Sunday, March 20, 2022

நாட்டு மக்களுக்கு நற்செய்தி எப்போது வரும்?

'எனது செயல்களுக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் மற்றும் கடினமான முடிவுகளை எடுப்பதில் உறுதியாக இருக்கிறேன்'

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,

ரஷ்யஉக்ரைன் போருக்கு அடுத்ததாக இலங்கைப் பொருளாதாரச் சிக்கல்  உலகின் கவனத்தை ஈர்த்தது. அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு,உணவுப் பொருட்கள் கையிருப்பில் இல்லை, கட்டுப்படுத்த முடியாத விலை ஏற்றம்மின் வெட்டு , பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு, அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லைடொலர் விலை ஏற்றம்  போன்ற செய்திகள் பிரதான இடத்தைப் பிடித்தன.

உணவகங்கள், பேக்கரிகள்  மூட்டப்பட்ட செய்தி அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடித்தது.   இவற்றுக்கு முடிவு எப்போது வரும் எனத் தெரியாது மக்கள்  புலம்பினர்.

ஆட்சி செய்யும் அரசுக்குள்  குத்துப்பாடு. வாசு,விமல் வீரவன்ச, உதய கம்மன் பில மூவர் அணி பசிலுக்கு எதிரான  காய் நகர்த்தல். ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக அமைச்சர் பதவி பறிப்பு

இத்தனை பிரளயத்துக்கு மத்தியிலும் ஆட்சியைக் கைப்பற்ற சஜித் தனி துடிக்கிறதுஇவற்றினால் க்களின் பிரச்சினைகளுக்குத்  தீர்வு கிடைக்காது

நித்திரை விட்டெழுந்தால்  தட்டுப்பாடு, விலை ஏற்றம் என்ற செய்தியே முதலில் காதில் விழுகிறது. இவற்றுக்கு எப்போது முடிவு  வரும் எனக் கேட்டால் எவருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் ஜ்னாதிபதி கோட்டாபய நாட்டு மக்களுக்கு உரையாற்றப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி தனது உரையில்  தீர்வுக்கு வழி சொல்வார் என ஒரு சிலர் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். மின் வெட்டு காரணமாக ஜனாதிபதியின் பேச்சை சிலர் கேட்கவில்லை. நெருக்கடியான காலதில் நம்பிக்கையாக ஏதாவது கூறுவார் என்ற  எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணம் அந்நிய செலாவணி நெருக்கடியே என ஜனாதிபதி தெரிவித்தார்., 2022ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாக இருந்ததாகவும், இறக்குமதிச் செலவு 22 பில்லியன் டொலர்களாக இருப்பதால், 10 பில்லியன் டொலர் வர்த்தகப் பற்றாக்குறையை ஏற்படுத்தியிருக்கும் எனக் கூறினார். சுற்றுலாத்துறை, கவல் தொழில் நுட்பம், வெளிநாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களின் பணம்  போன்றவற்றால்  இலங்கைக்குக் கிடைக்க உள்ள பில்லியன் டொலர் கணக்கை வெளிப்படுத்தினார். கணக்குப் பார்க்க நல்லாகத்தான் இருக்கிறது. ஆனால்எதிர்பார்ப்பு நிறை வேறுமா  என்ற கேள்வி மனதுக்குள் குடைகிறது. 

எரிபொருள், எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம் உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பல இன்னல்களை தாம் உணர்ந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். உலகச் சந்தையில்  எரிபொருள் விலை  உயர்ந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனின்  கருத்து  வேறு விதமாக உள்ளது.

இலங்கையில் தற்போது வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.. இந்த பொருளாதார நெருக்கடி பற்றி எளிதாக சொல்ல வேண்டும் என்றால் பின்வருமாறு இரண்டு வரிகளில் சொல்லிவிடலாம்.டொலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 75.87.. தற்போது போர் காரணமாக பொருளாதார தடையை எதிர்கொண்டு இருக்கும் ரஷ்யாவின் ருபேல் மதிப்பு 104. ஆனால் எந்த போரையும், உள்நாட்டு மோதலையும் எதிர்கொள்ளாத இலங்கை ரூபாயின் மதிப்பு 264.44 என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.

இந்த நெருக்கடி தனனால் உருவாக்கப்படவில்லை என வலியுறுத்திய அவர், இந்த நெருக்கடியை உருவாக்குவதற்கு காரணமானவர்கள் இன்று அரசாங்கத்தை மக்கள் முன்னிலையில் விமர்சிக்கும் போது, இந்த நெருக்கடியை உடனடியாக தீர்த்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முயற்சிக்கிறார். .

உலகில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள ஒரே நாடு நமது நாடு அல்ல. முழு உலகமும் பல்வேறு இன்னல்களால் சூழப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்படும் அதிகரித்து வரும் கப்பல் செலவுகள், பொருட்களின் விலை உயர்வு மற்றும் சில பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. எவ்வாறாயினும், நாங்கள் மக்களின் நலனுக்காக சலுகை முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

எனவே, மக்கள் சார்பாக தாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் நம்பிக்கை வைப்பதாகக் கோரிய அவர், அண்மையில் நியமிக்கப்பட்ட தேசியப் பொருளாதாரக் குழுவும் அதன் ஆலோசனைக் குழுவும் தான் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்துகிறதா என்பதைக் கண்காணிப்பதாகவும் உறுதியளித்தார். "நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன். இன்று மக்கள் அனுபவிக்கும் அசௌகரியங்களுக்கு தீர்வு காண கடுமையான முடிவுகளை எடுப்பதில் உறுதியாக உள்ளேன்.

வர்த்தகப் பற்றாக்குறையை நிரப்பவும், அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, சர்வதேச நிதி நிறுவனங்களுடனும், நட்பு நாடுகளுடனும் கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக விவாதங்களை ஆரம்பித்துள்ளோம். எமது நாட்டுக்கு நன்மை பயக்கும் புதிய வழிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றதுஎன ஜனாதிபதி  நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்து தட்டுப்பாடின்றி கிடைப்பது எப்போது என்ற ஒற்றைக் கேள்விகு விடை தேடிய அப்பாவிப் பொது மகனின் கேள்விக்கு ஜனாதிபதியிடம் இருந்து பதில் வரவில்லை.  ஜனாதிபதியின் உரையை இலங்கையின் எதிர்க் கட்சித் தலைவர்கள்   காரசாரமாக விமர்சனம்செய்கின்றனர்.

இலங்கையில் இப்படி ஒரு இக்கட்டான நிலை ஏற்படும் என 18 மாதங்களுக்கு முன்பே  பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர்  அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் ஓரளவு நிமிர்ந்திருக்கலாம்.

மக்களின் அன்றாட வாழ்க்கையை சீரமைப்பதற்குரிய வழி முறைகளை நடை முறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமை.


No comments: