ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் புதிதாக 2 அணிகளுடன் சேர்ந்து 10 அணிகள் இம்முறை போட்டியிடுகின்றன. ஏற்கனவே இதே போன்று 10 அணிகள் மோதிய போது ஐபிஎல் தொட்ரில் என்ன நடந்தது என்பதை ஒப்பீட்டு ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். அப்போது சென்னை சம்பியனாகியதால் இம்முறையும் சென்னை சம்பியனாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கும், இப்போது நடைபெற உள்ள தொடருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் 10 அணிகள் பங்கேற்பது போல், 2011ஆம் ஆண்டும் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் மோதின. 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதே போன்று இந்த ஆண்டும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. 2011ஆம் ஆண்டு நடப்பு சாம்பியனாக சிஎஸ்கே களமிறங்கியது. இதே போன்று 2022ஆம் ஆண்டு நடப்பு சாம்பியனாக சிஎஸ்கே அணி களமிறங்குகிறது. 2011ஆம் ஆண்டு 10 அணிகள் இரண்டு பிரிவுளாக பிரிக்கப்பட்டன. இதே போன்று 2022 ஐபிஎல் தொடரும், இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதே போன்று 2022ஆம் ஆண்டின் முதல் போட்டியில் சிஎஸ்கேவும், கொல்கத்தாவும் மோதுகின்றன. இதனால் 2011ஆம் ஆண்டு சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்றது போல் 2022ஆம் ஆண்டும் சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அப்படி வெல்லும் பட்சத்தில் அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சிஎஸ்கே சமன் செய்யும். ஆனால் இந்த பயணம் அவ்வளவு எளிதாக இருக்காது. ஏனெனில் மெகா ஏலத்தில் பல்வேறு அணிகள், தங்களது வீரர்களை மற்ற அணியிடம் பறி கொடுத்துவிட்டன. இதனால் எந்த அணி விரைவில் அணியை கட்டமைத்து, சிறப்பாக விளையாடுகிறரோ, அந்த அணியே சாம்பியன் பட்டம் வெல்லும்.
No comments:
Post a Comment