையை எடுப்பதாக அரசாங்கம் சொல்கிறது. அதற்கிடையில் இன்னும் எதனை பேர்  அகதிகளாக இந்தியாவுக்குச் செல்லப்போகிறார்கள்  எனத் தெரியவில்லை.

No comments: