கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக இரவு பகலாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஒடி ஓடி பிரசாரம் செய்தவர்களை அரசாங்கம் தூக்கி எறியத் தயாராகிவிட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரம் கட்டத்தொட்ங்கிவிட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களையும் பிரதான உறுப்பினர்களையும் அரசாங்கம் கண்டு கொள்வதில்லை. அரசாங்கத்தில் இருந்து வெளியேறப் போவதாக மிரட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குரலுக்கு எந்த விதமான எதிர்வலைகளும் கிளம்பவில்லை. அதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குரல் தானாக அமைதியாகிவிடும்.
முழு நாடும்
சரியான
பாதையை
நோக்கி”
என்ற
திட்டத்தை
அண்மையில்
ஆரம்பித்த
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11கட்சிகள் தனியாகச் செயற்பட
முடிவு
செய்துள்ளன.,
தற்போது
முன்னாள்
ஜனாதிபதி
மைத்திரிபால
சிறிசேன
அல்லது
முன்னாள்
ஜனாதிபதி
சந்திரிக்கா
பண்டாரநாயக்கவின்
தலைமையில்
ஒரு
பரந்த
கூட்டணியை
உருவாக்குவது
குறித்து
ஆலோசித்து
வருகின்றன.
குமாரதுங்கவும்
இதையே
வழிநடத்துவார்
என்றும்
தி
மோர்னிங்
தெரிவித்துள்ளது.
“நாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக உணர்கிறோம். ஆம், நாங்கள் கூட்டணி அமைப்பதற்கான விவாத கட்டத்தில் இருக்கிறோம், அதுவும் நிச்சயம் நடக்கும். யார் வழிநடத்துவது என்பது குறித்து, நாம் இன்னும் முடிவு செய்ய வேண்டும். 1997ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாதம் ஒருமுறை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அரசாங்கம் மற்றும் நாடு தொடர்பான தீர்மானங்கள் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் இருந்தது. இப்போது தெளிவாக, அரசாங்கத்தின் முக்கிய நபர்கள் மட்டுமே தங்கள் சொந்த கூட்டங்களைக் கொண்டுள்ளனர், நாங்கள் இரண்டாம் தர குடிமக்களைப் போல ஒதுக்கி வைக்கப்படுகிறோம். இனி யாரும் மகிழ்ச்சியாக இல்லை” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
அமைச்சர்களுடன் கலந்துரையாடாமல்
ஜனாதிபதி
தனக்குத்
தோன்றியவாறு
தீர்மானங்களை
மேற்கொள்வதாகவும்,
அதனால்
இலாகாக்கள்
இழந்தாலும்
இழப்பதற்கு
எதுவுமில்லை
என
அரசியல்
கட்சி
உறுப்பினர்கள்
கருதுவதாகவும்
குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது.
"ஜனாதிபதி சம்பந்தப்பட்ட
அமைச்சர்களுடன்
கலந்தாலோசித்த
பிறகு
முடிவுகளை
எடுப்பதில்லை,
எனவே
யாராவது
தங்கள்
இலாகாக்களை
இழந்தாலும்
உண்மையில்
இழப்பதற்கு
எதுவும்
இல்லை"
என்று
தி
மோனிங்
தெரிவித்தது.
சந்திரிகா அல்லது மைத்திரி
தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசாங்கத்தில் இருந்து
வெளியேறிய 11 கட்சிகள் இந்தக் கூட்டனியில்
இணையலாம் எனக் கருதப்படுகிறது.
பிரதமர் மகிந்த
ராஜபக்ஷவுடன்
மிக
நெருக்கமான
அரசியல்
உறவைக்
கொண்டிருந்த
விமல் வீரவன்ச, உதய
கம்பன்
பில
ஆகியோர் பஷிலின் அரசியல்
வருகைக்குப்
பின்னர்
அரசாங்கத்தை
மிக மோசமக விமர்சிக்கத்தொடங்கினர். அரசாங்கத்தின் அமைச்சர்கள் நிதி அமைசரை விமர்சித்ததை
ஜ்னாதிபதி
ரசிக்கவில்லை.
அவர்களின்
அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டது. தங்களைப்
பற்றி
நன்கு தெரிந்த மகிந்த இருப்பதால் அமைச்சுப்
பதவியில்
ஜனாதிபதி
கைவைக்க
மாட்டார்
என
நம்பியவர்களின்
நம்பிக்கை
பொய்த்தது.
இது மற்றவர்களுக்கு விடுக்கப்பட்ட
எச்சரிக்கையாகவும்
கருதப்படுகிறது.
இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்னால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து இலங்கை அரசுக்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத்தையவர் விமல் வீசவன்ச. அன்றைய அரசாங்கத்துக்கு அவர் தேவையாக இருந்தார். விமலின் உதவி தேவை இல்லை என இன்றைய அரசாங்கம் கருதுகிறது.
இதேவேளை, நேற்று (7) தெரிவித்ததாவது,
அரசாங்கத்தின்
அங்கம்
வகிக்கும்
11 கட்சிகள்
நாட்டை
"சரியான
பாதையில்"
கொண்டு
செல்ல
தனியான
வேலைத்திட்டத்தை
அண்மையில்
ஆரம்பித்துள்ளன.
நிலவும்
பொருளாதார
நெருக்கடிக்கான
தீர்வுகளாகக்
கருதப்படும்
முன்மொழிவுகளை
முன்வைத்து,
தொடர்ந்து
இணைந்து
பணியாற்றுவதற்கு
உடன்பாடு
எட்டப்பட்டுள்ளதாக
லங்கா
சமசமாஜக்
கட்சியின்
தலைவரும்
ஸ்ரீலங்கா
பொதுஜன
பெரமுன
அரசாங்கத்தின்
பாராளுமன்ற
உறுப்பினருமான
பேராசிரியர்
திஸ்ஸ
விதாரண
தெரிவித்தார்..
ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சி
(SLFP), தேசிய சுதந்திர முன்னணி
(NFF), ஜனநாயக இடதுசாரி முன்னணி,
ஸ்ரீலங்கா
கம்யூனிஸ்ட்
கட்சி,
லங்கா
சமசமாஜக்
கட்சி,
பிவித்துரு
ஹெல
உறுமய
(PHU), தேசிய காங்கிரஸ், லங்கா மக்கள் கட்சி,
விஜய
தரணி
தேசிய
சபை,
ஐக்கிய
மக்கள்
கட்சி
மற்றும்
யுத்தகம
தேசிய
அமைப்பு ஆகிய 11 கட்சிகள் மார்ச் 6 ஆம்
திகதி
கூடி
தமது
எதிர்கால
திட்டங்கள்
குறித்து
கலந்துரையாடின.
“மார்ச் 6ஆம் திகதி பத்து
அங்கத்துவக்
கட்சிகளும்
ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சியும்
அரசியல்
பேச்சுக்களை
நடத்தியதுடன்,
நாங்கள்
தொடர்ந்து
இணைந்து
பணியாற்றுவோம்
என்று
ஒப்புக்கொண்டன.
இப்போதுதான்
ஒரு
மாற்றம்
நிகழ்ந்தது.
எங்களின்
முன்மொழிவுகளை
அரசு
செயல்படுத்த
வேண்டும்
என்பதே
எங்கள்
நோக்கம்.
அப்படி
நடந்தால்,
ஆட்சியில்
இருந்து
கொண்டு,
பொதுமக்கள்
பிரச்னைகளை
தீர்க்க
முடியும்.
ஆனால்,
பிரச்சினைகள்
இருப்பின்
அந்த
நேரத்தில்
மதிப்பீடு
செய்து
அதற்கேற்ப
முடிவுகளை
எடுக்க
வேண்டும்”
என
நேற்று
இடம்பெற்ற
ஊடகவியலாளர்
சந்திப்பில்
கலந்து
கொண்டு
உரையாற்றிய
பேராசிரியர்
விதாரண
தெரிவித்தார்
ஜனாதிபதி கோட்டபாயவையும், பிரதமர் மஹிந்தவையும் அரியணையில் ஏறுவதற்கு ஒன்றுகூடிய அரசியல் கட்சிகள் அவர்களை அரசில் இருந்து அகறுவதற்கு ஒன்றிணைகின்றன. தமக்கு விருப்பமானவர்களை அரியணையில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும் தமக்கு விருப்பம் இல்லை என்றால் அரியணையில் இருந்து குப்புற விழுத்த வேண்டும் என்ற கொள்கையுடன் செய்யும் அரசியலால் நாட்டுக்கு எந்த வித நன்மையும் ஏற்படப்போவதில்லை.
No comments:
Post a Comment